Sunday, April 18, 2021

மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்த ஹைதராபாத்

சென்னையில் நடைபெற்ற 14-வது .பி.எல். கிரிக்கெட் தொடரின்,    9-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  மும்பை ப்டன் ரோஹித் அதிசயமாக துடுபாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். மும்பையில்  ஜென்சன் வெளியேற்றப்பட்டு    மில்னே அணிக்குள் சேர்க்கப்பட்டார். தொரர் தோல்விகளால் துவண்டிருந்த ஹைதராபாத்  ஹோல்டரையும் நடராஜனையும் சாஹாவையும் சபாஸ் நதீமையும் வெளியேற்றி விட்டு   முஜீப், விராட் சிங், கலீல் அகமது, அபிஷேக் சர்மா நால்வரும் விலையாடு அணியில் சேர்க்கப்பட்டனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தது. 151 ஓட்டங்கள் எனும்    வெற்றி   இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்கள் எடுத்து 13 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.

ரோகித் சர்மா 32, சூர்யகுமார் யாதவ் 10  குவிண்டன் டிகாக் 40 ஓட்டங்களில் வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் பொல்லார்ட் 3 சிக்சர், 1 பவுண்டரியுடன் 35 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தது.

ஹைதராபாத் சார்பில் முஜீப், விஜயசங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், கலீல் அகமது 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி களமிறங்கியது. இலகுவான ஓட்ட எண்ணிக்கையை ஹைதராபாத் எட்டிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

  டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ்  ஆகியோர்  தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 67 ஓட்ங்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய மணீஷ் பாண்டே 2 , வார்னர் 36  , விராட் சிங் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரில் 2 விக்கெட்கள்  வீழ்ந்தன. அதிரடியாக ஆடிய விஜயசங்கர் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.இறுதியில், ஐதராபாத் அணி சகல விக்கெட்களையும்  இழந்து137 ஓட்டங்கள் எடுத்தது  மும்பை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது.

மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இறுதியில், ஐதராபாத் அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது.

மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேநேரம், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3-வது தோல்வியைச் சந்தி்த்துள்ளது. குறைந்த ஓட்டங்களை விரட்டி வெற்றி பெறமுடியாது தோல்வியடைந்தது.

  இதற்கு முன் கடந்த இரு போட்டிகளிலும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி இரு முறை நாணயச்சுழற்சியில் வென்று பந்துவீச்சைத் தேர்வுசெய்து குறைந்த ஓட்ட எண்ணிக்கையை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.  ஆர்சிபி அணிக்கு எதிராக 149 ஓட்டங்களை விரட்டமுடியாமல் 6 ஓட்டங்களில் தோற்றது, கொல்கத்தா அணிக்கு எதிராக 187 ஓட்டங்களை சேஸிங் செய்துவிரட்டி 10 ஓட்டங்களில் தோற்றது. இந்த முறையும் 150 ஓட்டங்கலை விரட்ட முடியாமல் தோல்வி அடைந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் 35 ஓட்டங்களையும், பந்துவீச்சில் இரு முக்கியமான ஓவர்களையும் வீசிய கெய்ரன் பொலார்ட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

No comments: