மும்பை வான்கடே மைதானத்தில்நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற டெல்லி அணியின் புதிய கப்டன் ரிஷாப் பண்ட் முதலில் சென்னை அணியைதுடுப்பாடப் பணித்தார்.சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது.189 ஓட்டங்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய டெல்லி கபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 8 பந்துகள் மீதமிருக்கையில் 190 ஓட்டங்ககள் அடித்து 7 விக்கெட்டில் வென்றது.
சென்னை முதலில் இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் அதிரடியாக விளையாடியது. தவண், பிரித்வி ஷா ஆகியோரின் அசுரத்தனமான துடுப்பாட்டத்தால் டெல்லி வெற்றி பெற்றது.
பாப்
டு பிளிஸ்சிஸ்சும், ருதுராஜ் கெய்க்வாட்டும் களம் இறங்கினர். சென்னையின் தொடக்கம்
திருப்திகரமாக அமையவில்லை. பிளிஸ்சிஸ் வேகப்பந்து
வீச்சாளர் அவேஷ் கானின் பந்துவீச்சில்
ஓட்டம் எடுக்காது எல்.பி.டபிள்யூ
முறையில் ஆட்டமிழந்தார். முந்தைய சீசனில் கடைசி
3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்த ருதுராஜ்
கெய்க்வாட் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மூன்றாவது விக்கெட்டில் இணைந்த மொயீன் அலியும், சுரேஷ் ரெய்னாவும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோரின்
சுழற்பந்து வீச்சை இருவரும் குறிவைத்து
விளையாடினர். அஸ்வினின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்
விரட்டிய மொயீன் அலி (36 ஓட்டங்கள்,
24 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்த பந்தை ரிவர்ஸ்
ஸ்வீப் செய்ய முயற்சித்து தவானிடம்
பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து களம் இறங்கிய அம்பத்தி
ராயுடும் மிடில் ஓவர்களில் ரெய்னாவுக்கு
நன்கு ஒத்துழைப்பு தந்தார். சென்னை அணி 12.1 ஓவர்களில்
100 ஓட்டங்களை எடுத்தது.
கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரை தவற விட்ட ரெய்னா இந்த சீசனில் முதல் ஆட்டத்திலேயே அமர்க்களப்படுத்தி விட்டார். 32 பந்துகளில் தனது 39-வது அரைசதத்தை நிறைவு செய்தார். அம்பத்திராயுடு 23 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓட்டம் எடுக்க ஓடிய ரெய்னா பந்துவீச்சாளருடன் மோதியதால் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 36 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரெய்னா 3 பவுண்டரி 4 சிக்ஸர் அடங்கலாக 54 ஓட்டங்கள் எடுத்தார் இந்த சீசனில் அரை சதம் கடந்த முதல் வீரர் ரெய்னா.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட கப்டன் டோனி . அவேஷ்கானின் பந்து வீச்சில் ஓட்டம் எடுக்காது ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோர் கூட்டணி போட்டு ஓட்ட வேகத்தை சரியவிடாமல் பார்த்துக் கொண்டனர். 19-வது ஓவரை வீசிய டாம் கர்ரனின் பந்து வீச்சில் சாம் கர்ரன் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் தெறிக்க விட்டார். சாம் கர்ரனின் அண்ணன் தான் டாம் கர்ரன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி பந்தில் சாம் கர்ரன் (34 ஓட்டங்கள், 15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட்டை பரிகொடுத்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் குவித்தது. ஜடேஜா 26 ஓட்டங்களுடன் (17 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். டெல்லி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், அவேஷ்கான் தலா 2 விக்கெட்டுகளையும்,, அஸ்வின், டாம் கர்ரன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
189ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் மின்னல் வேகத்தில் பதிலடி கொடுத்தனர். சென்னை பந்து வீச்சை சிரமின்றி எதிர்கொண்டனர்.‘பவர்-பிளே’ யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 65 ஓட்டங்கள் எடுத்தனர். 39 மற்றும் 47 ஓட்டங்களில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த பிரித்வி ஷா அரைசதம் அடித்தார். தவான் தனது 42-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
முதல்
விக்கெட்டுக்கு 138 ஓட்டங்கள் சேகரித்த இந்த ஜோடியை வெய்ன் பிராவோ பிரித்தார்.
பிரித்வி ஷா 72ஓட்டங்களில் (38 பந்து,
9 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார்.
தவான் தனது பங்குக்கு 85 ஓட்டங்கள் (54 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்து எல்.பி.டபிள்யூ.வில் ஆட்டமிழந்தார். ஆனாலும் டெல்லியின் வெற்றிப்பயணத்துக்கு ஆபத்தில்லை. அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 14 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார்.
டெல்லி அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 190 ஓட்டங்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கப்டன் ரிஷாப் பண்ட் 15 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். ஷிகர் தவாணுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பீல்டிங்கில் 3 கேட்சுகளையும் தவண் பிடித்தார்.
No comments:
Post a Comment