மும்பை
இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடிய
ரோயல் சலஞ்ச் பெங்களூர் வெற்றி
பெற காரணமான ஹர்ஷல் படேல்
அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு
முதல் 2018 ஆம் ஆண்டு வரை
பெங்களூர் அணியில் விளையாடிய ஹர்ஷல்
படேல் 17 விக்கெற்களை வீழ்த்தியுள்ளார். அப்போது
முக்கிய வீரராக அவர் இருக்கவில்லை. 2018 ஆம்
ஆண்டு பெங்களூர் அவரை விடுவித்தது.
அடுத்த ஏலத்தில் ஹர்ஷல் படேலை டெல்லி வாங்கியது. அங்கும் அவர் வேணடாத விருந்தாளியாக இருந்தார்.இந்த ஆண்டு ஏலத்தில் ட்ரேடிங் முறையில் இருபது இலட்சம் ரூபா கொடுத்து ஹர்ஷல் படேலை பெங்களூர் வாங்கியது. ஆடும் அணியில் படேல் விளையாடுவது சந்தேகமாக இருந்தது.
பெங்களூர்
வீரர் ஷைனி காயமடைந்ததால்
படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடிய
ஹர்ஷல் படேலுக்கு எட்டாவது ஓவரை வீச கோலி
சந்தர்ப்பம் வழங்கினார்.
முதல்
பந்தை நோ போலாக வீசினார்.
முதல் ஓவரில் 15 ஓட்டங்கள் கொடுத்தார். 16 ஆவது ஓவர் ஹர்ஷல்
படேலுக்கு வழங்கப்பட்டது. அப்போது இஷான்கிஷானும், ஹர்திக்
பாண்டையாவும் அதிரடியாக
களத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஐந்தாவது
பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பாண்டையா ஆறாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
18 ஆவது ஓவரில் இஷான் கிஷானும், 20 ஆவது ஓவரில் குர்ணாலும், பொலாட்டும் ஹர்ஷல் படேலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
2019 ஆம் ஆண்டு
ரஞ்சி போட்டியில் 52 விக்கெற்களை வீழ்த்தினார்.ரஞ்சியில் 200 விக்கெற்களை வீழ்த்தினார். சையத் முஷ்டாக் அலி
போட்டியில் பந்துவீச்சு துடுப்பாட்டம் ஆகியவற்றில் கலக்கினார்.
கடந்த எட்டு ஐ.பி.எல் சீசன்களில் கண்டுகொள்ளப்படாத படேல் ஒரு போட்டியில் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.
No comments:
Post a Comment