மும்பையில் நடந்த ஐபிஎல்
ரி20 போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்
18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற
கொல்கத்தா கப்டன் மோர்கன்களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்கள் சேர்த்தது. 221 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 202 ஓட்டங்கள் எடுத்து 18 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.
டுபிளஸிஸ்,
ருதுஜாஜ் கெய்க்வாட் ஆகியோரின் பொறுப்பான ஆட்டமும் அடுத்து களம் இறங்கிய
வீரர்களின் அதிரடியும் சென்னை சென்னையின் ஓட்ட
எண்ணிக்கையை 200 ஆக்கியது.தீபக் சஹரின் அற்புத
மான பந்து வீச்சால் கொல்கட்டாவின்
முக் கிய நான்கு வீரர்கள்
ஆட்டமிழந்தனர். கொல்கத்தா 100 ஓட்டங்களை
எட்டுமா என எதிர்பார்த்த வேளையில்
ரஸல், கார்த்திக், கம்மின்ஸ் ஆகியோரின் அதிரடியால் சென்னைக்கு தோல்விப் பயத்தைக்
காட்டியது கொல்கத்தா.
ருதுராஜ் கெய்க்வாட்,பாப் டு பிளிஸ்சிஸ் ஜோடி களம் இறங்கியது. சென்னையின் கண்டமான முதலாவது பவர் பிளேயையும் தான்டி இந்த ஜோடி அசத்தியது. 10 ஆவ்து ஓவரில் இந்த ஜோடி 82 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை 115 ஓட்டங்கள் எடுத்தபோது முதலாவது விக்கெட்டை இழந்தது. ருதுராஜ் 42 பந்துகளில் 64ஓட்டங்கள், மொயின் 12 பந்துகளில் 25 ஓட்டங்கள்,மொயி அலிக்குப் பின்னர் ரெய்னா வருவார் என எதிர் பார்த்தபோ டோனி களம் இறங்கினார். 8 பந்துகளில் 17 ஓட்டங்கள் , டுபிளஸிஸ் ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 95 ஓட்டங்கள். 20 ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ஜடேஜா சிக்ஸ் அடித்து சென்னையின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 42 ஓட்டங்கள் அடித்தபோது லுங்கி இங்கிடி பந்துவீச்சில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஆண்ட்ரே ரசல், 3 பவுண்டரிகள், 6 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். 22 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்த அவர், சாம் கர்ரனின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
கொல்கத்தாவின்
கதை முடிந்தது என நினைத்திருந்த வேளையில்
நான் இருக்கிரேன் என பாட் கம்மின்ஸ்
சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும்
சிதறவிட்டார். 34 பந்துகளில் 4 பவுண்டரிகள், மற்றும் 6 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் 66 ஓட்டங்கள் குவித்து
இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில்
இருந்தார்.
இறுதியாக கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்கள் சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணி வீரர்களும் சேர்த்து இந்தப் போட்டியில் மொத்தம் 26 சிக்ஸர்களை விளாசியுள்ளனர், இதில் கொல்கத்தா வீரர்களான கம்மின்ஸ், ரஸல், கார்த்திக் 3 பேரும் சேர்ந்து 16 சிக்ஸர்களை பறக்கவிட்டனர். மொத்தம் 33 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. 60 பந்துகளில் 95 ஓட்டங்கள் (4சிக்ஸர்,9பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்த டூப்பிளசிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார. கடந்த 3 போட்டிகளில் 15 ஓட்டங்கள் அடித்த அணியில் இருந்து நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பை டோனி பொய்யாக்கினார்., தன் மீது சிஎஸ்கே அணி வைத்த நம்பிக்கையை காப்பாற்றி 42 பந்துகளில் 62 ஓட்டங்கள்(4சிக்ஸர்,6பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.
சாம்கரன்
4 ஓவர்களில் 58 ஓட்டங்களை கொடுத்தார்.. சிஎஸ்கே வரலாற்றிலேயே மோகித்
சர்மாவுக்குப் பின்னர் மோசமான
பந்துவீச்சு இதுவாகும். 2015 ஐபிஎல்
தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மோகித்
சர்மா 58 ஓட்டங்களை வழங்கி்னார்.
ஐபிஎல்
தொடரில் 150-வது வீரரை டோனி ஆட்டமிழக்கச்
செய்தார்.ஐபிஎல் தொடரில் சுனில்
நரேனின் பந்து வீச்சில் பவுண்டரி
அடித்ததில்லை. இந்தப் போட்டியில் ஒரு
பவுண்டரி அடித்து அசத்தினார். சுனில்
நரேனின் ஓவர்களில் 80 பந்துகளைச் சந்தித்த டோனி இரண்டு முறை
ஆட்டமிழந்து 39 ஓட்டங்களை மட்டுமே அடித்தார்.
8-வது வீரராக் களமிறங்கி அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் எனும் பெருமையை கம்மின்ஸ்(64)பெற்றார். இதற்கு முன் 2015ல் பஞ்சாப் அணிக்கு எதிராக ஹர்பஜன் சிங் 54 ஓட்டங்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது.இரு அணி வீரர்களும் இந்தப் போட்டியில் மொத்தம் 26 சிக்ஸர்களை விளாசியுள்ளனர், இதில் கொல்கத்தா வீரர்களான கம்மின்ஸ், ரஸல், கார்த்திக் 3 பேரும் சேர்ந்து 16 சிக்ஸர்களை பறக்கவிட்டனர். மொத்தம் 33 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.
இந்த
வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி
4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.
கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 3-வது
தோல்வியைச் சந்திக்கிறது, 4 போட்டிகளில் 3 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது.
மும்பை
வான்ஹடே மைதானத்தில் நடந்த ரி20 போட்டிகளில்
இதுவரை எந்த அணியும் 200 ஓட்டங்களை
விரட்டி வெற்ரி பெற்றதில்லை.
60 பந்துகளில் 95 ஓட்டங்கள் (4சிக்ஸர்,9பவுண்டரி) அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த டூப்பிளசிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
No comments:
Post a Comment