சென்னை
சேப்பாக்கத்தில் நடைபெற்ற 13 ஆவது
லீக்
போட்டியில் மும்பைக்கு எதிராக விளையாடிய டெல்லி
வெற்றி பெற்று மும்பையின் தொடர்
வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது.
கடந்த மூன்று போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை குறைந்த ஓட்டங்களைப் பெற்றது. ஆனாலும், மும்பையை எதிர்த்து விளையாடிய அணிகள் தோல்வியடைந்தன. குறைந்த ஓட்டன் எண்ணைக்கையில் எதிரணிகளை வீழ்த்தலாம் என்ற மும்பையின் அதீத நம்பிக்கை தகர்க்கப்பட்டது. மும்பைக்கு எதிராக தொடர்ந்து ஐந்து ளில்வியடைந்த டெல்லி வெற்றி பெற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்கள் அடித்தது. 138 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கபிடல்ஸ் அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டன் ரோஹித் சர்மா துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா-குவிண்டன் டிகாக் ஆகியோர் களம் இறங்கினர்.
மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் 2 ஒட்டங்கள் எடுத்த டிகாக் ஆட்டமிழந்தார். ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமா யாதவ் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மும்பை ரசிகர்கள் நம்பிக்கை வைத்த ரோஹித் சர்மா 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஹர்திக்
பாண்டியா(0), க்ருனால் பாண்டியா(1), பொல்லார்ட்(2) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால், அணியின் ஓட்ட விகிதம் வெகுவாக
குறைந்தது. 10 ஓவர்களில்
ஐந்து விக்கெட்களை இழந்த மும்பை 11 ஆவது
ஓவரில் ஆறாவது விக்கெட்டை இழந்தது.
இஷான் கிஷன் 26 ஓட்டங்கலில் ஆட்டமிழக்க மும்பையின்
துடுப்பாட்ட வரிசை ஓய்ந்தது. 20 ஓவர்கள்
முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை
இழந்து 137 ஓட்டங்கள் எடுத்தது.
138 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். ப்ரித்வீஷா 7 ஓட்டங்களில் வெளிளியேற ஸ்டீவ் ஸ்மித்துடன் ஷிகர் தவான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது.
45 ஓட்டங்கள்
அடித்த ஷிகர் தவான், ராகுல்
சாஹர் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பொல்லார்ட் வீசிய பந்தில் ஸ்டீவ்
ஸ்மித்(33) எல்.பி.டபில்யூ.
முறையில் வெளியேறினார். ரிஷப் பண்ட் 7 ஓட்டங்களில்
விக்கெட்டை பறிகொடுத்தார்.
டெல்லியின்
துடுப்பாட்ட வீரர்கள்
தொடர்ச்சியாக ஆட்டமிழக்க முமபி வென்று விடும்
என ரசிகர்கள் எதிர் பார்த்தனர். ஆனால், லலித்
யாதவ்-சிம்ரன் ஹெட்மேயர் ஜோடி
ஆட்டத்தின் போக்கை மாற்றி, டெல்லி
அணியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதியாக
டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்கள் சேர்த்தது. இதன் மூலம் டெல்லி
அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4 ஓவர்கள் வீசி 24 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள்(12டாட்பந்துகள்) வீழ்த்திய அமித் மிஸ்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 67 ஓட்டங்களில் ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்த மும்பை இந்தியன்ஸ், அடுத்த 17 ஓட்டங்களைச் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டுக்குப்பின் 12 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகளை மும்பை இந்தியன்ஸ் அணி இழப்பது இதுதான் முதல்முறை. கடைசி 13 ஓட்டங்ன்களுக்குள் 3 வி்க்கெட்டுகளையும் இழந்தது. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் மும்பை இந்தியன் அணியின் மோசமான விளையாட்டு இதுவாகும்.
முதல்
ஓவரில் 10 ஓட்டங்கள் கொடுத்த மிஸ்ரா, அடுத்தஓவரில் ரோஹித் சர்மா, பாண்டியா
என பெரிய விக்கெட்டுகளைச் சாய்த்தார்,
3-வது ஓவரில் பொலார்ட், 4-வது
ஓவரில் இஷாந் கிஷன் ஆகியோர்
மிஷ்ராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 7 முறை
மிஸ்ராவின் பந்துவீச்சில்
ரோஹித் ஆட்டமிழந்துள்ளார். வேறு எந்த பந்துவீச்சாளரிடமும்
இதுபோல் அதிகமாக ரோஹித்சர்மா ஆட்டமிழந்தது
இல்லை.
டெல்லி கபிடல்ஸ் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
No comments:
Post a Comment