Friday, April 2, 2021

ராசா எறிந்த கல்லை கையில் எடுத்த மோடி

தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரங்களில் தனி நபர் தாக்குதல்கள் எல்லை மீறுகின்றன. தனிநபர் தக்குதல்கள் இதற்கு முன்னரும் நடைபெற்றுள்ளன. தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த இக் காலத்தில்  அவை மிகப் பெரும்  பூதாகரமாக பரப்பப்படுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னணித் தலைவர்களில் ஒருவரான .ராசாவின் பேச்சு அவரை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.

பழனிச்சாமி முதலமைச்சரான  வழிமுரை தவறானது எனசொ சொல்லவந்த ராசா எடுதுக் காட்டிய உவமை தவறானது என குற்றம் சாட்டிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர்மீது குற்றம் சுமத்தியது. பாரதீய ஜனதாக் கட்சி  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின்  கள்ள உறவில் பிறந்த பதவி என ராசா கூறியதை அவருக்கு எதிரானவர்கள் தரம்தாழ்ந்த பேச்சு என்றார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியின் தலைவர்கள் எலோரும் சாராவின் மீது போர் தொடுத்தார்கள். மோடியும், அமித் ஷாவும் தமிழகத்தில் பிரசாரம் செய்தபோது ராசாவின் பேச்சை கண்டித்தார்கள். அவர்கள்  இருவரும் தமிழகத்தில் என்ன பேச வேன்டும் எனபதை அங்குள்ளவர்களே தயாரித்துக் கொடுத்தனர். "பட்டத்து இளவரசர்" என உதயநிதியை மோடி தூற்றினார். மோடியின் அரசியல் அனுபவத்தை விட உதயநிதியின் வயது குறைவானது. உதயநிதியை மோடி குறிவைத்ததற்கு உதயநிதியின் பேச்சை  மக்கள் ரசிக்கிறார்கள் என்பதே காரணம்.

தேர்தல் பரப்புரையின் போது செங்கல் ஒன்ரை கையில் தூக்கிப் பிடித்த உதயநிதி அம்மா இதென்ன தெரியுமா எனக் கேட்டார். செங்கல் என மக்கள் பதில் சொன்னார்கள். இல்லை இதுதான் மூன்று வருடங்களுக்கு முன்னர்  மதுரையில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை. அத்திவாரம் போட்ட  செங்கல் மட்டும்தான்  இருந்தது அதை நான்  எடுத்துவந்திட்டன் என்றார். அடுத்த கூட்டத்தில் உதயநிதி செங்கல்லை எடுத்ததும் மக்கள் ஆரவாரம் செய்து கைதட்டி எய்ம்ஸ் என்றார்கள் இதனை யாரோ மோடிக்குச் சொலிவிட்டார்கள். இதனால்தான் மோடி தனது உரையின் போது உதயநிதியை விமர்சித்தார். ஓபிஎஸ்சின் மகனான ரவீந்திரநாத் இளவரசனாக மோடியின் கண்களுக்குத் தெரியவில்லை.

ராசாவின் பேச்சால் மனம் நொந்த எடப்பாடி ஒரு கூட்டத்தில் நா தழுதழுத்து கண் கலங்கினார். அவரின் பேச்சுக்கு எதிர்ப்பலைகள் பலமானதால் அவர்  மன்னிப்புக் கேட்டார். ராசாவின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில்  முறைப்பாடு  செய்யப்பட்டது. புகார்  தொடர்பாக ராசா விளக்கம் கேட்டார். ராசாவுக்கு கால அவகாசம் கொடுக்காத தேர்தல் ஆணையம் இரண்டு நாட்கள் தேர்தல் பரப்ப்புரை செய்ய ராசாவுக்கு தடை விதித்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பரப்புரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது. அதனைத் தடுக்கவே இது போன்ற இடைஞ்சல்கள் கொடுக்கப்படுகின்றன.அரசியல் எதிரிகளை மோசமாகத் திட்டுவதும் தர்ம் தாழ்ந்த பேச்சுகளும் தமிழகத்துக்குப் புதிதல்ல. இது போன்ற பேச்சுகளைக் கேட்க கூட்டம் சேருவது வழமையானது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயனத்தை  ஆரம்பித்த நடிகர் ராதாரவி அங்கிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றார். பலகட்சிகளில் அரசியல் பயணம் செய்த ராதாரவி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் திரும்பினார். பெண்களை இழிவாகப் பேசியதால் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது பாரதீய ஜனதாக் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக வலம் வருகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நம்பிக்கைக்குரிய செந்தில் பாலாஜியை எதிர்த்துப் போட்டியிடும் பாரதீய ஜனதாக் கட்சி வேட்பாளர் அண்ணாமலை விடுத்த கொலை மிரட்டலை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.இனக்கு இன்னொரு முகம் இருக்கிறது நான் கர்நாடகராரன் என விடுத்த அறைகூவலை அவருடைய கட்சித்தலைவர்கள் ரசிக்கிறார்கள்.

இந்திரா காந்திக்கு எதிரான விமசனங்கள் இன்றும் தொடர்கின்றன. ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்குமான உறவு கொச்சைப் படுத்தப்படுகின்றன. 2011 ஆம் ஆன்டு தேர்தலின்போது கனிமொழியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறாகப் பேசினார். பாரதீய ஜனதாக் கட்சியின் பிரமுகரான எஸ்.வி சேகரின் பாலியல் பேச்சுகளுக்கு  அக் கட்சி தடை போடவில்லை.பதிரிகைத்துரையில் இருக்கும் பெண்களின் ஒழுக்கம் பற்றிமிக மோசமாகப் பேசினார்.அவருக்கு எதிராக பெண்கள் அமைப்புகளும் பத்திரிகைத்துறையில் இருப்பவர்களும் போராட்டங்கள் நடத்தினர். அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு வருடக்கண‌க்காக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் கள்ள உற‌வில் பிறந்த குழந்தை கனிமொழி என ஹெச்.ராஜா பேசியதற்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காங்கிரஸிலும், திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இருந்தபோது  நடிகை என்பதற்காக மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட குஷ்பு பாரதீய ஜனதாவில்  சேர்ந்ததும் புனிதமடைந்துவிட்டார்.

பெண்களின் இடுப்பைப்பற்றி லியோனி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெண்களைப் பற்றி இழிவாகப் பேச வேண்டாம் என  தலைவர் ஸ்டாலின் பொது மேடையில் சொலுமளவுக்கு பெண்கள் மீதான சொல்லம்புகள் இருக்கின்றன.

அரசியலில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளனர். அரசியல் மிக மோசமாகத் தாக்கப்பட்டவர் கலைஞர் கருணாநிதி, பெரியார் உயிரோடு இருக்கும்போது இவர்களிடம்  இருந்து தப்பிவிட்டார். அனால், அவரது சிலைகளின் மீது கிராமங்களில் தாக்குதல் நடைபெறுகிறது..பன்னீர்ச்செல்வம் ஆண்மையற்றவர் என பொது மேடையில் குருமூர்த்தி பொது மேடையில் பேசியபோது ஆண்களும் பெண்களும் கைதட்டி ரசித்தனர். அவர் மீதுயாரும் வழக்குப் போடவில்லை. அப்போது பழனிச்சாமிதா முதல்வர்.

என்னைப்பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. உனது பின் புலம் என்னவென்று தெரியாதா என ஆர்.ராசாவின் சாதியைக் குறிப்பிட்டு முதலமைச்சர் என தன்னைச் சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பேசியதை யாரும் கண்டிக்கவில்லை. பிரதமர் மோடியின் சாதியைக்  குறிப்பிட்டு அவர்டைய கட்சியைச் சேர்ந்த  சுப்பிரமணியன் சுவாமி பேசியதை யாரும் பெரிதாக எடுக்கவில்லை.

கொள்கைகள்,கோட்பாடுகள், சாதனைகள் அனைத்தையும் கடந்து பாலியல்ரீதியிலான பேச்சுகளும் சாதீய தாக்குதல்களும் மலிந்துபோயுள்ளன.

No comments: