ஐபிஎல்
வரலாற்றில் தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ரோயல்ஸ்
சலஞ்சஸ் பெங்களூர். இம்முறை தொடர்ந்து மூன்று
போட்டிகளிலும் வெற்றி பெற்று ரசிகர்களை
ஆச்சரியப்பட வைத்துள்ளது.கடந்த சீசன்களில் கடைசிஇடத்தில்
இருந்து முன்னேறுவதற்காகப் போராடிய பெங்களூர் இந்த
சீசனில் முதலிடத்தை கெட்டியாகப் பிடித்துள்ளது.
சென்னையில் நடந்த
ஐபிஎல் ரி20 போட்டியின் 10-வது
லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை
38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.ஏடி டிவில்லியர்ஸ்,
மேக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடி எதிரணியை திக்குமுக்காட
வைத்தது. பெங்களூர் அணியில் அடம்
ஷம்பா நீக்கப்பட்டுரஜத் படிதர் சேர்க்கப்பட்டார்.
முதலில் துடுப்படுத்தாடிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்கள் சேர்த்தது. 205 ஓட்டங்கள் அடிட்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய கொலக்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்கள் அடித்ததால் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆரம்பத்துடுப்பாட்ட
வீரராக களம் இறங்கிய விராட்
கோலி நிலைக்கவில்லை. 5 ஓட்டங்களில் வெளியேற அடுத்து
வந்த ராஜத் படிதார் 1 ஓட்டம்
எடுத்து ஆட்டமிழந்தார். 9 ஓட்டங்கள்
எடுத்த நிலாஇயில் பெங்களூரின் இரன்டு விக்கெட்கள் வீழ்ந்தன.
3-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல்லுடன் மேக்ஸ்வெல்
ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம் பெங்களூர்
ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 28 பந்துகளில் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். 11.1 ஓவர்களில்
95 ஓட்டங்கள் இருக்கும்போது 25 ஓட்டங்கள் அடித்த தேவ்தத்
படிக்கல் 25 ரன்னில்வெளியேறினார்.ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் 34 பந்துகளில்
60 ஓட்டங்கள் அடித்தனர்.
நான்காவது இனைப்பாட்டத்தில் மெக்ஸ்வெல்லுடன், டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். இவரும் எதிரனியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 49 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சஸர் அடங்கலாக 78 ஓட்டங்கள் எடுத்து மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் 27 பந்துகலில் அரைசதம் அடித்தார். 22 பந்துகளுக்கு முகம் கொடுத்த இந்த ஜோடி 33 ஓட்டங்கள் அடித்தது.
205 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், நிதிஷ் ராணா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிகப்பெரிய இலக்கு என்பதால் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி பதற்றத்தில் விக்கெட்களைப் பறிகொடுத்தனர்.
ராணா 11 பந்துகளில் 18 ஓட்டங்கள், ஷுப்மான் கில் 9 பந்துகளில் 21ஓட்டங்கள், ரிபாதி
20 பந்துகளில் 25, மோர்கன் 23 பந்துகளில்29 ஓட்டங்கள்,
அந்த்ரே ரஸல் 20 பந்துகளில் 31 ஓட்டங்கள்
எடுத்து வெளியேற கொல்கத்தா நைட்
ரைடர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் ஆர்சிபி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆர்சிபி
அணியின் ஜேமிசன் 3 விக்கெட்களையும் , சாஹல், ஹர்ஷல் பட்டேல்
ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
ஹ்தலைமையிலான பெங்களூர் அணிக்கு கிடைத்த 3-வது வெற்றியாகும், இதன் மூலம் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம், கொல்கத்தா அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி, இரு தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.
கிளென்
மேக்ஸ்வெல், தொடர்ந்து 2-வது அரைசதத்தை பதிவு
செய்தார்.ஏபி டிவ்லியர்ஸ் முதல்
அரை சதத்தை பதிவு செய்து
ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இருவரும் சேர்ந்து 18 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசினர்.
15-வது ஓவர் ஓவர் ஆர்சிபியின் ரன்ரேட் அடிப்படையில் 175 ஓட்டங்களுள்ளாகவே எடுக்க வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டது. ஆனால்,டிவில்லியர்ஸ் கடைசி 3 ஓவர்களில் கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்துக்கட்டினார்.
கடைசி 5 ஓவர்களில் மட்டும் 70 ஓட்டங்கள் அடிக்கப்பட்டது. அதிலும் ஏபிடி, ஜேமிஸன் இணைந்து கடைசி 3 ஓவர்களில் 56 ஓட்டங்கள் சேர்த்தனர். மேக்ஸ்வெல் ஒரேஞ்ச் தொப்பியை வைத்திருக்கிறார். ஹர்ஷல் படேல் பர்ப்பிள் கேப்பைதொப்பியை வைத்திருக்கிரார். ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
No comments:
Post a Comment