Saturday, April 10, 2021

மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் வென்றது பெங்களுர்

  மும்பை இந்தியன்ஸ்,  ரோயல் சலஞ் பெங்களூர் ஆகியவற்றுக்கிடையே  சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த சீசனின் முதலாவது ஐபிஎல் போட்டியில் இரண்டு விக்கெற்களால் பெங்களூர் வெற்றி பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடியமும்பை  அணி 20 ஓவர்களில் 9 வி்க்கெட்களை இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது. 160 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து கடைசிப்பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து வென்றது.

சென்னை சேப்பாக்கம் மும்பைக்கு சாதகமான மைதானம். சென்னை சூப்பர் கிங்ஸை சொந்த மைதானத்தில் வீழ்த்திய அணி மும்பை. ஆனாலும், ஐபிஎல் முதல் போட்டியில் தொடர்ந்து தோல்வியடைந்ததால் அந்த மோசமான சாதைனையில் இருந்து மும்பை மீளுமா என்ற சந்தேகம் இருந்தது சென்னையில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்த பெங்களூர் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெங்களூரின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தேவ்தத் படிக்கல் தேறிய போதிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரஜத் படிதர் அறிமுக வீரராக இடம் பிடித்தார். மும்பை அணியில் புதுமுக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆடும் அணியில் சேர்க்கப்பட்டார்.


மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்டன் ரோஹித் சர்மாவும், கிறிஸ் லின்னும் களம் புகுந்தனர். 19 ஓஆடங்கள் எடுத்தபோது ரோஹித் ரன் அவுட்டானார்..பி.எல்லில் 11 ஆவது முறை ரோஹித் ரன் அவுட்டானார்

  சூர்யகுமார் யாதவ் 31,  இஷான் கிஷன் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பையின் ஓட்ட எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்திய கிறிஸ் லின் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பண்டைய 31 ஓட்டங்களில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்களை இழந்து  159 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி 4 ஓவர்களில் 25 ஓட்டங்கள் மட்டுமே மும்பை சேர்த்தது. விராட் கோலி, முகமது சிராஜ் உள்பட நான்கு வீரர்கள் கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தனர். இல்லாவிட்டால் மும்பைக்கு இன்னும் சிக்கலாகியிருக்கும். பெங்களூரு தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்களில் 27 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும். அதேவேளை மும்பைக்கு எதிராக ஐந்து விக்கெட்களைஎடுத்த முதல் வீரரானார். ப்டன் விராட் கோலியுடன், வாஷிங்டன் சுந்தர் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் இறங்கினார். 2-வது பந்திலேயே ஸ்லிப்பில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த சுந்தர் 10 ஓட்டங்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய ரஜத் படிதர் 8 ஓட்டங்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.


விராட் கோலியும், கிளைன் மேக்ஸ்வெல்லும் ஜோடி சேர்ந்து ஓட்ட எண்ணிக்கையை சீராக உயர்த்தினர். 2.3 ஓவர்களில் பெங்களூர்

98 ஓட்டங்கள் எடுத்தபோது  33 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலி  பும்ராவின் பந்து வீச்சில் எல்.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேஸ்வெல் 33 ஓட்டக்களில் ஆட்டமிழக்க  பெங்களூரு அணிக்கு நெருக்கடி உண்டானது.

இதன் பின்னர் டிவில்லியர்ஸ் அதிரடி காட்டி அணியை நிமிர வைத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ஓட்டங்கள்  தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் வீசினார். இதில் முதல் 3 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. 4-வது பந்தில் இரண்டாவது  ஓட்டம் எடுக்க ஓடிய போது டிவில்லியர்ஸ் 48 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். (48 ஓட்டங்கள், 27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) டிவில்லியஸ் ஆட்டமிழந்ததும் பெங்களூர் ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர். இதையடுத்து 2 பந்துகளில் 2 ஓட்டங்கள் தேவையானது. 5-வது பந்தில் ஒரு ஓட்டம் வந்தது. தொடர்ந்து 6-வது பந்தில் ஹர்ஷல் பட்டேல் ஒரு ஓட்டம் எடுக்க பெங்களூரு அணிதிரில்வெற்றியை ருசித்தது.

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 160 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஆட்டநாயகன் விருது ஹர்சல் படேலுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 5 தோல்விகளை அடைந்த அணி எனும் அவப்பெயருக்கு பெங்களூர் அணி முற்றுப்புள்ளி வைத்தது. அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் தோற்போம் என்ற செண்டிமென்ட் தோல்வி 9-வது முறையாகத் தொடர்கிறது. ஆனால், முதல் போட்டியில் தோற்றபின்புதான் 5 முறை மும்பை சாம்பியன் பட்டம் வென்றதையும் மறந்துவிடக்கூடாது.

பெங்களூர் அணியின் வெற்ரிக்கு வெற்றிக்கு ஹர்சல் படேல்ஏபி டிவ்லிலயர்ஸ்  ஆகியோரே முகியமானவர்கள். தூண்களாக இருந்தனர். இவர்கள் இருவருமே கடந்த 2020ம் ஆண்டிலிருந்து இதுவரை எந்தவிதமான சர்வதேச போட்டிகளிலும், முதல்தரப்போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் களத்துக்கு வந்து சாதித்துள்ளனர்.

  ஷைனிக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஹர்சல் டேல் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். டெத் ஓவர்களில் மும்பை அணியின் துருப்பாட்டவரிசையை உலுக்கிவிட்டார். ஸ்லோ பவுன்ஸர், நக்குல் பால், கட்டர்ஸ் என பலவகைகளில் வீசி பாண்டியா சகோதரர்கள், பொலார்ட், இஷான் கிஷன், ஜான்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை படேல் வீழ்த்தினார்.

No comments: