நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது. 107 அனும் ஓட்ட எண்ணிக்கையுட களம் இறங்கிய சென்னை 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ஓட்டங்கள் எடுத்தது. நேற்று வரை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சென்னை ஒரு வெற்றியுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
முதல்
ஓவரிலேயே பஞ்சாப்பின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் ஓட்டமெடுக்காது தீபக் சாஹரின்
பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து தீபக் சாஹர் வீசிய 3வது ஓவரில் கே.எல்.ராகுல்,
5 ஓட்டங்களுடனும், கிறிஸ் கெய்ல் 10 ஓட்டங்களுடனும் வெளியேறினர். தீபக் ஹூடா(10), நிக்கோலஸ் பூரன்(0)
ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பஞ்சாப்பின
அதிரடி வீரர்கள் ஆட்டமிழக்க சாருக்கான் நிதானமாக
ஆடி பஞ்சாப் அணிக்கு சற்று ஆறுதல் அளித்தார். அரைசதத்தை நெருங்கிய சாருக்கான்(47),
சென்னை வீரர் சாம் கர்ரனின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களம் இறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேற பஞ்சாப்பின் ஓட்ட எண்ணிக்கை குறைந்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 106 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சாருக்கான் 47 ஓட்டங்கள் அடித்தார். ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 4 ஓவர்களில் 13 ஓட்டங்களைக் கொடுத்த தீபக் சாஹர்4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
107
ஓட்டங்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
சென்னையின்
தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 16 பந்துகளை சந்தித்து 5 ஓட்டங்கள் எடுத்திருந்த
நிலையில், விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து
டு ப்ளிசிஸ் உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். குறைவான இலக்கு என்பதால், சீரான இடைவெளியில்
பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு நிதானமான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர்.
முருகன் அஸ்வின் வீசிய 13 வது ஓவரில் மொயின் அலி(46) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 8 ஓட்டங்களில் வெளியேற, இறுதி வரை நிலைத்து நின்று ஆடிய டு ப்ளிசிஸ், அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து,
107 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது. டு ப்ளிசிஸ்(36), சாம் கர்ரன்(5) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப்
அணியில் முகமது சமி 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முதலாவதுபவர்
பிளேயில் பஞ்சாப்பின் முக்கிய விக்கெட்களை தீபக் சஹார் வீழ்த்தினார்.. சஹார் வீசிய
முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே மயங்க் அகர்வாலை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் கெய்ல்
தட்டிவிட்டு ஓட, கவர்ஸ் திசையில் நின்ற ஜடேஜா அதை அட்டகாசமாக பிடித்து விக்கெட்டை நோக்கி
எறியராகில் ரன் அவுட்டானார். பஞ்சாப் அணியின் ஓப்பனர்கள் இருவரையும் மூன்றாவது ஓவருக்குள்
வீழ்த்தி சென்னை அணி மிரட்டியது.
கெய்லுக்காக
மொயீன் அலியை டொனி அழைத்து வருவார் என எதிர்பார்க்க,சஹாரையே தொடர்ந்து வீச வைத்தார்டோனி. சஹார் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை கெய்ல் பவுண்டரிக்கு முயற்சி செய்து தட்டிவிட ஜடேஜா பாய்ந்து பிடித்து கெய்லை அவுட் ஆக்கினார். அடுத்து க்ரீஸுக்குள் வந்த நிக்கோலஸ் பூரனையும் இரண்டே பந்தில் வெளியேற்றினார் சஹார். முதல் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஷார்ட்டாக வீசிவிட்டு இரண்டாவது பந்தை லெக் ஸ்டம்ப் லைனில் ஷார்ட்டாக வீசுவார் சஹார். அந்தப் பந்தில் பெரிய ஷாட் முயன்று தூக்கியடித்து ஃபைன் லெக்கில் ஷர்துல் தாகூரிடம் பிடி கொடுத்து ஓட்டம் எடுக்காது வெளியேறினார் பூரன்.
பவர்ப்ளேக்குள்ளாகவே பஞ்சாப் அணியின் அபாயகரமான வீரர்கள் ஆட்டமிழந்தனர். சஹாரை ஒரேடியாக 4 ஓவர்களை வீச வைத்தார் டோனி. அந்த ஓவரிலும் தீபக் ஹூடாவின் விக்கெட்டை வீழ்த்தினார். முதல் 7 ஓவருக்குள்ளாகவே தனது 4 ஓவர் ஸ்பெல்லை முடித்திருந்தார் சஹார். இதில் மயங்க் அகர்வால், கெய்ல், பூரன், தீபக் ஹூடா என பஞ்சாபின் துடுப்பாட்ட வரிசை சாய்ந்தது. 4 ஓவர்களில் 18 டாட்களையும் வீசி தனது ஆகச்சிறந்த பந்து வீச்சை வெளிக்காட்டினார்.
No comments:
Post a Comment