Wednesday, April 14, 2021

கடைசி ஓவரில் வெற்றியை பறிகொடுத்த கொல்கத்தா

மும்பை, கொல்கத்தா ஆகியவற்றுக்கு இடையே  சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில்  10 ஓட்டங்களில் மும்பை வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா கப்டன் இயன் மோர்கன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக கிறிஸ் லின் நீக்கப்பட்டு குயின்டான் டி காக் சேர்க்கப்பட்டார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை20 ஓவர்களில்சகல விக்கெட்கலையும் இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்த கொல்கத்தா 142 ஓட்டங்கள் எடுத்து 10 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ப்டன் ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஜோடி நிலைக்கவில்லை.. 6 பந்துகளில் 2 ஓட்டங்கள் மட்டும் எடுத்த குயின்டன் டி காக், வருண் சக்ரவர்த்தி சுழலில் சிக்கினார். ரோகித்துடன் இணைந்தார் சூர்யகுமார் யாதவ். பிரசித் கிருஷ்ணா ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என அடுத்தடுத்து விளாசிய சூர்யகுமார், அரைசதம் கடந்தார்.56 ஓட்டங்கள் எடுத்த சூரியகுமார் யாதவ் சுப்மன் கில்லிடம் 'பிடி' கொடுத்து ஆட்டமிழந்தார்

 அடுத்து களம் இறங்கிய இஷான் கிஷானொரு ஓட்டத்துடன் வெளியேறினார்.பின் ரோகித்துடன் சேர்ந்தார் ஹர்திக் பாண்ட்யா. 43 ஓட்டங்கள் எடுத்த போது ரோஹித் கம்மின்ஸ் வேகத்தில் விக்கெட்டைப்பறிகொடுத்தார்.ஹர்திக் பாண்ட்யா 15 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தார்

  18வது, 20 ஆவது ஓவர்களி வீசிய ஓவரில் பந்து வீச வந்த ஆன்ட்ரி ரசல், மும்பை அணிக்கு வில்லனாக அமைந்தார். முதலில் அபாயகரமான பொலார்டை 5 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். அடுத்து வந்த  ஜான்செனை ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தார்

.ரசல் வீசிய கடைசி ஓவரில்குர்னால் பாண்ட்யா (15), பும்ரா (0), ராகுல் சகார் (8) என மூவருமாட்டமிழந்தனர். மும்பை அணி 20 ஓவர்கலில் சகல விக்கெட்களையும் இழந்து152 ஓட்டங்கள் எடுத்ததுகொல்கட்டாவின் ரசல் 5 விக்கெகளை வீழ்த்தினார்.

  கடைசி 5 ஓவர்களில் மும்பை அணி  7 விக்கெட்களை இழந்து 38 ஓட்டங்கள் எடுத்தது. கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல்-ஹசன், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

 பின்னர் 153 ஓட்டங்கள் எனும்  இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணிக்கு நிதிஷ் ராணாவும், சுப்மான் கில்லும் 72 ஓட்டங்கள் (8.5 ஓவர்) அடிட்து  வலுவான அடித்தளம் அமைத்து தந்தனர். ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தடாலடியாக மாறியது. சுப்மான் கில் 33 ஓட்டங்களிலும் (24 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிதிஷ் ராணா 57 ஓட்டங்களிலும் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ராகுல் சாஹரின் சுழற்பந்து வீச்சுக்கு இரையானார்கள்.

 திரிபாதி (5 ), கேப்டன் மோர்கன் (7 ), ஷகிப் அல்-ஹசன் (9 ) ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

கடைசி ஓவரில் அந்த   வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதிரடி சூரர்கள் தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸ்செல் களத்தில் இருந்தனர். பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசினார். அட்டகாசமாக பந்து வீசிய பவுல்ட், ரஸ்செல் (9  ), அடுத்து வந்த கம்மின்ஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் எடுத்தது.

கொல்கத்தாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் மும்பை அணி அந்த அணிக்கு எதிராக ஒட்டுமொத்தத்தில் பெற்ற 22-வது வெற்றி இதுவாகும். தொடர்ச்சியாக11 போட்டிகளில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில்  கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் ஆந்த்ரே ரஸ்செல் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். ஆட்டத்தின் 18-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 20-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை அறுவடை செய்தார். 15 ஓட்டங்களுக்கு னுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய  ரஸ்செலுக்கு இதுவே 20 ஓவர் போட்டியில் சிறந்த பந்து வீச்சாகும்.

முதல் 13 .பி.எல். போட்டித் தொடர்களில் மும்பைக்கு எதிராக எந்த வீரரும் இன்னிங்சில் 5 விக்கெட்களை வீழ்த்தியதில்லை. ஆனால் இந்த சீசனில் மும்பைக்கு எதிரான முதல் 2 ஆட்டங்களில் இரண்டு வீரர்கள் தலா 5 விக்கெட்களை வீழ்த்தினர்.


 ஏற்கனவே மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 27 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மும்பைக்கு எதிராக சிறந்த பந்து வீச்சு, கொல்கத்தா பவுலரின் சிறந்தபந்து வீச்சு ஆகிய இருவித பெருமைகளையும் இப்போது 32 வயதான ஆந்த்ரே தன்வசப்படுத்தியுள்ளார்.


இந்தப் போட்டியின் 40 ஓவர்களில் 36 ஓவர்கள்வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், கடைசி 4 ஓவர்களில்தான் ஒட்டுமொத்த ஆட்டமும் தலைகீழாக மாறி, வெற்றியை மும்பை இந்தியன்ஸிடம் தாரை வார்த்தது.

கடைசி 5 ஓவர்களில் 100 ஓட்டங்களை அதிரடியாகக் குவிக்கும் மும்பை கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்கலில் 5 விக்கெட்களை இழந்து 38 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

No comments: