சதம் அடித்த சஞ்சு சம்சனின் வெறியை கடைசிப்பந்தில் தகர்த்த அர்தீப் சிங்.
மும்பையில்
நேற்று நடந்த ஐபிஎல் டி20
தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான்
ரோராயல்ஸ் அணியை 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது
பஞ்சாப் கிங்ஸ் அணி.
550 ஓட்டங்கள்,26 சிக்ஸர்கள்,
40 பவுண்டரிகள் ஒரு
சதம் என ரசிகர்கள் கொண்டாடி
மகிழ்ந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 4-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
நாணயச்
சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரோயல்ஸ் பந்து வீச்சை தேர்வு
செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின்
கேஎல் ராகுல், மயங்க் அகர்வால்
ஆகியோர் தொடக்க வீரர்களாக களம்
இறங்கினர்.
மயங்க்
அகர்வால் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கிறிஸ் கெய்ல் 28 பந்தில்
4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து
வந்த தீபக் ஹூடா ருத்ர
தாண்டவம் ஆட 28 பந்தில் 4 பவுண்டரி,
6 சிக்சருடன் 64 ஓட்டங்கள் எடுத்து
வெளியேறினார். இந்த ஜோடி 3-வது
விக்கெட்டுக்கு 105 ஓட்டங்கள் குவித்தது
பொறுப்புடன்
ஆடிய கேஎல் ராகுல் கடைசி
ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் 7 பவுண்டரி,
5 சிக்சருடன் 91 ஓட்டங்கள் அடித்தார்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் குவித்தது.ராஜஸ்தான் ரோயல்ஸ் சார்பில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்களும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
முதல்
ஓவரின் 3வது பந்தில் பென்
ஸ்டோக்ஸ் டக் அவுட்டானார். மனன்
வோரா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து
இறங்கிய கப்டன் சஞ்சு
சாம்சன் பொறுப்புடன் ஆடினார். ஜோஸ் பட்லர், ஷிவம்
டூபே ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
பட்லர் 25 ஓட்டங்களிலும், ஷிவம் டூபே 23 ஓட்டங்களிலும்
வெளியேறினர். ரியான் பராக் 11 பந்தில்
3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 25 ஓட்டங்களில்
ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் தனியாளாக போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயன்றார். கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான ரஓட்டங்களை எடுக்க திணறியது.
இறுதியில்,
ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ஓட்டங்கள் மட்டுமே
எடுத்தது. கப்டன் சஞ்சு சாம்சன் 119 ஓட்டங்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
அந்த அணியின் வெற்றி பறிபோனது. இதனால் பஞ்சாப் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில்
வெற்றி பெற்றது. சஞ்சு சாம்ஸன் ஐபிஎல் தொடரில் அடிக்கும் 3-வது சதம் இதுவாகும்.
முதல் 10 ஓவர்களில் 3 விக்கெகளை இழந்து 95 ஓட்டங்கள் அடித்த ராஜஸ்தான் அணி அடுத்த 10 ஓவர்களில் 122 ஓட்டங்கள் அடித்தது.
பஞ்சாப்
அணியின் ஓட்டவேகம் குறையாமல் ராஜஸ்தான் அணி பயணித்தது. 11 ஓவர்களில்
பஞ்சாப் அணி 100 ஓட்டங்களை எட்டியபோது,
ராஜஸ்தானும் அதே ஓவரில் எட்டியது.
18ஓவரில் பஞ்சாப் 200 ஓட்டங்களை எட்டியபோது,ராஜஸ்தானும் அதே
ஓவரில் 200 ஓட்டங்களை எட்டியது. 33 பந்துகளில்
அரைசதம் அடித்த சாம்ஸன், 54 பந்துகளில்
சதம் அடித்தார். அதாவது, அடுத்த 21 பந்துகளி்ல்
50 ஓட்டங்களை எட்டினார். சாம்ஸன்
12 ஓட்டங்கள் மற்றும் 35 ஓட்டங்களில் இரு கேட்ச் வாய்ப்புகளை
பஞ்சாப் வீணடித்தது.
கடைசி
2 ஓவர்களில் வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மெரிடித் வீசிய 19வது ஓவரில்
சாம்ஸன் 8 ஓட்டங்கள் மட்டுமே அடித்தார்.
கடைசி
ஓவரில் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் முதல்
பந்து வைடாகச் சென்றும் நடுவர்
வைட் கொடுக்கவில்லை. 2-வது பந்தில் சாம்ஸன்
ஒரு ஓட்டம் எடுக்க மோரிஸ்
பேட் செய்தார். மோரிஸ் ஒரு ஓட்டம்
எடுத்து,ஸ்ட்ரைக்கை மீண்டும் சாம்ஸனிடம் வழங்கினார். 4-வது பந்தில் சாம்ஸன்
ஆவுட்சைட் ஆஃபில் சிக்ஸர் அடிக்க
போட்டி விறுவிறுப்படைந்தது. 2 பந்தில் 5 ஓட்டங்கள் தேவை. 5-வது பந்தில்
சாம்ஸன் அடித்தபோதிலும் ஓட்டம் எடுக்கவி்ல்லை. கடைசிப்பந்தில்
டீப் கவரில் அடித்த ஷாட்டை
தீபக் ஹூடா கேட்ச் பிடிக்க ராஜஸ்தானின்
வெற்றி பறிபோனது.
ராஜஸ்தான் அணியின் இளம் பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா, பஞ்சாப் வீரர் அர்ஸ் தீப் சிங் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுமே நேற்று கவனத்தை ஈர்த்தனர். அதிலும் சேத்தன் சக்காரியாவுக்கு இது அறிமுகப் போட்டி என்று சொல்ல முடியாத அளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசினார். 4 ஓவர்களில் 31 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சக்காரியா 13 டாட் பந்துகளை வீசி திரும்பிப் பார்க்க வைத்தார், அற்புதமான கேட்சையும் பிடித்தார்.
முதல் சிக்சர் அடிக்கும்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 350-வது சிக்சரை பதிவு செய்தார். மொத்தமாக 351 சிக்சர்கள் அடித்துள்ளார். 2-வது இடத்தில் டி வில்லியர்ஸ் [237] , 3-வது இடத்தில் எம்எஸ் டோனி உள்ளனர்.[216]
No comments:
Post a Comment