Friday, April 9, 2021

சென்னையில் ரோஹித்தும் கோலியும் மோதும் முதல் போட்டி

சென்னை சேப்பாக்கம் எம்..சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோஹ்த் சர்மா தலைமையிலான மும்பை இ்ந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ரோயல் சேலஞ்சர்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

சென்னையில் நடந்த போட்டிகளில் மும்பை தோற்றதில்லை. முதல் போட்டியில் வென்றதில்லை என்பது பேங்களூருக்குச் சாதகமானது.

பந்துவீச்சு,துடுப்பாட்டம் ஆகியவற்றில்  மும்பை அணி வலுவாக இருந்தாலும் தங்களது தொடக்க போட்டியில் தோற்பது அந்த அணிக்கு வாடிக்கையாகும். 2013-ம் ஆண்டில் இருந்து அந்த அணி தொடர்ந்து 8 சீசனில் தங்களது முதல் போட்டியில் தோற்று வருகிறது.

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் சில தினங்களுக்கு முன்பு தான் மும்பை அணியுடன் இணைந்தார். 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் அவர் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. இதனால். விக்கெட் கீப்பிங் பணியை இஷான் கிஷன் கவனிப்பார். ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா சகோதரர்கள், பும்ரா, டிரென்ட் பவுல்ட் என்று நட்சத்திர பட்டாளத்துடன் களம் காணும் மும்பை அணி ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் ஆயத்தமாக உள்ளது.

இதுவரை பட்டம் வெல்லாத விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த சீசனில் அதிக தொகை கொடுத்து இரு வீரர்களை வாங்கியிருக்கிறது. ரூ.14¼ கோடிக்கு ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல்லையும், ரூ.15 கோடிக்கு நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கைல் ஜாமிசனையும் ஏலத்தில் எடுத்துள்ளனர். ஏற்கனவே அதிரடி வேட்டைக்கு டிவில்லியர்சும் காத்திருக்கிறார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கி விட்டதால் ஆடும் அணியில்இடம் பெற வாய்ப்புள்ளது.பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், நவ்தீப் சைனி உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

சென்னை ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழற்பந்து வீச்சின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும்.மொத்தத்தில் சவால்மிக்க இரு அணிகள் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டம் ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 ஆட்டங்களில்

நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் பெங்களூருவும், 17-ல் மும்பையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம்டைஆனது

No comments: