Tuesday, April 20, 2021

மும்பையில் கொடிநாட்டிய சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகியவற்றுக்கிடையே முமபையில் நடைபெற்ற  12 ஆவது லீக் போட்டியில்  45 ஓட்டங்களால் சென்னை வெற்றி பெற்றது.  நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணித்தலைவர் சஞ்சு சாம்ஸன் கலத்தடுப்பைத் தேர்வு செய்ததும் ராஜஸ்தான்  ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மும்பையில் நடைபெறும் ஐபிஎல் சீசனில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகள்  வெற்றி பெறவில்லை. தவிர மும்பையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முதலில் பந்துவீசிய சென்னை வெற்றியைப் பதிவு செய்யவில்லை. ஆனால், அந்த  வரலாற்றை சென்னை மாற்றியமைத்தது. சென்னை அணிக்காக டோனி விளையாடும் 201 ஆவது போட்டி. சென்னை அணியின் கப்டனாக 200 ஆவது  போட்டியில் களம் இறங்கிய டோனி 121 ஆவது வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

முதலில்  துடுப்பெடுத்தாடியசென்னை 20 ஓவர்களில் 9 வி்க்கெட்களை இழந்து 188 ஓட்டங்கள் எடுத்தது. 189 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஒவர்களில் 9 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னையின் டுபிளசி, ருதுராஜ் ஜோடி துவக்க வீரர்களாகக் களம் புகுந்தனர். முதல் இரண்டு போட்டிகளிலும் ஏமாற்ரிய ருதுராஜ் மூன்றாவது போட்டியிலும்  10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.


டு பிளிஸ்சிஸ் 33, மொயீன் அலி 26 ,ரெய்னா 18, அம்பதி ராயுடு 27, டோனி  18), சாம் கர்ரன், 13, பிராவோ ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்கள்  அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்கள் குவித்தது.ராஜஸ்தான் ரோராயல்ஸ் அணி சார்பில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்களையும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்இதைத்தொடர்ந்து, 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ரோயல்ஸ் களமிறங்கியது.

ஆனால் சென்னை அணியினர் நேர்த்தியாக பந்து வீசி அசத்தினர். அதனால் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் விழுந்தன.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் மட்டும் பொறுப்புடன் ஆடி 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.. மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.


கடைசி கட்டத்தில் ராகுல் டெவாட்டியாவும், ஜெய்தேவ் உனத்கட்டும் போராடினர். இருவரும் இணைந்து 42 ஓட்டங்கள் சேர்த்தனர். டெவாட்டியா 20,  உனத்கட் 24 ஓட்டங்களில் வெளியேறினார்இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 143 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது சென்னை அணியின் 2வது வெற்றி ஆகும்.


 சென்னை அணி சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்களும், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஷர்துல் தாக்குர், பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர் .

இரண்டு அணி வீரர்களில் யாரும் அரைச் சதம் அடிக்கவில்லை. சென்னையி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும்  ஓட்ட சதவிகிதம் குறைவடையவில்லை. அனைத்து வீரர்களும் குறைந்த பந்துகளில் கூடிய ஓட்டங்கலை அடித்து 188 ஓட்ட எண்ணிக்கைக்கு வழி வகுத்தனர்.

பத்து ஓவர் இறுதியில் இரண்டு விக்கெட்களை இழந்த ராஜஸ்தான் 81 ஓட்டங்கள் அடித்திருந்தது. . 17 ஓவர் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது ராஜஸ்தான். அதிலும் 12ம் ஓவரிலிருந்த விழுந்த ஐந்து விக்கெட்களுமே ஸ்பின் சுழலுக்குப் பலியானவை.


இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் 2 தோல்விகள், ஒரு வெற்றியுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. மொயின் கடைசியாக வீசிய 9 பந்துகளில்  3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிஎஸ்கே வரலாற்றிலேயே எந்த சுழற்பந்துவீச்சாளரும் இதுபோன்று 3 விக்கெட்டுகளை இதுபோன்று விரைவாக வீழ்த்தியது இல்லை.

முக்கிய வீரர்களானமோரிஸ், ரியான் பராக், மில்லர் என அனைவருமே விரைவாக விக்கெட்களை இழந்தது தோல்வியை உறுதி செய்தது. 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 8 ஓட்டங்களைச் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. திவேட்டியா, உனத்கட் மட்டுமே தோல்விதான் வரப்போகிறது எனத் தெரிந்தும் கடைசிவரை போராடினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் 2 தோல்விகள், ஒரு வெற்றியுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. மொயின் கடைசியாக வீசிய 9 பந்துகளில்  3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிஎஸ்கே வரலாற்றிலேயே எந்த சுழற்பந்துவீச்சாளரும் இதுபோன்று 3 விக்கெட்டுகளை இதுபோன்று விரைவாக வீழ்த்தியது இல்லை.

முக்கிய வீரர்களானமோரிஸ், ரியான் பராக், மில்லர் என அனைவருமே விரைவாக விக்கெட்களை இழந்தது தோல்வியை உறுதி செய்தது. 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 8 ஓட்டங்களைச் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. திவேட்டியா, உனத்கட் மட்டுமே தோல்விதான் வரப்போகிறது எனத் தெரிந்தும் கடைசிவரை போராடினார்கள். ஜடேஜா வின் 4 பிடிகள் ராஜஸ்தானை உலுக்கியது. எங்கே அடித்தாலும் அங்கே ஜஜேடா நின்றார். மொயின் அலி ஆட்ட நாயகாகன் விருது பெற்றார்.

No comments: