ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெருமளவு தடுமாறி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எப்போதுமே சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து விடும். ஆனால் இந்த சீசனில் சிஎஸ்கே அணி பத்து போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி என பத்து புள்ளிகளுடன் தற்போது நான்காவது இடத்தில் நீடிக்கிறது. எஞ்சி இருக்கும் நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். சென்னை அணியில் உள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் பலரும் விலகி இருப்பது தற்போது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக ஐபிஎல் வீட்டு சென்று விட்டார். அவர் மீண்டும் இந்த சீசனில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போல் சிஎஸ்கே அணியில் உள்ள அனுபவமிக்க இந்திய வேக பந்துவீச்சாளரான தீபக்சாகருக்கு பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மீண்டும் நடப்பு சீசனில் விளையாடுவது சந்தேகமாகிவிட்டது. இதேபோன்று சிஎஸ்கே அணியில் உள்ள வேகப்பந்துவீச்சாளர் துசார் தேஷ் பாண்டே கடந்த சில போட்டிகளில் நன்றாக விளையாடி வந்த நிலையில் தற்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என தெரியவில்லை. இதேபோன்று சிஎஸ்கே அணியில் உள்ள நட்சத்திர வேகபந்துவீச்சாளர், பதிரானா தற்போது ரி20 உலக கோப்பைக்கு விசா பெறுவதற்காக இலங்கை சென்று உள்ளார். அதனால் அவரும் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
சென்னை அணியில் பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த அணி நிர்வாகம் தடுமாறி வருகிறது. இதனால் இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment