Saturday, August 8, 2026

ஜனநாயகனா? மாமன்னனா? அதிருது தமிழக அர‌சியல்களம்

நள்ளிரவில் கைது திட்டம்

காலை 6.30 மணி முற்றுகை..

90 நிமிட விசாரணை

11.45 மணிக்கு கைது

350 கி.மீ வீதியால் பயணம்

3,000 பொலிஸார் குவிப்பு.

 8 மணிநேர அலைக்கழிப்பு

கருணாநிதி,  எம்.ஜி.ஆர் ‍ கருணாநிதி,  ஜெயலலிதா ‍- ‍ ஸ்டாலின்எடப்பாடி   ஸ்டாலின் , எடப்பாடி என இருந்த தமிழக அரசியல்களம் சட்டசபைத் தேர்தலின் பின்னர் ஸ்டாலின்விஜய் எனத் திரும்பியதுஉதயநிதி கைது செய்யப்பட்டதன் பின்னர் உதய்விஜய் என மாறிவிட்டது.

தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின்உதயநிதி ஆகிய  இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர் பார்ப்பு எகிறியதுதேர்தல் பரப்புரையின் போது ஆதவ் அர்ஜுனா செய்த சபதமும் அதற்கொரு  சான்றாகும்செந்திஅல் பாலாஜிஅனித ராதாகிருஷ்ணன்மார்க்கணேயர் போன்ற திமுகவின்  தலைவர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்ஸ்டாலினையும்உதயநிதியையும்  கைது செய்வதற்குரிய சான்றாதாரங்கள் எவையும் இல்லாமையால் காலதாமதமானது.

தஞ்சாவூரில் காவிரி உரிமை தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்உதயநிதி  பேசிய சில கருத்துகள் எல்லை தாண்டியதாகவும்கண்ணியமற்ற முறையில் அமைந்ததாகவும் புகார்கள் வைக்கப்பட்டன.  உதயநிதி பெண்களை அவமதித்து விட்டதாக கூறிதமிழக வெற்றி கழகம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்தது.  உதயநிதியின் பேச்சில் சில விஷயங்கள் நாகரிகமற்றது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லைஆனால்தவெக தற்போது கையிலெடுத்துள்ள இந்தப் போராட்ட முறை பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில்உதயநிதி   மீது தஞ்சாவூர்  பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்இதனைத் தொடர்ந்துகைது நடவடிக்கைகளுக்காகத் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான  பொலிஸார்நீலாங்கரையில் அமைந்துள்ள உதயநிதியின் வீட்டை முற்றுகையிட்டனர்உதயநிதி கைது செய்யப்பாப்போகிறார் என்ற செய்தி திமுகவினரை உசுப்பிவிட்டதுதிமுக தலைவர்களும்தொண்டர்களும் உதயநிதியின் வீட்டுக்கு முன்னால் குழுமினர்.உதயைநிதியின் மூது ஒன்பது பிரிவுகளில் குற்ற்ம் சாட்டப்பட்டது.. பெண்களை இழிவு படுத்தியதுதான்  முதன்மைக் காரணிபிரிவினையை உருவாக்குவது,இன மோதலைத் தூண்டுவது,மதக் கலவரங்களை ஏற்படுத்துவது போன்ற குற்றச் சாட்டுகள் உதயநிதியின் மீது ஏன் சுமத்தப்பட்டது எனத் தெரியவில்லை.

உதயநிதியைக்  கைது செய்து நீதிமன்றத்தின் முன்னால் நிருத்துவததை நோக்கமாகக் கொண்டு நடவடிகையை ஆரம்பித்த பொலிஸார்  நேரம் செல்லச் செல்ல தமது நிலைப் பாட்டை மாற்ரினர்கள்உதயநிதியை விசாரித்துவிட்டு  விடுவதாகத் தெரிவித்தார்கள்தஞ்சாவூரில் இருந்த வந்த  பொலிஸார் வீட்டியேலே விசாரிக்கலாமேதஞ்சாவூருக்குக் கொண்டு சென்று விசாரித்த பின்னர்  விடுதலை செய்வது ஏன் என்ற கேள்விக்கு பொலிஸாரிடம் பதில் இருக்கவில்லை.

இதர்கிடையில் உதயநிதியைக் கைது செய்யத்தடை கோரி மனுத் தாக்கல் செய்து அவசர வழக்காகக் கோரப்பட்டது. 12 மணிவரை உதய நிதியைக் கைது எய்ய வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியதுநீதிமன்ற அரிவுறுத்தலையும் மீறி 11.45 மணிக்கு உதயநிதி கைது செய்யப்பட்டார்.

விஜய் அரசாங்கத்தின் அவசர  டவடிக்கையினால்  நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அரச வழக்கறிஞர்கள் தடுமாறினர்விஜய் அரசியலுக்கு வந்ததும் அவரைச்  சுற்றி  இருந்த  ஊடகவெளிச்சம் உதயநிதியை  போக்கச் செய்ததுதமிழகத்தின் தொலைக் காட்சிகள் மட்டுமல்லாது வட இந்திய  ஊடகங்களும் உதயநிதியின் கைதுக்கு முக்கியத்துவம் கொடுத்தனஉதயநிதி கைது நாடகத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருக்குமோ என்ற சந்தேகமும் சிலருக்கு உள்ளது.

உதயநிதிக்கு ஆதரவாகப் போராட்டம் செய்த ஓபிஎஸ் உட்பட ஆயிரக் கணக்கான வர்கள் கைது செய்யப்பட்டனர்.


 விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில்மாநிலத்தின் முக்கியமான அரசியல் ,நிர்வாகச் சிக்கல்களில் அரசு எடுக்கும் முடிவுகள் பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளனகாவிரி மேகதாது பிரச்சனைஎதிர்க்கட்சித் தலைவரை கைது செய்த விவகாரம்மற்றும் முக்கிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய தலைவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் என அனைத்திலும் தவெக அரசு தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 மேகதாது பேச்சுவார்த்தை பின்னடைவு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் சூழலில்அம்மாநில முதல்வர் டி.கேசிவகுமாருடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார்ஓகஸ்ட் 3  ஆம் திகதி  பெங்களூர் சென்று இந்த பேச்சுவார்த்தையை நடத்த 13 பேர் கொண்ட குழுவுடன் விரிவான அறிக்கையும் தயார் செய்யப்பட்டதுகர்நாடகாவின் விஜய்க்கு எதிரான போராட்டங்கள் தீவிரமானதால் தற்போதைய சூழல் பேச்சுவார்த்தைக்கு சாதகமாக இல்லைநீங்கள் அதனால் வர வேண்டாம்எனக் கூறிஇந்த பயணத்தை ஒத்திவைக்குமாறு கர்நாடக முதல்வர் டி.கேசிவகுமார் கோரிக்கை விடுத்தார்ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாதுவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில்தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முயன்றது மாநிலத்தின் உரிமையை நீர்த்துப்போகச் செய்யும் என எதிர்க்கட்சியான திமுக கடுமையாகக் குற்றம்சாட்டியதுஇதை மீறி பெங்களூர் செல்ல திட்டமிட்டிருந்த விஜய்க்கு.  அந்த பயணமும் ரத்தானதுஇதனால் அரசியல் ரீதியில் விஜய் அரசுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக மாறியது.

   சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக உதயநிதியை  பொலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர்இருப்பினும்இந்த கைதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட அவசர வழக்க விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்விசாரணையை முடித்து உதயநிதியை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டதுபட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கியக் கேள்விகளை எழுப்புவதைத் தவிர்க்கவே அரசு இந்த கைதை மேற்கொண்டதாக திமுக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்எதிர்க்கட்சித் தலைவரை சட்டப்பூர்வமாகச் சிறையில் வைக்க முடியாமல்  பொலிஸ்  திருப்பியனுப்பியதுதவெக அரசின் அவசர கோல நிர்வாக நடவடிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதுமுக்கியமாக உதயநிதிக்கு இது கூடுதல்  பலத்தைக்  கொடுத்ததுதிமுகவிற்கும் கூடுதல் ஊக்கத்தை கொடுத்துள்ளது

  செந்தில் பாலாஜி மீதான‌ வழக்குகள்,  சோதனைகள்  அதேவேளையில்டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டரீதியான நடவடிக்கைகளை தவெக அரசு துரிதப்படுத்தியதுசெந்தில் பாலாஜியின் வீடுகள் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும்அவரது முன் பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் உச்ச நீதிமன்றத்தை அணுகி அவர் சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்இதில் அவருக்கு பெயில் கிடைத்துவிட்டதால் . அவரை கைது செய்வதில் தவெக அரசு தோல்வி அடைந்ததுஇந்த வழக்கிலும் தவெக கடுமையான பின்னடைவை சந்தித்தது.

பெரிய அளவிலான மாநில பிரச்சனைகளான நதிநீர் உரிமைசட்டரீதியான கைது நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்கு போன்றவற்றில் போதுமான அனுபவமின்மையை இவை  வெளிப்படுத்துகின்றன.  முக்கியமான அரசியல் நகர்வுகளில் தீர்க்கமான மற்றும் முதிர்ச்சியான முடிவுகளை எடுக்கத் தவறினால்விஜய்யின் தவெக அரசுக்கு மக்களிடையேயான செல்வாக்கு குறையும் அபாயம் உள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ரமணி

9/8/26

 

No comments: