Tuesday, October 12, 2021

பஞ்சாப் அணியின் ஏழு வருட காத்திருப்பு


 ராகுல் தலைமையில் ஐபெல் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஓஃப் சுற்றுக்குத் தகுதி பெறாது வெளியேறியதுஇதனால் , ஐபிஎல் வரலாற்றில் சோகமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறது.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில்   இரண்டாவது இடம் பிடித்தித பஞ்சாப் அணி  அதன் பிறகு அந்த   பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் திணறி வருகிறது.

 கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி இந்த ஆண்டு மொத்தம் உள்ள 14 லீக் ஆட்டங்களில் ஆறில் மட்டுமே வெற்றி பெறது. எட்டுப் போட்டிகளில் தோல்வியடைந்தது.  12 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்தது.தொடர்ச்சியாக 7 முறை பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போயிருக்கும் பஞ்சாப் அணி, ஐபிஎல் வரலாற்றில் அவல சாதனையை தன்வசமாக்கியிருக்கிறது. முன்னதாக டெல்லி கப்பிடல்ஸ் அணியும் தொடர்ச்சியாக ஆறு முறை ஐபிஎல் பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் இருந்தது, தற்போது அந்த எண்ணிக்கையை ஏழாக  மாற்றியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

2008ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில்  பஞ்சாப் அணி அரை இறுதிப் போட்டிவரை வரை முன்னேறியது.

டெல்லி  ப்பிடல்ஸ் அணி 2013 முதல் 2018  வரை தொடர்ச்சியாக ஆறு தொடர்களில் பிளே ஓஃப் சுற்றுக்குதகுதி பெறாமல் இருந்தது. ஆனால் தோல்விப்பாதையில் இருந்து மீண்டும் 2019  ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தையும், 2020 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தையும்,   பிடித்தது.

 

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் சீசன்களில் டெல்லி ப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் , பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளாக உள்ளன. ஆனால் இம்முறை டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. பெங்களுருவும் பஞ்சாப்பும் வெளியேறியதால் டெல்லி மீது எதிர் பார்ப்பு கூடியுள்ளது.

No comments: