Sunday, November 17, 2013

கூலிக்கு மாரடிப்போர்

அன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலையிலேயே கேட்ட அழுகுரலும், பறையொலியும் எம்மைத் துயிலெழுப்பின. ஆடைகளைச் சரிசெய்து கொண்டு பாட்டி வீட்டிற்கு ஓடினோம். வெளி விறாந்தைக்கும் வேலிக்குமிடையில் இருந்த பரந்த முற்றத்தில் அயலயவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு கூட்டத்தின் மத்திக்குச் சென்றோம். உயிரற்ற பாட்டியின் உடலைக் கிடத்தியிருந்தியிருந்தார்கள். முதல் நாளிரவே அவர் இறந்துவிட்டாராம். பயத்தினால் உடல் வெலவெலத்தது. நான் சென்றிருந்த முதல் செத்தவீடு அதுதான்.

                பறையொலியையும், அழுகுரலையும் மீறி ஒரு முரட்டுக்குரல் ஒலித்தது. அவர்தான் மாமனார். கிராமத்துக் கொட்டிற் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியராகவிருந்த அவர்தான் செத்தவீட்டு அலுவல்களை மேற்பார்வையிட்டார். சாதாரணமாகவே அவர் தனது சிம்மக் குரலில் வேகமாகக் கதைப்பார். கோபம் வந்தால் கேட்கவே வேண்டாம், வீராவேசம் கொண்டு ஊரே அதிரும்படி தொண்டை கிழியக் கத்துவார். அன்றும் அவர் கோபத்தின் உச்சிக் கொப்பிலே நடமாடிக் கொண்டிருந்தார். கூலிக்கு மாரடிப்பவர்கள் இன்னும் வந்து சேராததே அதற்குக் காரணம்.
"நானே போய் அவளவையின்ரை சிண்டைப் பிடிச்சு இழுத்து வாறன்" என்று தனக்குத்தானே பலமாகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார். கூலிக்கு மாரடிப்போரைப் பற்றி பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டவனாக நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.

                மணல் ஒழுங்கைகளுடாகவும், புழுதி படிந்த ஒற்றையடிப் பாதைகளுடாகவும் சென்று கொண்டிருந்தோம். தூரத்தே நரிகளின் ஊளையொலி கேட்டது. பற்றைகளிலிருந்த சருகுகளிடையே பாம்புகள் சரசரத்து ஓடின. மாமனாரை ஒட்டி உரசிக் கொண்டு நடந்தேன்.

                "! அதுகள் சாரைப்பாம்புகள். ஒரு நாளும் கடியாது, நீ பயப்பிடாதே"

                சின்னஞ்சிறு குடிசைகள் தென்பட்டன. அவை நேராக, ஒரே சீராக அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரைப் பகுதிக்கு வந்துவிட்டோம், சில மீனவர்கள் மனைவிமாரின் உதவியுடன் மீன்பிடி வலைகளைச் செப்பஞ் செய்துகொண்டிருந்தனர். இன்னுஞ் சிலர் கட்டுமரங்களைக் கடலிற் தள்ளிக்கொண்டிருந்தனர்.

                "டேய்! நில்லுங்கோடா அயோக்கியப் பயல்களே. " மாமனார் கோபத்தோடு கத்தினார். ~~இண்டைக்கென்ரை குஞ்சியாத்தேன்ரை செத்தவீடென்று உங்களுக்குத் தெரியாதோ? கீழ் சாதிப்பயல்களே எல்லாரும் அங்கை நடவுங்கோடா.||

                "எங்களுக்குத் தெரியாது ஐயா! ~நாம்| கோவிக்கக் கூடாது. நாங்கள் இப்பவே வாறம்" வலைகளைப் போட்டுவிட்டுப் பௌவியமாக வந்து கைகட்டி நின்று கொண்டு சொன்னார்கள்.

                அவர்களைக் கடந்து கூலிக்கு மாரடிப்பவர்களைத் தேடிச் சென்றோம். நாம் முன்பு பார்த்த குடிசைகளை விடச் சிறிய குடில்கள் சில தெரிந்தன.

                "அந்த ஈனப்பெண்டுகள் இங்கினைதான் இருக்கிறவளள்"

                ஒரு குடிலின் முன்னே நின்னேகொண்டு சத்தமிட்டுக் கூப்பிட்டார். கிடுகுப்படலையைத் திறந்து கொண்டு இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை அணிந்திருந்த வளையல்கள் கிலுகிலுத்தன. அழுக்கேறிய சேலைகளை மார்பின் குறுக்கே வரிந்து கட்டியிருந்தார்கள்.

                "என்ர குஞ்சியாத்தையின்ரை செத்தவீடு இண்டைக்கென்று சொல்லி அனுப்பினனானெல்லோ, இன்னும் அங்கை வராமல் இங்கை என்னடி செய்யிறியள்? " மாமனார் பொரிந்து தள்ளினார்.

                "நயினார் கோவிக்கக்கூடாது. நாங்கள் அங்கை வாறதுக்குத் தான் வெளிக்கிடுறம். சுணங்கினதுக்கு நயினார் மன்னிக்க வேணும்" அவர்களில் ஒருத்தி சொன்னாள்.

                "மற்றவள்களெல்லாம் எங்கை போயிட்டாளுகள்? "

                "இப்ப இங்கை எங்களைவிட ரெண்டுபேர்தான் இருக்கினம். ரெண்டு பேரும் அக்கா, தங்கைகள் அவவையைவிட வேறை ஒருத்தருமில்லை. அதுகளும் வரமாட்டுதுகள் இண்டைக்கு விடியக்காத்தாலை அதுகளின்ரை தாய் மனிசி செத்துப்போச்சு. "
                "சே! கொஞ்சங்கூட அறிவில்லாத சனங்களாக் கிடக்கு. அவளள் எங்கை இருக்கிறவளள்? "

                "உதிலை கிட்டத்தான் நயினார்"

                "எனக்கொருக்கால் அவளளின்ரை குடிலைக் காட்டு"

                அவ்விரு பெண்களையும் பின்தொடர்ந்து சென்றோம். ஒரு குடிசையிலிருந்து விசும்பலொலி கேட்டது. அதன் முன்னாற் சென்று நின்றோம். எம்முடன் வந்த பெண்கள் அங்குள்ளோரைக் கூப்பிட்டனர். கண்ணீரால் நனைந்து நெகிழ்ந்திருந்த சேலைகளை குத்திட்டு நிற்கும் மார்பின் குறுக்கே இறுக்கிச் செருகியவாறு அச்சகோதரிகள் வெளியே வந்தனர்.

                "நயினார் எங்களைப் பொறுத்துக் கொள்ள வேணும். எங்கடை ஆத்தை காலமை மோசம் போயிட்டா. இந்த நிலமேலை நாங்கள் மற்றவயின்ரை செத்தவீட்டுக்கு எப்படி வாறது?||

                "மானங்கெட்ட நாய்களே என்ர குஞ்சியாத்தேயின்ர செத்த வீட்டிற்கு ரண்டு மாரடிக்கிறவளள் என்னத்துக்குக் காணும்? அவ ஆரெண்டு தெரியுமல்லே|| மாமனார் சீறி விழுந்தார்.

                "நயினார் கொஞ்சம் பொறுக்க வேணும்" அயலிலுள்ள பெண்ணொருத்தி அவர்களுக்காகப் பரிந்து பேசினாள். ~~சொந்தத் தாய் சீவன் போய்க்கிடக்கேக்கை அந்தத் துக்கத்தில இருக்கிறதுகளை உங்கடையிடத்துக்கு வந்து போலியாக அழச்சொல்லிறது நல்லா இல்லப் பாருங்கோ. "

                மாமனாரின் உதடுகள் கோபத்தால் துடித்தன, கண்கள் ஓடிச்சிவந்தன, உடல் பதறியது. பரிந்து பேசிய பெண் தலைகுனிந்து நிலம் நோக்கினாள். அவர்களுடைய நிலையை எண்ணி எனது கண்கள் பனித்தன. கவலையுடன் தலையை அசைத்தேன். அவருடைய கோபம் என்மேற் திரும்பியது.

                "மடப்பயலே! இதுகளைப் பற்றியெல்லாம் உனக்கென்ன தெரியும்? செத்தவீட்டுக்குக் கொப்பற்றை கூட்டாளிமார் சுப்பிறீம் கோட்டு நீதவான், பொலிஸ், கோட்டு நீதவான், பிரக்கிராசிமார், அப்புக்காத்துமார் எல்லாரும் வருவினம். போதுமான மாரடிப்பவளள் இல்லாட்டில் அவையெல்லாம் எங்களைப் பற்றி என்ன நினைப்பினம்? "

                அவ்விரு சகோதரிகளும் முழந்தாளிட்டுக் கெஞ்சினார்கள். "நயினாற்றை சொல்லுக்கு மாறாக நடக்கிறமெண்டு நினைக்க வேண்டாம். உங்களைக் கும்பிட்டம். இம்முறை மட்டும் எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. அடுத்தமுறை நயினார் வீட்டுச் வீட்டுக்கு எங்கடை தொண்டைத்தண்ணி வத்துமட்டும் அழுவம்"

"கர்வம் பிடிச்சவளே! என்ரை வீட்டிலை இன்னுமொரு சவம் விழவேண்டுமெண்டு விரும்பிறியோடீ. அற்பப் பிராணிகளே, உந்தச் சொல்லுக்காக உங்களைக் கோட்டுக்கேத்துவேன்" கோபாவேசம் மிகுந்த நிலையில் கையைப் பிடித்துத் தரதரவென்றிழுத்துச் சென்றார்.

                "நயினார்! கையை விடுங்கோ நயினார். நாங்கள் இப்பவே வாறம். "

                அப்பெண்கள் நால்வரையும் முன்னேவிட்டு அலுவல்காரர் பின்னாற் சென்றார். அவரைத் தொடர்ந்து நானும் சென்றேன்.

                பாட்டி வீட்டை நெருங்கிவிட்டோம். அப்பெண்களின் நடையில் ஒரு வேகம் காணப்பட்டது. கூந்தலை அவிழ்துத் தலையை விரித்துக் கொண்டு, இரு கைகளையும் வானோக்கி உயர்த்தியவாறு ~...| வென்று கதறியபடி உட்சென்றார்கள். அங்கே அயலவர்களும் உறவினர்களுமாகிய பெண்கள் சிறு சிறு குழுக்களை அமைத்துக் கொண்டு ஒருவரின் தலையை அடுத்தவரின் கழுத்திற் சாய்த்துக்கொண்டு அழுதவண்ணம் இருந்தார்கள். அவர்களுக்குச் சிறிது ஒதுக்கமாய் அமர்ந்து கொண்டு மாரடிக்கும் பெண்கள் அழுதார்கள். கைகளை மேலே தூக்கித் தலையில் அடித்தார்கள். பாட்டியின் நற்பண்புகளைச் சொல்லி ஒப்பாரி வைத்தார்கள்.

                பாட்டியின் அன்புக்குப் பாத்திரமான பேரப்பிள்ளை தம்பு மலேசியாவிலிருந்து வரும்வரை பாட்டியை விட்டுவைத்த முழுமுதற் கடவுள் சிவனின் கருணையே கருணை என்று சொல்லி உறவினர் சிலர் அழுவதை அவதானித்த மாரடிக்கும் பெண்கள் அதனைக் கருவாகக் கொண்டு ஒப்பாரி வைத்தனர்.

                "வாயைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன்
                வளத்தினைச் சொல்லனனை
                கண்ணைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன்
                கதையைச் சொல்லனணை"
               
                அதே வேளையில் அலுவல்கார மாமனார் தனது நண்பர் குழாத்தில் தனது கெட்டிக்காரத்தனத்தைப் பறைசாற்றினார். மாரடிக்கும் பெண்களை இழுத்துவந்ததனைச் சுவையாக விபரித்தார். அவருடைய மனிதாபிமானமற்ற செயல்களை நண்பர்கள் மறுதலித்தனர். அந்த ஈனச்செயலுக்காக அவ்விரு பெண்களிடமும் மன்னிப்புக் கோருமாறு வற்புறுத்தினர். வந்திருந்த பலர் அப்பெண்களுக்காக வருந்தினர். அவர்களை வீட்டிற்கு அனுப்பும்படி எனது தந்தையார் சொன்னார்.

                அலுவல்காரர் பொங்கியெழுந்து அப்பெண்களிடம் சென்றார். ஏதோவெல்லாம் கூறி அதட்டினார். இறுதியில் மரணச் சடங்கு முடியும் வரை நின்று தங்கள் கடமையைச் செய்து முடிக்க அவர்கள் இணங்கினார்கள்.

                அலுவல்காரர் முன்பைவிடச் சுறுசுறுப்பாக ~அலுவல்| பார்த்தார். அவருடைய கொடூரச் செயலை விஷயமறிந்த ஒவ்வொருவரும் விமர்சித்தனர். அவரோ எதையும் காதிற்போடாமல் சுழன்று சுழன்று அலுவல் பார்த்தார். பறையடிப்பவர்களிடம் சென்று மாரடிக்கும் பெண்களின் குரலைவிடச் சத்தமாக வேகமாகப் பறையை முழங்கச் சொன்னார். பின்பு ஒரு பை நிறைய அரிசியையும் மரணச் சடங்கிற்குத் தேவையான சமித்து முதலிய முக்கிய பொருட்களையும் எடுத்துக்கொண்டு பிரேதக் கட்டிலருகே வந்தார்.

                நன்றாக வியர்த்துக் களைத்தது. மாரடிக்கும் பெண்களைக் கட்டிலருகே கூட்டிவரக் காலடி எடுத்துவைத்த போது உடல் தள்ளாடியது. கைகளால் தலையைப் பிடித்துக்கொண்டு தடால் என்று வீழ்ந்து விட்டார். சுற்றிலுமிருந்தவர்கள் கலவரப்பட்டனர். சிலர் அவரை ஓர் ஒதுக்குப்புறமாகத் தூக்கிச் சென்றனர். இன்னுஞ் சிலர் உதவிக்கு விரைந்தனர். ஒருவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். வேறொருவர் விசிறி கொண்டு விசுக்கினார். சிறிது நேரம் சிசுருஷையின் பின் மாமனார் கண்களைத் திறந்து எழுந்திருக்க முயன்றார். நண்பர்கள் விடவில்லை. நன்றாக ஓய்வெடுக்கும்படி வற்புறுத்தினர்.

                மாரடிப்போரிடையே அவ்விரு சகோதரிகளின் குரல்கள் வெகு துல்லியமாகக் கேட்டன. நயினாரின் குஞ்சியாத்தையின் செத்த வீட்டில் ஒன்றிவிட முடியவில்லை.

                "ஏழையள் எம்மைவிட்டு எங்கை போனாய் ஏந்திழையே
                ஏழையள் நாம் எங்கு போவோம் எழுந்துவாராய்
                எங்கதாயே"

                அவர்களுடன் மற்றைய இருவரும் சேர்ந்து கொண்டனர். குருக்கள் வந்து மரணச்சடங்கை ஆரம்பித்த போது அழுகுரல் விண்ணையொட்டி ஓய்ந்தது. குருக்கள் பாட்டியின் அன்புப் பேரனான தம்புவை அருகிலழைத்துத் தேவாரம் பாடச்சொன்னார். குரல் கரகரத்துத் தளதளத்தது. கண்கள் குளமாகிப் பார்வையை மறைத்தது. ஈற்றடிகளை முற்றாகப் பாடிமுடிக்க முடியவில்லை. பிரேதத்தின் மேல் தலையைப் புதைத்து அழுதார்.

                "எத்தனையோ வருஷங்களாக எனக்காகக் காத்திருந்தியே. கடைசீல என்னோடு ஒரு சொல்லுக்கூடப் பேசாமல் அறிவற்ற நிலையிலேயே செத்துப் போனியே என்ரை ஆச்சி. " தம்பு உணர்ச்சிவசப்பட்டு ஓலமிட்டார்.

                மாரடிக்கும் பெண்கள் ஒப்பாரியைத் தொடர்ந்தனர்.

                "அப்புக்காத்தினருமைத் தாயே நீயின்று அசையாமலிருப்பதேனோ?
                அசையாமலிருப்பதாலே அன்பானோர் அல்லல் கொண்டழுகிறார்கள்
                ....................................
                கண்ணைத் திறந்துந்தன் கயல்விழியைக் காட்டனம்மா
                கண்ணைத் திறந்திந்தக் காட்சியினைப் பாரனம்மா
                .....................................
                வாயைத் திறவனம்மா, நீ வளர்த்தவர் வந்துவிட்டார்
                உன் வளத்தினைச் சொல்லனம்மா
                கண்ணைத் திறவனம்மா நீ வளர்த்தவர் வந்துவிட்டார்
                உன் கதையளைச் சொல்லனம்மா"
ஆங்கில மூலம்: அழகு சுப்பிரமணியம்
தமிழில் : ராஜ ஸ்ரீ காந்தன்,

புத்தகம் :நீதிபதியின் மகன்
முதல் பதிப்பு : 1999 ஜூன் 30

இரண்டாம் பதிப்பு: 2003 பெப்ரவரி 15

Monday, November 11, 2013

வெற்றிப்பயணம் ஆரம்பம்





  மங்கள்யான் என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்வெளிக்கு  ஏவி செவ்வாய்க் கிரகத்துக்கான தனது விண் வெளி ஆய்வை கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பித்தது இந்தியா. சூரிய வட்டத்தில் உள்ள  நான்காவது கிரகமான செவ்வாயைப்பற்றி பல கதைகள் தமிழில் உள்ளன. அதேபோன்ற பூர்வீகக்கதை கள் ஆங்கிலத்திலும் உள்ளன.அந்தக் கதைகளை எல்லாம்புறந்தள்ளிவிட்டு செவ்வாய்பற்றிய உண்மையை அறிய விஞ்ஞானிகள் முயற்சி  செய்கின்றனர்.
தென்இந்திய ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஏவப்பட்ட மங்கள் யான் 43.30 நிமிடங்களில் பூமியைச் சுற்றி நிலைநிறுத்தப்பட்டது.பூமியைச் சுற்றி 250 தூரத்தில் வலம்வரும் மங்கள் யான் ஐந்து வட்ட பாதைகளில் 23500 கி.மீற்றர் வரை சுற்றிய பின் டிசம்பர் முதலாம் திகதி செவ்வாய் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கும். 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் 24 ஆம் திகதி செவ் வாய் சுற்று வட்ட பாதையில் மங்கள்யான் பிரவேசிக்கும் செவ்வாயின் வளம் கனிம ஆய்வு மனிதர் வாழ்வதற்கு சூழ்நிலை உள்ளதா என்பதை மங்கள்யான்  ஆய்வு செய்யும். இதற்காக ஐந்து நவீன கருவிகள் மங்கள் யானில் பொருத்தப்பட்டுள்ளன. போர்பு ளோரா, புரூனை, தென்பசுபிக் நாடுகளில் நிலை கொண்டுள்ள இந்தியாவின் கப்பல்களில் பொருத்தப்பட்டிருக்கும் விசேட ராடர்கள் மூலம் மங்கள்யான் பற்றிய தகவல்களை இந்திய விஞ்ஞானிகள் பெற்றுக் கொள்வார்கள். முழுக்க முழுக்க இந்தியாவின்  தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தின் தலைமை விஞ்ஞானி தமிழ்நாடு திருநெல் வேலியைச் சேர்ந்த சுப்பையாஅருணன் என்பவராவார்.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸைத் தலை மையாகக் கொண்ட ஐரோப்பிப்பிய யூனியன் நாடுகள் ஆகியவையே செவ்வாய்க் கிரகத் துக்கு வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியுள்ளன. செவ்வாய்க்கிரக த்துக்கு விண்கலம் அனுப்பும் முயற்சி யில் ஜப்பான் தோல் வியடைந்தது. 2011 ஆம் ஆண்டு சீனா வும் செவ்வாய் நோக்கி விண்கலத் தை அனுப்பி தோல் வியடைந்தது. செவ் வாய்க்கு  விண் கலம் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமை யை இந்தியா பெற் றுள்ளது. இந்தப் பெருமையால் சீனாவில்  உள்ள ஒரு சிலர் கடுப்பில் உள்ளனர்.  இந்தப் பணத்தை இந்தியாவில் உள்ள ஏழை களுக்கு கொடுத்திருக்கலாம் என்று சீனப் பத்திரிகை ஒன்று கடும் சீற்றத்தில் குமுறி யுள்ளது.இம்மாதம் 18 ஆம் திகதி மாவோன் என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது மங்கள்யான், மாவோன் ஆகிய வற்றின் மூலம் பல புதிய தகவல்களைப் பெறலாம் என்ற எதிர்ப்பாப்பு விஞ்ஞானிகளிடம் உள்ளது.
பூமி தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம் எடுக்கும். செவ்வாய் தன்னைத்தானே சுற்றிவர 24.37 மணித்தியாலமாகும். பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வர 365 நாட்களும், சூரியனை செவ்வாய் சுற்றிவர 687 நாட் களும் எடுக்கும். பூமியைப் போன்றே செவ்வாயிலும் பள்ளத்தாக்கு, எரிமலை உண்டு என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.பூமியைத் தவிர வேற்றுக் கிரகங்களிலும் உயிர்வாழக்கூடிய சூழல் உள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
பறக்கும் தட்டுக்களில் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்ததைப்ப பார்த்ததாக பல செய்திகள் வெளிவந்தன. பறக்கும் தட்டு, வேற்றுக்கிரகவாசிகள்  எல்லாம் உண்மை தான் என்று ஒரு சிலர் அடித்துக் கூறுகின்றனர். ஆனால், அவை எல்லாம் பொய் என்று சிலர் மறுத்து வருகின்றனர். அமெரிக்காவும், ரஷ்யாவும் வேற்றுக்கிரக வாசிகளை பிடித்து வைத்து இரகசிய இடத்தில் விசாரணை செய்ததாக உத்தி யோகப் பற்றற்ற செய்திகள் வெளியாகின. வேற்றுக்கிரகவாசிகளைபற்றிய ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. வேற்றுக் கிரகவாசிகள் இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்களது பழக்க வழக் கம், உணவு எப்படி இருக்கும்? அவர் களுக்கென்று கலை, கலாசாரம் இருக்குமா என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித் துள்ளது

அமெரிக்கா செவ்வாய்க்குஅனுப்பிய  ஆய்வு இயந்திரம் மூலம் பெறப்பட்ட  சில படங்கள் பரபரப்பை உண்டாக்கின.ஒரு  பெண் கல்லிலே இருப்பது போன்றும் இயந்திரம் ஒன்று ஓடிய வழித்தடம் என்றும் சில பத்திரிகைககள் ஆர்வ மிகுதி யால் கதை கட்டின. அவையயல்லாம் பொய் என்று நாஸா கூறியது.ஆங்கில நாவல்களும், ஆங்கிலத் திரைப்படங்களும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள் ளன. பூமியை அழிக்க வந்த வேற்றுக்கிரக வாசிகளை விரட்டியடித்த கதாநாயகர்கள், ரசிகர்கள்  மனதிலும் சிறுவர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளனர்.
செவ்வாய்க்கிரகம் பற்றிய ஆய்வு இன்ன மும் சரியான முறையில் ஆரம்பிக்கப்பட வில்லை. அதற்கிடை யில் அங்கு அடுக்கு மாடி குடியிருப்பு அமைத்து மக்களைக்குடி அமர்த் தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இணை யத்தளம் மூலம் இலட்சக் கணக்கா னோர் இதற்கு முன்பதிவு  செய்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தில் 97 சதவீத கரியமிலை வாயுவும் 0.13 சதவீத .ஒட்சிசனும் உள்ளன. இதனைத் தெரிந்துகொண்டும் குடியிருப் பதற்கு இலட்சக் கணக்கானோர் முயன்றடித்துள்ளனர். செவ்வாயக்கிரகத்துக்கான பயணம் ஒரு வழிபாதையாகும். செவ்வாய்க் கிரகத்தில் உங்களை இறக்கி விடுவதுதான்  நிறுவனத் தின் பொறுப்பு திரும்பி வருவது உங்களது கெட்டித்தனம்.
சந்திரனுக்கு சந்திரயான் 1 அனுப்பி புதிய தகவல்களை வெளியிட்டார்கள் இந்திய விஞ்ஞானிகள். 2016 ஆம் ஆண்டு சந்திரயான் 11ஐ சந்திரனுக்கு  அனுப்பத்திட்டமிட்டுள்ளது இந்தியா.
பல வழிகளிலும் இந்தியா வளர்ச்சியடை ந் துள்ளது.தொழில்நுட்பத்திலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் இந்தியா மிக வேகமாக  முன்னேறிக்கொண்டிருக்கின்றது.ஊழலும், அரசியலும் மாறாத கரும் புள்ளியாக உள்ளது. அப்துல் கலாமின் கனவை நனவாக்க இந்திய இளைஞர்கள் முனைப்பில் உள்ளனர். மங்களி யானின் வெற்றி இளைஞர்களுக்கு உற்சாகத் தைக் கொடுத்துள்ளது.
வானதி
 சுடர் ஒளி 10/11/13

உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவாரா ரொனால்டோ?

Ukraine

 
Portugal
பிரேஸிலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றும் நாடுகளைத் தெரிவுசெய்வதற்கான தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவ வதற்காக ஐரோப்பாக் கண்டத்தில் நடைபெற்ற தகுதி காண் போட்டிகளில் வெற்றிபெற்ற ஒன்பது நாடுகள் தகுதிபெற்றுள்ளன. மேலும் நான்கு நாடுகளைத் தெரிவுசெய்வதற்கான போட்டிகள் இந்த வாரம் நடை பெறவுள்ளன.
பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் முதன்முதலாக பொஸ்னியா தகுதிபெற்றுள்ளதுஐஸ்லாண்ட்-_ குரோஷியா, போர்த்துக்கல்- சுவீடன், உக்ரெய்ன் - பிரான்ஸ், கிரீஸ்- ரொமானியா ஆகியவற்றில் வெற்றி பெறும் நான்கு நாடுகள் உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறும்.
"' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஐஸ்லாந்தும், "' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற குரோஷியாவும் தலா 10 போட்டிகளில் விளையாடின. குரோஷியா எட்டு போட்டிகளிலும், ஐஸ்லாந்து ஐந்து  போட்டிகளிலும் வெற்றிபெற்றன. இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளிலும்தலா இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தலா 17 புள்ளிகளைப் பெற்றுள்ளன. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் பலமான அணிகளை வீழ்த்தி அரை இறுதிவரை முன்னேறிய குரோ´யா மூன்றாம் இடத்தைப் பெற்றது. நான்கு தடவைகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய ஐஸ்லாந்து பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை.

"எவ்' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற போர்த் துக்கலும், "சி' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சுவீடனும் தலா 10 போட்டிகளில் வினையாடி ஆறு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. போர்த்துக்கல் மூன்று போட்டிகளையும் சுவீடன் ஆறு போட்டிகளையும் சமப் படுத்தியுள்ளன. போர்த்துக்கல் ஒரு போட்டியிலும் சுவீடன் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளன. போர்த்துக்கல் 27 புள்ளிகளையும், சுவீடன் 20 புள்ளி களையும் பெற்றுள்ளன.

போர்த்துக்கல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானி ரொனால்டோவின் மீது அளவற்ற மதிப்பு வைத்திருக்கும் ரசிகர்கள் போர்த்துக்கல் வெற்றிபெறவேண்டும் என விரும்புகின்றனர். 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இரண்டாம் சுற்றுவரை முன்னேறிய போர்த்துக்கல், ஸ்பெயினிடம் தோல்விய டைந்து வெளியேறியது. 1966ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் போர்த்துக்கல் மூன்றாம் இடம்பெற்றது. 1958ஆம் ஆண்டு இறுதிப் போட்டிவரை முன்னேறிய சுவீடன் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றது.
"எச்' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற உக்ரைன் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று மூன்று போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வி யடைந்தது. "' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பிரான்ஸ் எட்டுப் போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டி களில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்து 17 புள்ளிகளைப் பெற்றது.
2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய பிரான்ஸ் முதல் சுற்றுடன் வெளியேறி யது. 1998ஆம் ஆண்டு உலக் கிண்ணத்தை வென்ற பின்னர் பிரான்ஸ் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் உக்ரைன் கால் இறுதிவரை முன்னேறியது.
"ஜி' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கிரீஸும், "டி' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ரொமானியாவும் தலா 10 போட்டிகளில் விளையாடின. எட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற கிரீஸ் ஒரு போட்டியை சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. ஆறு போட்டிகளில் வெற்றிபெற்ற கிரீஸ் ஒரு போட்டியைச் சமப்படுத்தி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. கிரீஸ் 25 புள்ளிகளையும், ரொமானியா 19 புள்ளிகளை யும் பெற்றுள்ளன
1994ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ரொமானியா கால் இறுதிவரை முன்னேறி யது. இரண்டு தடவைகள் மாத்திரம் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடியது கிரீஸ். குரோ´யா, போர்த்துக்கல், உக்ரைன், கிரீஸ் ஆகியவை வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றுக்கான தகுதிகாண் போட்டிகளும் அடுத்தவாரம் ஆரம்பமாகும்உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளை யாடும் நாடுகளின் பெயர்ப்பட்டியல் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும். போட்டியை நடத்தும் பிரேஸில் நேரடி யாகத் தகுதிபெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா, ஜப்பான், ஈரான், வடகொரியா, கொஸ்ரரிகா, அமெரிக்கா, யஹாண்டூரஸ், ஆர்ஜென் டீனா, சிலி, ஈக்குவாடா, கொலம்பியா ஆகிய நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதிபெற்றுள்ளன. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் கடைசிவரை காத்திருந்து இடம்பிடித்த ஆர்ஜென்டீனா இம்முறை முதல் அணியாக உள்ளே நுழைந்துவிட்டது.
தென் அமெரிக்காவிலிருந்து முதல் அணியாக உள்ளே நுழைந்த ஆர்ஜென்டீனா கடைசிப் போட்டியில் உருகுவேயிடம் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி யால் ஆர்ஜென்டீனாவுக்கு எதுவித பாதிப்பும் இல்லை. பிளே ஓவ் போட்டியில் விளையாடுவதற்காகக் காத்திருக் கும் உருகுவே ஜோர்தானுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற்றால் உலகக் கிண்ணப் போட்டியில் விளை யாடும் தகுதியைப் பெறும்.
ரமணி சுடர் ஒளி 10/11/13