Wednesday, December 9, 2015

கொட்டித்தீர்த்தது மழை முடங்கியது சென்னை

 சீர்மிகு சிங்காரச் சென்னையில் பெய்யாப்பெருமழை பெய்ததால் வெள்ளத்தில் சிக்கி சீரழிந்துள்ளது. மழை வெள்ளம் ஆற்றுநீர் என்பவற்றினால் சென்னையில்  முடங்கியது.  சென்னையில் 40 மணிநேரத்துக்கும் மேலாக அடைமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. பெரும்பாலான இடங்களில் முழங்கால் அளவு வெள்ள நீர் கரைபுரண்டோடியது
வானத்து சுனாமி' போல், இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கன மழையால், தமிழகத்தின் தலைநகரான, சிங்கார சென்னை, சீரழிந்து விட்டது. நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டு, ஆறுகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுவதால், இயல்பு வாழ்க்கை முடங்கி, மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். முப்படைகளுடன், தேசிய பேரிடர் படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, ஒரு வாரத்திற்கு முன் இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இடையில், மூன்று நாட்கள் மழை விட்ட நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டன. முழுமையாக மீளாத நிலையில், வங்கக்கடலில், அடுத்தடுத்து ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலைகளால், இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், 'வானத்து சுனாமி' போல் விடாது மழை கொட்டித் தீர்க்கிறது.
எப்போதும் இல்லாத வகையில், 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தில், - 49; திருவள்ளூர் மாவட்டம்,செம்பரம்பாக்கம் - 47; சென்னையில் பரவலாக, 29 செ.மீ., மழை பெய்துள்ளது.  விடாது மழை கொட்டித் தீர்த்ததால், தலைநகர் சென்னை தண்ணீரில்தத்தளிக்கிறது. 
சென்னைக்கு குடிநீர் தரும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் உட்பட, அனைத்து ஏரிகளிலும் இருந்து, உபரிநீர், எப்போதும் இல்லாத வகையில், அபரிமிதமாக திறந்து விடப்பட்டுள்ளதால், நிலைமை சிக்கலாகி விட்டது.அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்,கூவம், கொற்றலை, ஓட்டேரி நல்லா என, அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. எப்போது கரை உடைத்து ஆபத்து ஏற்படுமோ என, அஞ்சும் அளவுக்கு, படுமோசமான நிலை ஏற்பட்டு உள்ளது. மழை வெள்ளம் மற்றும் ஏரிகளில் தண்ணீர் திறப்பால், தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர், சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆர்., எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலை, குன்றத்துார்,பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை என, தென் சென்னை, மத்திய சென்னையில் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. தரைத்தளம், முதல் மாடி வரை வெள்ளம் 

சூழ்ந்ததால், மொட்டை மாடிகளில் ஏறி, தங்களை மீட்க யாராவது வருவரா என, லட்சக்கணக்கான மக்கள் அபய குரல் கொடுத்த வண்ணம்உள்ளனர்.
மீனவர்கள் உதவியுடன், பொதுநல அமைப்பினர் தங்கள் பகுதிக்குள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ராணுவம் உள்ளிட்ட முப்படைகள், கடலோர காவல் படை, தீயணைப்புப் படை என, களத்தில் ஏராளமானோர் குவிந்ததாலும், உரிய இடங்களுக்கு மீட்புக்கு செல்ல முடியவில்லை. மின் தடையால், மொபைல் போன் நிறுவனங்களின் டவர்கள் செயல் இழந்தன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், வெள்ளத்தில் சிக்கித் தவிப்போர், யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். உதவி கோரி அழைப்பு வந்த பகுதிகளில் உள்ளோரை, மீட்பு படையினரும், தொடர்பு கொள்ள முடியாமல் திணறினர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், தகவல் தொடர்பு துண்டிப்பால், மீட்புப்பணிகள் ஒட்டு மொத்தமாக முடங்கின.


சென்னையில், புறநகர் ரயில் போக்குவரத்து, வெளி மாவட்டங்களுக்கான ரயில் போக்குவரத்தும் முடங்கியது. தண்ணீர் புகுந்ததால்,சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சென்னையில், அண்ணா சாலை உள்ளிட்ட, 90 சதவீத சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாநகர பஸ்கள் இயக்கம் குறைவாக இருந்தது. தனியார் கால் டாக்சிகளின் செயல்பாடும் முடங்கி உள்ளது. பாதுகாப்பு கருதி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை        ஒரே நாளில் மட்டும்   சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி  ஒரே நாளில் 26செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை இப் போது பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005–ம் ஆண்டு டிசம்பர் 3–ந்தேதி ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது 2–வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருமாதம் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது. சென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை வீழ்ச்சியால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒக்டாபர் மாதம் 28  ஆம் திகதி வடகிசக்கு பருவமழை  ஆரம்பித்தது. நவம்பர் மாதம் வங்கக்கடலில் அடுத்தடுத்து தோன்றிய காற்றழுத்தம் தொடர் மழைக்கு வழிவகுத்தது. 90 சதவித பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
வீதிகளில் 10 அடிக்கு மேல் வெள்ளம்  பாய்வதால் போக்குவரத்து முடங்கியது..  வெள்ளத்தில் மூழ்கிய சில  பகுதிகளுக்கு மீட்புக்குழு செல்லமுடியாத நிலை உள்ளது. தன்னார்வத்தொண்டர்களும்  உதவும் மனம் படைத்தவர்களும் தமது உயிரையும் பொருட்படுத்தாது  துணிச்சலுடன் மீட்புப்பணியைச் செய்கிறார்கள். சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீவிர மீட்பு பணியில் ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தீவிர மீட்பு பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடியது. இதைத் தொடர்ந்து ராணுவம், கடற்படை, கடலோர படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றின் வீரர்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர். மீட்பு பணிகளுக்காக பெங்களூரில் இருந்து 2 கம்பெனிகளின் 80 ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  


பலத்த மழைவெள்ளம் ஆகியவற்றால் இலட்சக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தததால் தங்க இடமின்றி மக்கள் தவிக்கின்றனர்.  உணவு குடிதண்ணீர் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி மக்கள் பரிதவிக்கின்றனர். ஹெலிகொப்டர் மூலம் உணவுப்பொதிகள் போடப்படுகின்றன.
மழையால் தமிழகத்தில், 269 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் தெரிவித்தார். தமிழக மழை சேதம் பற்றி லோக்சபாவில் அறிக்கை சமர்ப்பித்து அவர் கூறியது: வெள்ள சேதத்தால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 269 என தெரியவந்துள்ளது. சென்னையில் 40 சதவீத தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது. என்றார்.
 


    வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் 2வது நாளாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்போன், தொலைபேசி, ஏ.டி.எம். சேவை பாதிக்கப்பட்டுள்ளது

 
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 48 மணிநேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லை. இதனால் மக்களால் செல்போன், லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியவில்லை. செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதால் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் வசிக்கும் உறவினர்களால் அவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிய முடியவில்லை. சில இடங்களில் ஏ.டி.எம். மையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்கு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் தத்தளித்து ஏ.டி.எம். மையம் சென்றவர்கள் சேவை இல்லாததால் அதிருப்தி அடைந்தனர். ஒரு சில இடங்களில் செயல்படும் ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுகின்றனர்.

சென்னை வாசிகளின் பிரதானமாக பயன்படுத்தி மின்சார ரயில் சேவைகள் மற்றும் மாநகரப்பேருந்து சேவைகள் முற்றிலும் முடங்கியது. இதனால், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் கொட்டித்தீர்க்கும் கன மழை காரணமாக   டிசம்பர் -3  டிசம்பர் -4 ஆகிய இருதினங்களும்   பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு தினங்களிலும் விடுமுறை அளிக்க தனியார் நிறுவனங்களை  அரசு அறிவுறுத்தியுள்ளது.


பலத்த மழையின் காரணமாக சென்னையில் இருந்து விமான போக்குவரத்து அடியோடு முடங்கியது ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. விமான போக்குவரத்து மற்றும் சென்னை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியும் ஹெலிக்கொப்டரிலிருந்து தனித்தனியாக வெள்ள சேதங்களைப்பார்வையிட்டனர்.   தமிழக வெள்ள நிவாரண நிதியாக கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகொப்டரில் அமர்ந்தபடி சுற்றி பார்த்தார். இதன்பிறகு தமிழக ஆளுநர், ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரை, அடையாறு ஐஎன்எஸ்-ல் சந்தித்து ஆலோசித்தார். பிறகு மோடி கூறியதாவது: நான் பார்வையிட்ட பகுதிகளில் வெள்ள சேதம் மிக அதிகமாக இருந்ததை உணர முடிந்தது. தமிழக மக்களின் இந்த துயர நேரத்தில், மத்திய அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும்.
 உடனடியாக, தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஏற்கனவே மத்திய அரசு வெள்ள நிவாரணத்திற்காக ரூ.940 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.  பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களும்  தமிழாக அரசுக்கு  உதவ முன்வந்துள்ளன, 
சென்னையின்  சீரழிவுக்கு  மசிவேழம், ஆறுகள், ஏரிகள் உடைப்பெடுப்பு என பொதுவாக குற்றம் சாட்டப்படுகிறது. வரைமுறையற்ற  கட்டுமானப்பணிகளும் சனப்பெருக்கமுன் முக்கிய காரணிகள் என்பதை வசதியாக அனைவரும் மறந்துவிட்டனர்.  சென்னையின் சராசரிமழை 1468 மி ,மீ  ஒருமாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒருநாளில் பெய்து முடித்தது.    மழை வெள்ளத்தைத் தாங்கக்கூடிய வல்லமை சென்னைக்கு இல்லை.
 1976 ஆம் ஆண்டு  452.4 மி.மீ மழை பெய்தது. அன்று அந்த மழை வெள்ளத்தி சென்னை தாங்கியது. இன்று   வளர்ச்சி என்ற பெயரில் சென்னை சீரழிந்துவிட்டது. அதனால்தான் இந்த நிலைமை. சென்னையில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னையில் சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி  ஒரே நாளில் 26செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை  இப்போது  பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005–ம் ஆண்டு டிசம்பர் 3– ஆம் திகதி  ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது2–வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது
Add caption
பெருமளவு மக்கள் தொகை அதிகரித்த நகரத்தில் சென்னை முதலிடத்தைப் பிடித்தது.  அதிகரித்த மக்கள் தொகையும் சீரழிவுக்கு ஒரு காரணம். சதுப்பு நிலங்கள்,நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டமையும் இன்றைய அவலநிலைக்கு   சான்றாகும். சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து நான்கு ஆறு வழி திவீக பாதை அமைக்கப்பட்டது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து அடுக்கு மாடிகள்  வணிக வளாகங்கள் என்பன கட்டப்பட்டன.

கிறனிற் முரகீடு குறித்து சகாயம் ஆய்வு செய்தபூது தமது பகுதியில் இருந்த ஏரிகள், வாய்க்கால்கள் என்பன அழிக்கப்பட்டதாக அவரிடம்  முறைப்பாடு செய்யப்பட்டது.  இந்த அத்து மீறல்களை கடந்தகால தமிழக அரசுகள் கண்ண்டும் காணாது விட்டன.  அந்த சிறிய சலுகைகள் இன்று விச்வறுபம் எடுத்து மக்களை நிர்க்கதியாக்கி உள்ளன.

அடையாறு,கூவம் கரைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டமையினால் வெள்ளம் வடிந்து ஓட  வழி இல்லாது  ஊருக்குள் நுழைந்து ஊரை வெள்ளக் காடாக்குகிறது.
இன்றைய அவலத்தை கவனத்தில் எடுத்து  இயற்கை சஈர்ரங்களின்  பூத்து நகரத்தையும் மக்களையும்  பாதுகாக்கும் நிர்வாகத்தை அரசு கையில் எடுக்க வேண்டும்.
தமிழ்த்தந்தி
06/12/15




Sunday, December 6, 2015

கூட்டணி சேர தடுமாறும் தலைவர்கள் தெளிவான சிந்தனையில் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை. தேர்தலை நடத்துவதற்கு  அதிகாரிகள் தயாராக இல்லை. ஆனால்,தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் அறிவிக்கப்படாத தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டன.தமிழக ஆளும் கட்சியின் தப்புகள்,தவறுகள், அராஜகங்கள், அலட்சியங்கள் அனைத்தும் ஆராயப்படுகின்றன.சிலகட்சிகள் கூட்டணி  பற்றி அறிவித்துவிட்டன. சிலகட்சிகள இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றன.சில தலைவர்கள் பிடிகொடாமல் நழுவுகின்றனர்.
 தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புகள் மூலம் மக்களின் மனநிலையை சில நிறுவனங்களும் சஞ்சிகைகளும் வெளிப்படுத்துகின்றன.ஆளும் கட்சிக்கு சாதகமாகவும் பாதகமாகவும் கருத்துக்கள் வெளியாகின்றன. கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதில்  ஜெயலலிதா உறுதியாக உள்ளார். கூட்டனிக்கு எந்தக்கட்சியும் வராததனால் வெறுத்துப் போய் இருக்கிறார் கருணாநிதி.வைகோ,திருமாவளவன்,இடதுசாரிகள் ஒன்றாக இருக்கின்றனர். விஜயகாந்த் மதில்மேல் பூனையாக பதுங்குகிறார். ராமதாஸ் மகனை முதல்வர்  வேட்பாளராக்கி தனிவழி போகிறார்.
அரசியல் தலைவர்கள் தாமும் குழம்பி தொண்டர்களையும் குழப்பிக்கொண்டிருக்கின்றனர். மக்கள் மிகத் தெளிவாக  இருப்பதை கருத்துக்கணிப்புகள் மூலம் அறியமுடிகிறது.  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயற்பாட்டில் மக்கள் அதிக நம்பிக்கை வைக்கவில்லை. அவருடைய செயற்பாட்டை ஆகா ஓகோ  என்று  அதிகம் புகழவில்லை. அவருடைய செயற்பாடு சுமா ரெண்ரீ அதிகமானூர்  கூறியுள்ளனர்.   மக்களிடம் ஜெயலலிதாவின் செல்வாக்கு சரிந்துள்ளதை கருத்துக்கணிப்பு வெளிப்படுத்துகின்றது.

அடுத்த முதல்வர் வேட்பாளர் பட்டியலில்  ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்.  ஜெயலலிதா இரண்டாவது இடத்திலும் கருணாநிதி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை கருத்துக்கணிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.  திராவிட முன்னேற்றக்  கழகத்திலும் தமிழகத்திலும் ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை கருணாநிதியின் விசுவாசிகள் விரும்பவில்லை. ஸ்டாலினின்  ஆதரவாளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.


தமிழக சட்டசபைத் தேர்தலில்  எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற முக்கியமான கேள்விக்கு மக்கள் அளித்த பதில் அரசியல்வாதிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  அதிகமாநூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 26.84 சதவிகிதமானோரும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  24.03 சதவிகிதமானோரும்  வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.   2.81 சதவிகித  வித்தியாசமே உள்ளது. வலுவான கூட்டணி சேர்ந்தால்   திராவிட முன்னேரரக் கழகம் வெற்றி பெற்றுவிடும். அதனால்தான் வலுவான  கூட்டணிக்காக கருணாநிதி காத்திருக்கிறார்.
விஜயக்காந்த் வழமைபூல் மூன்றாவது இடத்திலிருக்கிறார். அவருக்கு 7.98 சதவிகிதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  முதல்வரைத் தெரிவு செய்யும் சக்தி அவரிடம் உள்ளது. ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார். ஆகையால் அவரின் வரவை கருணாநிதி எதிர் பார்க்கிறார். விஜயகாந்தின் மனைவி பிராமளதா  கருணாநிதியையும் அவரது கட்சியையும் மிக மோசமாகத் தாக்கிப் பேசுகிறார். ஆகையால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் விஜயகாந்த சாய்வது சந்தேகம்.
 பாரதீய ஜனதாக் கட்சி நான்காவது  இடத்திலும்  வைகோ தலைமையிலான  கூட்டணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. பாரதீய ஜனதாவுடன் இணைய விஜயகாந்த் விரும்புகிறார். மோடிக்கு எதிரான் அலை எழுந்துள்ளதால் விஜயகாந்தின் எண்ணம் பலிக்கப்போவதில்லை.வைகோ தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என இன்னமும் முடிவு செய்யவில்லை. இதனால் அவர்கள் பின்னடைவை எதிர்நோக்கக்கூடும். முதலமைச்சர் இல்லாத கட்சிக்கு மக்கள் வாக்களிக்கத் தயங்குவார்கள்.  அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கும்,   திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கும்  மாற்றீடான கட்சி என்ற முத்திரையுடன் புறப்பட்ட வைகோவின் கூட்டணிமமீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்று கருத்துக் கணிப்பின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆறாவது இடமும் காங்கிரஸ் கட்சிக்கு ஏழாவது இடமும் கிடைத்துள்ளன. மக்கள் மத்தியில் செல்வாக்கை  இழந்த பாட்டாளி மக்கள் கட்சி  கூட்டணி இன்றி தேர்தலை  சந்திக்கப்போவதாக அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்னறி தோல்வி உறுதி என்பதை அக்கட்சித் தலைவர்கள் உணரவில்லை.  காங்கிரஸு டன் கூட்டணி  சேர  எந்தக்கட்சியும் முன்வரவில்லை
Add caption
 மோடியையும் ஜெயலலிதாவையும் தேர்தலில் வீழ்த்த வடமாநிலத் தலைவர்கள் வ வியூகம் அமைக்க உள்ளனர். அவர்களின் வியூகத்தினுள் காங்கிரஸ் கட்சியும் உள்ளடக்கப்பட்டால் அதற்கு விமோசனம் கிடைக்கும்.தமிழகத்தின் பலமான கட்சியான  திராவிட முன்னேற்றக்  கழகத்தை வடமாநிலத் தலைவர்கள் பலப்படுத்துவார்கள்  அப்போது காங்கிரஸ் கட்சியும் அதற்குள் உள்ளடக்கப்படலாம். சிலவேளை விஜயகாந்தும் வடமாநிலத் தலைவர்களின் வியூகத்தினால் உள்ளீர்கப்படலாம். இப்படிபட்ட ஒரு சந்தர்ப்பத்தையேர் கருணாநிதி எதிர்பார்கிறார்.

21.9 சதவீதமானோர்  ஏனையவர்களுக்கு வாக்களிக்கபோவதாகத்  தெரிவித்துள்ளனர். இவர்கள் எந்தக்  கட்சியையும் சேராதவர்கள். தேர்தலன்றுதான் இவர்களில் பலர் முடிவு செய்வார்கள். அதிகமானோர்  அரசுக்கு எதிரான முடிவையே  எடுப்பார்கள். ஐந்து வருடங்கள் அரசாங்கத்தின் நன்மை தீமைகளை அவதானித்து வாக்களிப்பவர்கள் அந்த ஆட்சியை அகற்றவே விரும்புவார்கள். எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியை விட இவர்களின் வாக்கு வங்கியே அதிக பலமானது
இவை அனைத்தும் தமிழகத்தை சூழ்ந்த வெள்ளத்துக்கு முன்னைய கருத்துக் கணிப்புகளே. வரலாறு காணாத வெள்ளம் தமிழக அரசுக்கு எதிரான உணர்வலைகளை எழுப்பி  உள்ளது. நிவாரணப் பணிகளும் மனிதாபிமான உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை.   மத்திய அரசும் மாநில அரசும்  தமது இருப்பை  வெளிகாட்டுவதற்காக தனித் தனியாக உதவி செய்கின்றன.  ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய  உதவிகள் கிடைக்கவில்லை.
தமிழகத்தின் இயல்பு நிலை முற்றாக முடங்கி உள்ளது.  ஹிந்து உட்பட சில பத்திரிகைகள வெளிவரவில்லை. ஜெயா,  பொலிமர் ஆகிய  தொலைக்காட்சிகள் இயங்கவில்லை. விமானநிலையம் முடங்கியது.  பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. வீடுகள், தொழிற்சாலைகள்,வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தமிழ சட்டமன்ற தேர்தலின் பேசு பொருளாக வெள்ள  அனர்த்தம் முதன்மைப் படுத்தப்படும்.
தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா. எதிர்க்கட்சிகள் பலமடையுமா என்பதை தேர்தல் நெருங்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
ரமணி
தமிழ்த்தந்தி
6/12/15



Saturday, December 5, 2015

நீதிமன்றத் தீர்ப்புக்கு காத்திருக்கும் தலைவர்கள்


  
இந்திய அரசியலும் ஊழலும் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்துள்ளன. ஊழலற்ற அரசாங்கத்தை  அமைக்கப்போவதாக மேடைதோறும்  தொண்டை கிழியக்கத்தும் தலைவர்கள் தேர்தல் காலத்தில் அமைதியாகிவிடுவார்கள்.  வேட்பாளர் பட்டியலில் ஊழல் செய்தவர்களும் கிரிமினல்களும் சுலபமாக இடம் பிடித்து விடுவார்கள். அவர்களின் செல்வாக்குக்கு முன்னால் நேர்மையானவர்களின் செல்வாக்கு செல்லாக்  காசாகிவிடும்.
ராஜீவ் காந்திக்கு எதிரான  போபஸ்பீரங்கி ஊழல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை தகர்த்தெறிந்தது. பின்னாளில் நடைபெற்ற விசாரணையில் ஊழலை நிரூபிக்க முடியவில்லை. கார்க்கில் போரின் வெற்றிக்கு போபஸ்பீரங்கி பெரும் பங்கு வகித்ததனால் காங்கிரஸ் கட்சி பெருமைப்பட்டது. மாட்டுத் தீவன ஊழல்,நிலக்கரி ஊழல், மயானத்தில் கொட்டகை அமைக்க ஊழல்,கலர் ரீவி ஊழல் என மத்திய அரசும் மாநில அரசுகளும் ஊழலை பங்கு போட்டுள்ளன. ஜெயலலிதாவைப் போன்றே மாயாவதி,முலாயம் சிங் யாதவ் ஆகியோரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழகில் சிக்கி உள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு எதிராக  சுமார் 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சில வழக்குகளில் எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டார். கலர் தொலைக்காட்சி ஊழல் வழகில் தண்டனை பெற்று மேன்முறையீட்டில் விடுதலையானார்.  வருமானத்துக்கு அதிகமான சொத்துச் சேர்த்த வழகில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகால சிறைத் தண்டனையும்  100  கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. மேன் முறையீட்டில் ஜெயலலிதா நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிராக அப்பீல் செய்யப்பட்டது.  ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிரான  அப்பீல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்குமுன் தீர்ப்பு வெளிவர  வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் இந்தத் தீர்ப்பிலேதான் அடங்கி உள்ளது.
நாடாளுமன்ற,சட்டசபை உறுப்பினர்கள்ளுக்கு  எதிரான   வழக்கில் அவர்களை குற்றவாளி எனத்தீர்ப்பளிக்கப்பட்டால் மேன் முறையீட்டுத் தீர்ப்பு வரும் வரை அவர்கள் பதவியில் இருக்க முடியும் பதவி பறிபோகாது. இதன் காரணமாக குற்றவாளி  என  நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட  பலர் பதவியில் இருந்து தமது அதிகாரத்தை வெளிப்படுத்தினர். ஆனால், உயர்நீதிமன்றம் வழங்கியதீர்ப்பின்  பிரகாரம் குற்ற வழகில் தண்டணை பெற்றவர் உடனடியாக பதவியை இழந்துவிடுவார். ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ்,திராவிட முன்னேற்றக் கழகதைச் சேர்ந்த செல்வகணபதி ஆகியோர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர்.

 நீதியின் முன் குற்றவாளியாக உள்ள லல்லுவின்  செல்வாக்கு பீகாரில் உயர்ந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில் லல்லுவின் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. பீகார் முதலமைச்சரான நிதீஷ் குமாரின் கட்சியைவிட லல்லுவின் கட்சியிலிருந்து அதிக உறுப்பினர்கள்  வெற்றி பெற்றார்கள்  வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழகில் குற்றவாளி  எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும் சட்டசபை உறுப்பினர் பதவியும் உடனதியாகப் பறிக்கப்பட்டது. மேன்முறையீட்டில் ஜெயலலிதா நிரபராதி என தீர்ப்பு வெளியானபின் நடைபெற்ற இடைத்தேர்தலில்  ஜெயலலிதா அமோக  வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் கட்டுப்பணம் இழந்தனர். நீதியின்  முன் குற்றவாளியான லல்லுவையும் ஜெயலலிதாவையும் விசுவாசிகள் தூக்கித் தலையில் வைத்துள்ளனர்.
பகுஜன் கட்சித்தலைவி மாயாவதி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகிய இருவரும் ஜெயலலிதாவைப்  போல சொத்துக் குவிப்பு வழகில் சிக்கி உள்ளனர். மாயாவது,முலாயம்சிங் யாதவ் ஆகியோரின் குடும்பத்தவர்கள் மீதும்  சொத்துக் குவிப்பு வழக்கு பாய்ந்துள்ளது. அவர்களும் விசாரிக்கப்படுகிறார்கள். இவர்கள் மீதான வழகை சி. பி .ஐ விசாரித்து வருகிறது. மிகவிரைவில் சி.பி.ஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும். நீதியின் தீர்ப்புக்காக இருவரும் காத்திருக்கிறார்கள்.
மேற்கு வங்காள சரித்திரத்தில் சாரதா சிட் பண்ட் மோசடி அரசியல்வாதிகளைத் தலைகுனிய வைத்த மிகப்பெரிய மோசடியாகும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைசேசீர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த மூசடிப்றி விசாரித்துவரும் சி.பி.ஐ முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும் தமது விசாரணை வளையத்தில் வைத்துள்ளது.ஒடிசாவில் ஆட்சிசெய்யும் நவீன் பட்நாயக்கின் அரசும் சாரதா சிட்பண்ட் மோ சடியில் சிக்கி உள்ளது.
இந்திய மத்திய அரசையும், தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக அரசையும் 2ஜி ஊழல் எனும் பிசாசு தூக்கி எறிந்தது.  முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  ஆகியோருக்கு எதிரான 2ஜி வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வழகின் தீர்ப்பு  திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். ராசாவும்,கனிமொழியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டால் அரசிலே அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிமைப்படுத்தப்படும்.


தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டிலும் சன்தொலைக்காட்சி அலுவலகத்திலும் விதிமுறையை மீறி  தொலைபேசி இணைப்புக்கள் வழ்ங்கப்பட்ட வழக்கில்  அவரை ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக இந்தவழக்கு நோக்கப்படுகிறது. அன்புமணிக்கு எதிராக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கிரிமினல் குற்ற வழக்கை  அவர் எதிர் நோக்கி உள்ளார்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேயாழ் ஆரம்பிக்கப்பட்ட  இயக்கம் போது மக்களிடம் பலத்த வரவேற்பைப்பெற்றது. அவருடைய தலைமையில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர். அன்றைய மக்களின் எழுசசியால் அரசியல்வாதிகள் கலக்கமடைந்தனர். அன்னா ஹசாரேயின் வலது கரமாக இருந்த கெஜ்ரிவால் அரசியல்வாதியானார். ஆம் ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து டில்லி மாநில முதல்வரானார். அரசிலில் கால் வைத்த கெஜ்ரிவால் சில விட்டுக்குடுப்புகளுடன் ஆட்சி செய்கிறார்.
அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் போது அரசியல் பழிவாங்கல் என்று முதலில் சொல்வார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டதும் மேல் முறையீடு  செய்வார்கள்.  அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும், குற்றவாளி என்ற  தீர்ப்புகளும் அவர்களுடைய அரசியல் வாழ்கையை  என்றைக்குமே பாதித்ததில்லை.
வர்மா 
தமிழ்த்தந்தி
12/12/15 

Tuesday, December 1, 2015

தமிழக மக்களின் வெறுப்பும் அரசியல் தலைவர்களின் விருப்பும்


தமிழக சட்டசபைத்  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில்  அரசியல் கட்சிகள் அனைத்தும் அறிவிக்கப்படாத தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டன. தேர்தல் போட்டியில் முன்னிலையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு இயற்கை சதி செய்கிறது. வரலாறு காணாத வெள்ளம் ஆளும் கட்சியின்மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  தமிழக அரசின் மந்தகதியிலான நிவாரணமும் எதிர்க்காட்சிகளின் சுறுசுறுப்பும் மக்களை சிந்திக்கத் தூண்டி உள்ளது. தமிழக அரசின் நான்கரை ஆண்டு கால ஆட்சியை மக்கள் எடைபோடத் தொடங்கி  உள்ளனர்.
1991, 2001, 2002, 2011, 2015 ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வர் அரியணையில் வீற்றிருந்தார்.அவர் முதல்வராக இருக்கும் போது சர்வ அதிகாரங்களையும் கையில் எடுத்து சர்வாதியாகவே வீற்றிருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் தப்பு செய்யும் போது தூக்கி எறி யும்    தமிழக மக்கள் அடுத்த தேர்தலில் அவரை முதல்வராக்கி  அழகு பார்த்தனர். ஒருமுறை தண்டிக்கும்   தமிழக வாக்காளர்கள் அடுத்தமுறை மன்னித்து வாழ்வு கொடுத்தனர்.. கருணா நிதியையும்  இதே போன்றுதான்    தமிழக மக்கள் அரியணையில் ஏற்றி இறக்குகின்றனர். இதனால் கருணாநிதி சற்று தெம்பாக இருக்கின்றார். அனால், தமிழக அரசியல் தலைவர்கள்  அவரின் கையை பற்றிப்பிடிக்க மறுக்கின்றனர். இது ஜெயலலிதாவுக்கு  சாதகமாக உள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சிமீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். மக்களின் வெறுப்பை  வெற்றியாக்க வேண்டும் என கருணாநிதி துடிக்கிறார்.
2 ஜி ஊழல் ,மின்வெட்டு ஆகியன காரணமாக திராவிட முன்நீர்ரக் கழகம் ஆட்சியை இழந்தது. தடை இல்லா மின்சாரம் தருவேன் என உறுதியளித்த ஜெயலலிதாவால் அதனை இன்று வரை நிறைவேற்ற முடியவில்லை. தேர்தல்  காலத்தில் ஆட்சிபீடம் ஏறுவதற்காக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் கலந்துவிட்டன. அரசியல் பழிவாங்கல்கள் தாராளமாக நடைபெற்றன. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டடம் செய்தவர்கள் அடக்கப்பட்டனர். ஆட்சியாளர்களின் அராஜகத்துக்கு காவல்துறை துணைபோனது.

அனல்மின்சாரம்,காற்றலை மின்சாரம்,சஊரிய ஒலிமின்சாரம் என்பனவற்றின் மூலம் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்குவேன் என தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா உறுதியளித்தார்.கருணாநிதியின் ஆட்சியில் நடைப்பெற்ற மின்வெட்டு ஜெயலலிதாவின் ஆட்சியிலும் தொடர்கிறது. மின்வெட்டை இல்லாமல் செய்வதற்கான எந்தவித முயற்சியையும் ஜெயலலிதா முன்னெடுக்கவில்லை. 
 ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின்பதவி எப்போ  பறிமுதலாகும் எனத்தெரியாது.   அமைச்சுப் பதவி நிரந்தரமானதில்லை என அரசியல் தெரியாதவர்கள்கூட அடித்துக் கூறுவார்கள். முன்னாள் அமைச்சர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  இதுவரை  24  முறை அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது.
அவர்களில் 11 மட்டும்தான் தொடர்ந்தும் அமைச்சர்களாக உள்ளனர்.ஏனையோரின் பதவி பலவித குற்றச்சாட்டுகளால் பறிக்கப்பட்டது. பின்னர் குற்றச்சாட்டுகலில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படாமலே மீண்டும்  பதவி வழங்கப்பட்டது. அமைச்சர்கள் கொத்தடிமைபோல்  நடத்தபோபடுகிறார்கள்.அமைச்சுப் பதவி கிடைப்பதனால்  தலையாட்டி பொம்மைகளாகவே அவர்கள் வலம் வருகிறார்கள். ஜெயலலிதாவின் புகழ் பாடுவதிலேயே  அமைச்சர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
தமிழகத்தின் சஞ்சிகையான ஜுனியர் விகடன் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜெயலலிதாவின் செல்வாக்கு சரிந்துள்ளது.ஜெயலலிதாவின் செயற்பாடு மோசம் என athikamaano தெரிவித்துள்ளனர். அவரத்க்ஹு செயற்பாடு சுமார் என அதிகமானோர் குஉரி உள்ளனர். தேர்தல் சமயத்தில் சுமார் ஏனஸ் சொன்னவர்கள் அவருக்கு எதிராகத்திரும்பிவிடலாம். அதற்கிடையில் ஜெயலலிதாவின் செயற்பாடு எப்படி இருக்கிறது என்பதை வாக்காளர்கள் உன்னிப்பாக அவதானிப்பார்கள். கருத்துக்கணிப்புக்கு எதிராக ஜெயலலிதா வழக்கு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ர்டம் செல்வது அவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல் விருப்பமானது.
தமிழகத்த்தின் எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் இருக்கிறார். ஆனால் அவர் எதிர்கட்சித் தலிவர்பூல் செயற்படுவதில்லை என 90 சதவீதமாநூர் கருத்துத் தெரிவித்துள்ளனர். வெறும் 10  சதவீதமானவர்கள் மட்டும்தான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக அரசியலைப்பற்றி  தெரியாதவர்கள் அல்லது விஜயகாந்தின் விசுவாசிகள்தான்  அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவராக செயற்படமுடியாத ஒருவர் எப்படி முதலமைச்சராக பதவி வகிப்பார் என மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். இதேவேளை விஜயகாந்தின் வாக்கு வங்கியும் சரிந்துள்ளது. ஆனாலும் தனக்கு அதிகமான தொகுதிகள் வேண்டும் என்பதில்  அவர் விடாப்பிடியாக உள்ளார். க்ளடந்த சட்டசபைத் தேர்தலின் பூத்து வெற்றிபெற்ற அவரிக் கட்சி அங்கத்தவர்கள் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.  இது விஜயகாந்தின் அரசியலில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
திராவிட முன்னேற்ற‌க் கழகத்தின்  வெள்ள  நிவாரண நிதியை தமிழக அரசு ஏற்க மறுத்தது தற்போது சஊடான அரசியலாக உள்ளது.  சுனாமி தாக்குதலின் போது  திராவிட முன்னேற்ற‌க் கழகம்  வழங்கிய நிவாரனநிதியை  அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஸ்டாலினிடம் பெற்றார். இனறு ஸ்டாலினிடம் இருந்து நிவாரண நிதியைப்பெற நீரம் ஒதுக்காது இழுத்தடிக்கப்பட்டது மக்களுக்கு தேவையான தேவையான் உதவிகளையும் தான் மட்டுமே  செய்யவேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பம்.


 இந்தியாவின் முன்னிலை மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவீன் என உறுதிமொழி குஉரி ஆட்சியைப்பிடித்த ஜெயலலிதா, அந்த உறுதிமொழியை  காற்றில் பறக்கவிட்டார்.  அவருக்கு எதிரான  சொத்துக்குவிப்பு வழகில் இருந்து எப்படி வெளியே வருவது என்பதில் அதிக கவனம் எடுத்தார். மக்கள் பிரச்சினைகளில் மூழ்கி இருக்க கொடநாட்டில் ஓய்வெடுத்தார். வெள்ளத்தால் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கையிலும் அவர் கொடநாட்டில் ஓய்வெடுத்தார். எதிர்க்கட்சிகளும்  ஊடகங்களும்  கேள்வி எழுப்பியதனால் கொடநாட்டில் இருந்து சென்னைக்குத் திரும்பினார்.
கருணாநிதி அருமுகப்படுத்திய திட்டங்களை இடைநிறுத்திவிட்டு அதே திட்டங்களை வீருபெயரில் தனது திட்டம் போல் அறிமுகப்படுத்தினார். கருணாநிதியின்  மெட்ரோ ரயில் திட்டத்தை  மோனோ ரயில் திட்டம் என அறிமுகப்படுத்தினார். புதிய தலைமைச்செயலகத்தை கைவிட்டு பழைய் தலைமைச்செயலகத்தில் சட்டசபையை  நடத்துகிறார். பலகூடி றுபாவில கட்டப்பட்ப்ட புதிய தளமைஸ் செயலகத்தை வைத்திய சாலையாக மாற்றியுள்ளார். கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தில் கால் வைக்க மாட்டேன் என்ற சபதத்தை  நிறைவேறினார்.  புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டிய ஜெயலலிதா அதற்கான ஆதாரங்களை இன்றுவரை வெளியிடவில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிரான மனநிலையில் தமிழ மக்கள் உள்ளனர்.  அவரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்குஅவர்கள் தயாராக உள்ளனர். தமிழக அரசியல் தலைவர்கள் சிலரின் செயற்பாடு அதற்கு இடைஞ்ச்சளாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தை  ஆட்சியில் இருந்து அகற்றும் வல்லமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமே உள்ளது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டும் ஜெயலலிதா வெற்றி பெறுவதற்குரிய வழிவகைகளைஈ அவர்கள் செய்கிறார்கள்.
தேர்தல் தேதியை இன்னும் குறிக்கவே இல்லை. அதற்குள்,  தேர்தல்  களேபரம் தொடங்கிவிட்டது. ‘நமக்கு நாமே’, ‘முடியட்டும்... விடியட்டும்!’ என தமிழகம் முழுவதும் முதல்கட்ட  பிரசாரத்தை முடித்துவிட்டார் ஸ்டாலின், ‘விஷன் - 234’ என இலக்கு நிர்ணயித்து ‘ஒளிரும் நிகழ்காலம்... மிளிரும் வருங்காலம்!’, ‘தழைக்கட்டும் தமிழகம்... செழிக்கட்டும் தமிழர்கள்!’, ‘தொடரட்டும் மேம்பாடு... ஜொலிக்கட்டும் தமிழ்நாடு!’ என அடுத்தடுத்த பிரசாரங்களைத் தொடங்கிவிட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் .கழகம் . ‘மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி!’, ‘ஒரு சொட்டு மது இல்லாத  ஊழல் இல்லாத தமிழகம்!’ எனச் சொல்லி தேர்தல் அறிக்கை எல்லாம் வெளியிட்டு அன்புமணி ஒரு பக்கம் தோள் தட்டுகிறார். இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள்,   வைகோ தலைமையில் ‘மக்கள் நலக் கூட்டணி’ குறைந்தபட்ச செயல் திட்டத்தை எல்லாம் வெளியிட்டுத் தேர்தலுக்குத் தயாராகி நிற்கிறது. ‘காங்கிரஸ் தயவில் கூட்டணி ஆட்சி அமையும்’ என ‘திரி’ கொளுத்திப் போட்டு வருகிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். தமிழ் மாநில காங்கிரஸ் மதில் மேல் பூனையாக உள்ளது. நாம் தமிழர் கட்சியும், காந்திய மக்கள் இயக்கமும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இப்படி தேர்தல் களம் தயாராகிக் கொண்டிருக்கிறது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தல் களம்  சூடாகி  விடும்.வாக்காளர்கள் தெளிவான முடிவை எடுக்கத் தயாராகிவிடுவார்கள். அவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட தலைவர்கள் வெற்றி பெறுவார்கள்.
ரமணி