Saturday, October 7, 2017

மெஸ்ஸியின் தலைவிதியை தீர்மானிக்கும் போட்டி

தோல்வியின் விரக்தியில் மெஸ்ஸி 
உதைபந்தாட்ட உலகில்  முன்னிலை வகிக்கும் லியோனல் மெஸ்ஸிக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான இரசிகர்கள் இருக்கின்றனர். ஆர்ஜென்ரீனா, பார்சிலோனா உதைபந்தாட்ட அணிகளின் பலமே  மெஸ்ஸிதான். பர்சிலோனாவுக்கு பல  வெற்றிக் கின்னங்களைப் பெற்றுக்கொடுத்த லியோனல் மெஸ்ஸியால் தாய்நாடான ஆர்ஜென்ரீனாவுக்கு உலகக்கிண்ணத்தைப்  பெற்றுக்கொடுக்க முடியவில்லை.  ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கிண்ண. மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்ரீனா பங்குபற்றுவது சந்தேகமாக உள்ளது. ஆர்ஜென்ரீனா, நாட்டின் வீரர்கள் பலர்  மெஸ்ஸியைப் போன்று  ஐரோப்பியக் கழகங்களுக்காக விளையாடி வருகின்றனர்.

பெருவுக்கு எதிரான தகுதிகாண் போட்டி கோல் எதுவும் அடிக்கப்படாமல்  வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றதால் ஆர்ஜென்ரீனாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென். அமெரிக்காவில் தகுதிகாண் போட்டியில் பத்து நாடுகள் போட்டி போடுகின்றன.முதல் அணியாக பிரேஸில் தகுதி பெற்றுள்ளது. உருகுவே,சிலி,கொலம்பியா ஆகியவை முறையே இரண்டாம்,மூன்றாம்,நான்காம் இடங்களில் இருகின்றன.முதல் நான்கு இடங்களில் உள்ள நாடுகள் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட நேரடியாகத் தகுதி பெற்றுவிடும். ஐந்தாவது இடத்தில் இருக்கும் நாடு நியூஸிலாந்துடன் இரண்டு பிளே ஒவ்  போட்டிகளில் வெற்றி பெற்றால் உலகக்கிண்ணத்தில் விளையாடத் தகுதி பெற்றுவிடும்.
சந்தோஷ உற்சாகத்தில் பெரு ரசிகர்கள்

 
தென் அமெரிக்காவில் பிரேஸில் 38 , உருகுவே 28,  சிலி  26 , கொலம்பியா26, பெரு   25, ஆர்ஜென்ரீனா   25  ஆகியன புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன.பரகுவே,ஈக்குவடோர்,வெனிசுவேலா,பொலிவியா ஆகியன புள்ளிப்பட்டியலில் பின் தங்கியதால் தகுதி இழந்துள்ளன. பிரேஸிலைத் தவிர ஏனைய நாடுகளுக்கு இன்று நடைபெறும் போட்டி பிரதானமாகும். இன்றைய போட்டி விபரம் பராகுவே எதிர் வெனிசுவெலா,உருகுவே எதிர் பொலிவியா,பெரு எதிர் கொலம்பியா, பிரேஸில் எதிர் சிலி, ஈக்குவடூர் எதிர் ஆர்ஜென்ரீனா

பெரு-கொலம்பியா, ஈக்குவடோர்- ஆர்ஜென்ரீனா இந்த இரண்டு போட்டிகளும் இன்று  உலகெங்கும் உள்ள ரசிகர்களால் எதிர் பார்க்கப்படும் போட்டியாகும்.இந்த இரண்டு போட்டிகளும் சமநிலையில் முடிந்தால் ஐந்தாவதுதி இடத்தில் இருக்கும் பெருவுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். இதேவேளை 24  புள்ளிகளுடன் இருக்கும் பராகுவே வெற்றிபெற்றால் அது ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி நியுஸிலாந்துக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைப் பெற்று விடும்.
சந்தோஷ உற்சாகத்தில் பெரு ரசிகர்கள்

பெரு, ஆர்ஜென்ரீனா ஆகிய இரண்டு நாடுகளும் வெற்றி பெற்றாலும் கோல்களின் அடிப்படையில்பேறு முன்னணியில் இருக்கிறது. பெரு 26 பெருகோல்கள் அடித்துள்ளது.  ஆர்ஜென்ரீனா 16  கோல்கள் அடித்துள்ளது. பெருவுக்கு எதிராக  25 கோள்களும், ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக  15 கோள்களும் அடிக்கப்பட்டன. கொலம்பியாவுக்கு எதிரான முதலாவது தகுதிகாண் போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் பெரு தோல்வியடைந்தது. ஈக்குவடோருக்கு எதிரான  முதலாவது தகுதிகாண் போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில்  ஆர்ஜென்ரீனா தோல்வியடைந்தது
ஈக்குவடோரின் தலைநகர் குயிடோ 29,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆர்ஜென்ரீனா ஒரு போட்டியை சம நிலையில் முடித்தது. தகுதிகாண் போட்டியின் கடைசி மூன்று போட்டிகளையும் ஆர்ஜென்ரீனாசமநிலையில் முடித்தது. ஈக்குவடோர் விளையாடிய ஐந்து போட்டிகளும் தோல்வியில் முடிந்தது.


உயிரைக் கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பெருவும்  ஆர்ஜென்ரீனாவும் இருக்கின்றன.

Wednesday, October 4, 2017

வேல்ஸ் அணியில் இருந்து கராத் பேலே விலகல்


வேல்ஸ் அணியின் முன்னணி வீரர் கராத் பேலே காயமடைந்ததால்   ஜோர்ஜியா அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான உலகக்கிண்ண  தகுதிச் சுற்று போட்டியில் இருந்து   விலகியுள்ளார்.

வேல்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கராத் பேலே. லா லிகாவின் முன்னணி அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக பேலே விளையாடி வருகிறார்.

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு உலகக்கிண்ண  உதைபந்தாட்டம்  நடைபெற இருக்கிறது. தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடிய

அதன்படி வேல்ஸ் அணி அயர்லாந்து மற்றும் ஜார்ஜியா அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் கராத் பேலே களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கெண்டைக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கராத் பேலே இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். 

Tuesday, October 3, 2017

ஜூனியர் உலகக்கிண்ண கண்ணோட்டம்


 ஃபீபாவின்  17ஆவது ஜூனியர் உலகக் கிண்ண  (17 வயதுக்குட்பட்டோர்) உதைபந்தட்டப்போட்டி  போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கி 28 ஆம் திகதி  வரை டெல்லி, கொல்கத்தா, கொச்சி, மும்பை, கவுகாத்தி, கோவா ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபீபா) உலக சாம்பியன்ஷிப் போட்டி ஒன்று இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். அதே போல் ஃபீபாசாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி களம் காண்பது வரலாற்றில் இதுவே முதல் நிகழ்வாகும். 

இதில் இந்தியா, பிரேசில், ஜேர்மனி, கானா, ஸ்பெயின், ஜப்பான், சிலி, இங்கிலாந்து, மெக்சிகோ உள்பட மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன  இந்திய அணி அக்டோபர் 6 ஆம் திகதி  டெல்லியில் நடக்கும் தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி, கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் அக்டோபர் 28 ஆம் திகதி  நடக்கிறது.
நடப்பு சம்பியன் நைஜீரியா
இதுவரை நடந்துள்ள ஜூனியர் உலகக்கிண்ண  போட்டியில் இருந்து சில சுவாரஸ்யமான ஒரு அலசல் வருமாறு:

சிங்கப்பூர் கால்பந்து சங்கம் 1977ம் ஆண்டு லயன் சிட்டி கோப்பைக்கான போட்டியை உருவாக்கியது. அது தான் உலக அளவில் நடத்தப்பட்ட முதல் 16 வயதுக்குட்பட்டோருக்கான  உதைபந்தாட்டப்  போட்டியாகும். இந்த போட்டி தான் ஜூனியர்  உலகக்கிண்ண போட்டியின்  முன்னோடியாகும். அதனால் கவர்ந்திழுக்கப்பட்ட சர்வதேசஉதைபந்தாட்ட  சம்மேளனம் ஜூனியர்  உலகக்கிண்ண போட்டியை நடத்த முன்வந்தது.

 முதலாவது ஜூனியர்  உலகக்கிண்ண உதைபந்தாட்டப்  போட்டி சீனாவில் 1985 ம் ஆண்டு நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. முதலில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடத்தப்பட்டது. 1991–ம் ஆண்டில் இருந்து வயது வரம்பு 17 ஆக உயர்த்தப்பட்டது.

 2005–ம் ஆண்டு வரை 16 அணிகள் பங்கேற்றன. 2007–ம் ஆண்டு போட்டியில் இருந்து பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிக்கப்பட்டது.

 ஜூனியர்  உலகக்கிண்ணப் போட்டியில்  அதிக முறை பங்கேற்ற அணிகள் பிரேசில், அமெரிக்கா. இரு அணிகளுக்கும் இது 16–வது  உலகக்கிண்ணப் போட்டியாகும்
 அதிக முறை சாம்பியனான   அணி ஆப்பிரிக்க நாடான நைஜீரியா. அந்த அணி 5 முறை (1985, 1993, 2007, 2013, 2015) மகுடம் சூடியிருக்கிறது. 3 முறை இறுதிஆட்டத்தில் தோற்று இருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் நடப்பு சாம்பியனான அந்த அணி இந்த  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடவில் .தகுதி சுற்றோடு வெளியேற்றப்பட்டிருக்கிறது.

 தொடர்ச்சியாக 4 முறை உலகக்  கிண்ண இறுதி ஆட்டத்துக்கு (1991, 1993, 1995, 1997) தகுதி பெற்று சாதனை படைத்த அணி, மற்றொரு ஆப்பிரிக்க தேசமான கானா.
 நைஜீரியாவை தவிர்த்து, பிரேசில் (3 முறை), கானா (2,')இ மெக்சிகோ (2), சோவியத் யூனியன், சவுதி அரேபியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து (தலா ஒரு முறை) ஆகிய அணிகளும் ஜூனியர்  உலகக்கிண்ணக் கிண்ணத்தைக்  கைப்பற்றியுள்ளன.
 சோவியத் யூனியனும் (1987), சுவிட்சர்லாந்தும் (2009) தங்களது முதல்  போட்டியிலேயே  வெற்றிக்கோப்பையை கையில் ஏந்தின.

 ஜூனியர்  உலகக்கிண்ணம் இளம்புயல்களுக்கு உத்வேகம் அளிப்பதோடு, அடுத்த கட்டத்துக்கு அவர்களை கொண்டுசெல்வதற்கு ஒரு வடிகால் என்றால் அது மிகையாகாது. இப்போது பிரபலங்களாக உள்ள நெய்மார் (பிரேசில், இனியஸ்டா (ஸ்பெயின்), டோனி குரூஸ் (ஜெர்மனி), ஜேம்ஸ் ரோட்ரிகஸ் (கொலம்பியா), 2014–ம் ஆண்டு சீனியர் உலகக் கிண்ண  இறுதி ஆட்டத்தில் ஜேர்மனி அணிக்காக வெற்றிக்குரிய கோலை அடித்த மரியா கோட்சே உள்ளிட்டோர் ஜூனியர்  உலகக்கிண்ணக் கிண்ணப்  விளையாடியவர்கள் தான். இகேர் கேசில்லாஸ், சேவி ஹெர்னாண்டஸ், பெர்னாண்டோ டோரஸ், டேவிட் சில்வா (4 பேரும் ஸ்பெயின்) லான்டன் டோனவன் (அமெரிக்கா), ரொனால்டினோ (பிரேசில்,
 ஜியான்லுகி பப்போன் (இத்தாலி, உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் அடங்குவர்.


  அதே சமயம் ஜூனியர் பிரிவில் கால்பதித்தால் தான் சீனியர் மட்டத்திலும் ஜொலிக்க முடியும் என்பது அல்ல. இப்போது கிளப் அளவிலும், சர்வதேச அளவிலும் கொடி கட்டி பறக்கும் கிறிஸ்டியானா ரொனால்டோ (போர்ச்சுகல்), லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), தாமஸ் முல்லர் (ஜெர்மனி) ஆகியோர் ஒரு போதும் 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பந்தை உதைத்து கிடையாது. ஜூனியரில் 5 முறை பட்டத்தை உச்சிமுகர்ந்திருக்கும் நைஜீரியா, சீனியர் அளவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றை தாண்டியதில்லை என்பது ஆச்சரியமான உண்மை.

 ஜூனியர் மற்றும் சீனியர் இரண்டிலும் உலகக் கிண்ணத்தை வென்ற ஒரே வீரர் பிரேஸிலின்  ரொனால்டினோ தான். 1997–ம் ஆண்டு ஜூனியர், 2002–ம் ஆண்டு சீனியர் ஆகிய  உலகக்கிண்ணக்  கிண்ணத்தை  வென்ற பிரேஸிலின் இரு அணியிலும் ரொனால்டினோ இடம் பெற்றிருந்தார்.

 மெக்சிகோ உருகுவே இடையே 2011–ம் ஆண்டு நடந்த இறுதி ஆட்டத்தை 98,943 பேர் கண்டுகளித்தனர். ஜூனியர்  உலகக்கிண்ணக் கிண்ணப் போட்டியை   அதிகமானவர்கள் நேரில் ரசித்த ஆட்டம் இது தான்.

 2013–ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த  உலகக்கிண்ணப் போட்டியில்  52 ஆட்டத்தில் 172 கோல்கள் பதிவாகின. அதிக கோல்கள் அடிக்கப்பட்ட போட்டி  இது தான்.
அதிக கோல்கள் அடித்த அணிகளின் வரிசையில் பிரேஸில்  (166 கோல்) முதலிடத்திலும், நைஜீரியா (149) 2–வது இடத்திலும் உள்ளன.

 1997–ம் ஆண்டு  உலகக்கிண்ணப் போட்டியில்  நியூஸிலாந்து 0–13 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது, ஒரு அணியின் மோசமான தோல்வியாகும்.

 இந்தியா, நைஜர், நியூகலிடோனியா ஆகிய மூன்று நாடுகள் இந்த முறை அறிமுக அணிகளாக களம் காணுகின்றன. இதில் ஜூனியர்  உலகக்கிண்ண கிண்ணப் போட்டியில் அடியெடுத்து வைக்கும் 18–வது ஆசிய நாடு என்ற சிறப்பை இந்தியா பெறுகிறது.

 இந்தியாவில் நடக்கும் இந்த கால்பந்து திருவிழாவை சோனி டென்2, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. அத்துடன் 185 நாடுகளுடன் ஒளிபரப்பை பகிர்ந்து கொள்கிறது. இதனால் தொலைக்காட்சி  மூலம் ஏறக்குறைய 20 கோடி பேர் இந்த போட்டியை கண்டுகளிப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


Monday, October 2, 2017

ரோகித் சர்மா சதம் அடிக்க வெற்றி பெற்றது இந்தியா

சம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ரோகித்தின் சதமும் அக்ஷர் படேல்,புவனேஸ்வர் குமார், பாண்ட்யா ஆகியோரின் பந்து வீச்சும் கைகொடுக்க இந்திய ஏழு விக்கெற்றால் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் 3-1 என இந்தியா தொடரைக் கைப்பற்றியது.நாக்பூரில் நடைபெற்ற  ஐந்தாவது ஒருநாள் போட்டியில்  வெற்றி பெற்றதன் மூலம் தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.


நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர்   முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.  ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கிய ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் இந்தியப் பந்து வீச்சை   சுலபமாக எதிர்கொண்டனர். 10  ஒப்வர்களில் 60  ஓட்டங்கள் எடுத்த இந்த ஜோடியை பாண்ட்யா பிரித்தார். 32 ஓட்டங்களில்  பிஞ்ச் வெளியேற வார்னருடன் கப்டன் ஸ்மித் இணைந்தார். 16  ஓட்டங்கள் எடித்த ஸ்மித்தை கேதார் ஜாதவ் வெளியேற்றினார்.  அக்சர் படேலின் பந்தி வீச்சு திருப்பு முனையை ஏற்படுத்தியது.. வார்னர் 53 ஓட்டங்களிலும்  ஹென்ஸ்கோம்ப் 13  ஓட்டங்களிலும் அக்சர் படேலின் சுழலில் சிக்கினர்.
  14 ஆவது சதம் அடித்த ரோகித் சர்மா
ஹெட், ஸ்டாய்னிஸ் ஆகியோர் இணைந்து  ஓட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்தினர். 42  ஓட்டங்களை எடுத்த ஹெட்டை அக்சர் வெளியேற்றினார்.  பும்புரா, புவனேஸ்வர் குமார்  ஆகியோரின் வேகம் அவுஸ்திரேலியாவின் ஓட்ட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியது. 46  ஓட்டங்கள் எடுத்த ஸ்டாய்னிஸும்  20 ஓட்டங்கள் எடுத்த மத்தியு வேட்டும் பும்புரவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.  பால்க்னர்   12  ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார்.

அவுஸ்திரேலியா 50 ஓவர்களில்  விக்கெற்களை இழந்து 242  ஓட்டங்கள் எடுத்தது. அக்சர் படேல்3 விக்கெற்களையும், பும்புரா 2 விக்கெற்களையும், பிரவின் குமார்,பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினர்.

243 என்ற இலகுவான் ஒட்ட எண்ணிக்கையுன் களம் இறங்கிய இந்தியா     42.5  ஓவர்களில் விக்கெற்களை இழந்து  வெற்றிபெற்றது. ரகனே ரோகித் சர்மா ஜோடி வலுவான அடித்தளமிட்டு இந்தியாவின் வெற்றியை இலகாக்கியது.    124   ஓட்டங்கள் எடுத்தபோது இந்த ஜோடி பிரிக்கப்பட்டது. ஒருநாள் அரங்கில் இந்த ஆண்டு அதிக பட்சமாக 8 முறை 100 அல்லது  அதற்கு மேல் இந்திய ஜோடி ஓட்டங்களைக்  குவித்தது. முன்னதாக 2002 ஆம் ஆண்டும் 2007  ஆம் ஆண்டும்   . முதலாவது இணைப்பாட்டம்  100  ஓட்டங்களுக்கு மேல் எடுத்தது.
 மூன்று  விக்கெற்களைக் கைப்பற்றிய அக்சர் படேல்
 அரைச்சதம் கடந்த ரகனே 61 ஓட்டங்களில் அட்டம் இழக்க கப்டன் கோஹ்லி களம் இறங்கினார்.  கூல்தரின் பந்தை சிக்ஸருக்கு  விரட்டிய ரோகித்  14 ஆவது சதத்தை எட்டினார்.  11 பவுண்டரிகள்   5  சிக்ஸர்கள் அடங்கலாக  125  ஓட்டங்கள் எடுத்த ரோகித் லம்பாவின் சுழலில் சிக்கி வெளியேறினார். அதே ஓவரில்  39 ஓட்டங்கள் எடித்த  கோஹ்லி ஆட்டமிழந்தார்.
பால்க்னரின் பந்து வீச்சில் தொடர்ச்சியாகைரண்டு பவுண்டரிகள் அடித்த மனிஷ் பண்டே வெற்றியை உறுதி  செய்தார். ஜாதவ் 5 ஓட்டங்களுடனும் மனிஷ் பாண்டே  11  ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகவும் ஹர்த்திக் பண்டையா  தொடர் நாயகனாகவும்  தெரிவு  செய்யப்பட்டனர்.
இளம் வீரர்களுடன் டோனி 

நாக்பூரின் ரம்மியமான காட்சி 






Sunday, October 1, 2017

உலக்கிண்ண உதைபந்தாட்ட ரிக்கெற் விலை குறைப்பு



 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ண உதைபந்தட்டப்போட்டி     அக்டோபர் 6 ஆம்   முதல் இந்தியாவில்   அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், கொல்கத்தா, புதுடெல்லி, கொச்சி, கோவா, கவுஹாத்தி, நவி மும்பை ஆகிய ஆறு இடங்களில் நடைபெறுகிறது. அதற்கான டிக்கெட்டுகள்,  ஃபீபா வின் இணையதளத்தில் விற்கப்படுகின்றன. உதைபந்தாட்டத்தை இந்தியாவில்      பிரபலப்படுத்தும் நோக்கில், டிக்கெட்டுகள் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.
 ரிக்கெற்கள் நான்கு கட்டங்களாக விற்பனையாகிறது.  முதல்கட்டமாக மே முதல் ஜூலை வரை  venue  ரிக்கெற்கள்  விற்கப்பட்டன. இரண்டாம்கட்டமாக, 50 சதவிகிதத் தள்ளுபடியில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ஜூலை 21-ஆம் திகதி  தொடங்கிய மூன்றாம்கட்ட விற்பனையில், 25 சதவிகிதத் தள்ளுபடியில்  ரிக்கெற்கள் விற்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அக்டோபர் 5ஆம் திகதி  வரை இந்த விற்பனை தொடரும். நான்காம்கட்ட விற்பனை, தொடர் தொடங்கும் 6 ஆம்  திகதி  முதல் போட்டி முடியும் 28 ஆம் திகதி வரை நடைபெறும்.