Tuesday, August 19, 2025

அமெரிக்க ஓபனில் மூத்த வீராங்கனையான வீனஸ்


 

  இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்க ஓபனில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸுக்குத் திரும்பும் வீனஸ் வில்லியம்ஸ் , புதன்கிழமை 45 வயதில் ஃப்ளஷிங் மெடோஸில் ஒற்றையர் பிரிவில் 

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் கூற்றுப்படி, 1981 ஆம் ஆண்டு ரெனீ ரிச்சர்ட்ஸ் 47 வயதாக இருந்த பிறகு, இந்தப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் நுழைந்த மிக வயதான வீராங்கனையாக  வீனஸ் ர் இருப்பார்.

அடுத்த வாரம் நடைபெறும் கலப்பு இரட்டையர் போட்டிக்காக வில்லியம்ஸுக்கு ஏற்கனவே அமெரிக்க டென்னிஸ் சங்கத்தால் வைல்ட் கார்டு நுழைவு வழங்கப்பட்டது. ஒற்றையர் போட்டிகள் ஆகஸ்ட் 24 அன்று நியூயார்க்கில் தொடங்குகின்றன.

2000 , 2001 ஆம் ஆண்டுகளில் நடந்த அமெரிக்க ஓபன் உட்பட ஏழு முக்கிய ஒற்றையர் சம்பியன்ஷிப்களுக்கு அவர் சொந்தக்காரர் - மகளிர் இரட்டையர் பிரிவில் மேலும் 14 சம்பியன்ஷிப்கள், அனைத்தும் அவரது தங்கை செரீனாவுடன் வென்றது, மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு. 2022 அமெரிக்க ஓபனில் விளையாடிய பிறகு செரீனா 23 ஸ்லாம் ஒற்றையர் கோப்பைகளுடன் ஓய்வு பெற்றார்.

மூத்த வீராங்கனையான  வீனஸ் வில்லியம்ஸ் கடைசியாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 2023 அமெரிக்க ஓபனில் பங்கேற்று முதல் சுற்றில் தோல்வியடைந்தார். 2019 முதல் அவர் அங்கு ஒற்றையர் போட்டியில் வெற்றி பெறவில்லை.

  கிளெர்வி நுகௌனோவ், ஜூலியட்டா பரேஜா, கேட்டி மெக்னலி, வலேரி குளோஸ்மேன், அலிசா அஹ்ன், ஓய்வு பெறுவதற்கு முன்பு தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடும் பிரான்சின் கரோலின் கார்சியா , அவுஸ்திரேலியாவின் டாலியா கிப்சன் ஆகியோரும்  மகளிர் பிரிவில்  வைல்ட் கார்ட் பெற்றுள்ளனர். 

Monday, August 18, 2025

ஓய்வு பெறுகிறார் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அதிகாரி

அமெரிக்க  ஜிம்னாஸ்டிக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி

லியுங் தனக்கு  ஓய்வு தேவை என்கிறார். .

அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் தலைமை அதிகாரியாக  நியமிக்கப்படுவதற்கு முன்பு NBA இன் துணைத் தலைவராக இருந்த லியுங், லாரி நாசர் துஷ்பிரயோக ஊழலின் வீழ்ச்சியின் மத்தியில் மார்ச் 2019 இல் பொறுப்பேற்றார். நிறுவனத்தின் நிதி, நம்பகத்தன்மை ,உள் கலாச்சாரம் சீர்குலைந்த நேரத்தில் அவர் அந்த அமைப்பை வழிநடத்தினார். கையில் ஆறு வாரங்கள் மட்டுமே பணம் இருந்ததாலும், பொதுமக்களின் பெரும் அவநம்பிக்கையுடன் போராடுவதாலும், லியுங் தனது வேலையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

லியுங் ,  USAG  தலைவர் கேத்ரின் கார்சன்  ஆகிய இருவரும்    விசாரணைகளில் கலந்து கொண்டு அணியின் முன்னாள் மருத்துவர் நாசரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்களின் அனுபவங்களைக் கேட்டன‌ர்.

லியுங்கின் தலைமை கவனிக்கப்படாமல் போகவில்லை. ஒலிம்பிக் சாம்பியன் சிமோன் பைல்ஸ், அதன் விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்க அவர்கள் மீண்டும் மீண்டும் இயலாமைக்கு அவர்களை அழைத்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, நம்பிக்கையை மீட்டெடுக்க அமைப்பின் பணியை ஒப்புக்கொண்டார். இதற்கிடையில், முன்னாள் ஜிம்னாஸ்ட் டொமினிக் மோசியானு - உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யும் பயிற்சியாளர்களை வெளிப்படையாக விமர்சித்த பிறகு USA ஜிம்னாஸ்டிக்ஸிலிருந்து நீண்ட காலமாக அந்நியப்பட்டவர் - இந்த ஆண்டு தேசிய அரங்கிற்குத் திரும்பினார், மேலும் சமீபத்தில் Xfinity Champs விருதுகளில் ஜோர்டான் சிலிஸ் , ஜேட் கேரி ஆகியோருடன்  இணைந்தார்.

அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில்  நடைபெறவிருந்தாலும், லியுங் இன்னும் விலக வேண்டிய நேரம் இது என்று உணர்கிறார். கடந்த சில மாதங்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சவாலானவை, அவர் விலகி மீட்டமைக்க வேண்டிய அவசியத்தை வலுப்படுத்துகிறது. 

ஸ்டாலினின் பக்கம் சாயும் தலைவர்கள் கூட்டணிக் கணக்கு மாறுமா?


 

 தமிழக சட்ட சபைக்கான தேர்தல் பரப்புரையை முதலமைச்சர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித்தலைவர்  எடப்பாடியும் ஆரம்பித்து விட்டனர். பலமான  கூட்டணியுடன் ஸ்டாலின் வலம் வருகிறார்.    கூட்டனிக் கட்சிகள் எவஏஏஇனதுன் ஆதரவு இல்லாமல் தனி ஆளாக எடப்பாடி பரப்புரையைத் தொடங்கிவிட்டார்.

சீமான், பிரேமலதா, ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகிய மூன்று தலைவர்களும் ஸ்டாலினைச் சந்தித்தது தமிழக அரசியலில்  பேசு பொருளாகி உள்ளது. ராமதாஸ்  உடல் நலம் விசாரித்துள்ளார். யாருடனும் கூட்டணி இல்லை என்பதில் சீமான் உறுதியாக இருக்கிறார். ஆகியால் சீமானின் சந்திப்பு பேசப்படவில்லை.

பாரதீய ஜனதாவால் ஓரம் கட்டப்பட்ட பன்னீரும்  எடப்பாடியின்  கூட்டனியில் இருக்கும்  பிரேமலதாவும் ஸ்டாலினைச் சந்தித்ததால் பல விதமான யூகங்கள் உருவெடுத்துள்ளன.

சீமான், ஒபிஎஸ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போனில் பேசி உள்ளார். ஆனால் இவர்கள் அனைவருமே, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பி இருக்கும் முதல்வரிடம் நலம் விசாரித்தோம் என ஒரே மாதிரி சொல்லி வருகிறார்கள்.

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக பக்கம் செல்வது திமுக.,விற்கும், திமுக கூட்டணிக்கும் மிகப் பெரிய பலமாக இருப்பதாக தோன்றும். இப்போது தமிழக அரசியல் களத்தில் அதிமுக, பாஜக தனித்து விடப்பட்டது. இவர்கள் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மட்டும்  உள்ளது.

பிரேமலதாவும் பன்னீரும் திமுகவின்  பக்கம் சென்றுவிட்டால்   வெற்றி இப்போத்த்ர்ர்  உறுதியாகி விடும்.

திமுக கூட்டணிக்கு அனைத்து கட்சிகளும் சென்றால் அது நிச்சயம் திமுக.,வை ஒரு ஆபத்தான, நெருக்கடியான நிலையில் தான் கொண்டு போய் நிறுத்தும். காரணம், கூட்டணி சேர்ப்பது பெரிய விஷயம் அல்ல. கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தலில் தொகுதிகல் ஒதுக்கப்பட வேண்டும்.

 திமுக தனிப் பெரும்பான்மையும் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 234 தொகுதிகளில் திமுக மட்டுமே 180 முதல் 190 வரையிலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும். மீதமுள்ள 44 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடியும். 2016 தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட சம்மதித்த மதிமுக, விசிக போன்ற கட்சிகள் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற் நாடாலுமன்றத் தேர்தலில்  திமுக சின்னத்தில் போட்டியிட மறுத்து விட்டன.

இதனால் திருமாவலவனுன் கட்சியும், வைகோவின் கட்சியும் சொந்த சின்னத்தில்   போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. கட்சியின் சின்னமும் அங்கீகாரமும்  உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலை அவர்களுக்கு உள்ளது.

அவர்கள் இருவருகே  குறைந்த பட்சம் தலா 10 தொகுதிகளை எதிர் பார்க்கிறார்கள். கொம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிக தொகுதிகளை எதிர் பார்க்கிறார்கள். மீதமுள்ள   தொகுதிகளை தான் பாமக, தேமுதிக, ஓபிஎஸ் ஆகியோருக்கு கொடுக்க முடியும். அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை மறுத்தால் கூட்டணியில் சேர மாட்டார்கள் அல்லது தொகுதிகள் குறைக்கப்படும் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறும்.

திமுகவில் இருந்து வெளியேறும் கட்சிகள் அதிமுகவில் சேர வாய்ப்பு இல்லை. அவர்கள்  விஜயின்  கட்சியையே தேர்ந்தெடுப்பார்கள். தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்தும் சுமூகமாக முடிந்து, தேர்தலில் போட்டியிட்டாலும் திமுக மட்டும் 150 இடங்களுக்கும் மேலான இடங்களில் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இது நடக்கா விட்டால், ஆட்சியை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் சொல்லும் எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு திமுக தள்ளப்படும்.

இதற்கிடையில் ஜய்யின் தவெக கட்சி மதுரையில் ஆகஸ்ட் 25ம் திக‌தி நடத்த திட்டமிட்டுள்ள மாநாட்டிற்கு  பொலிஸ் அனுமதி  இதுவரை அனுமதி வழங்கப்படாததால் அடுத்த கட்டமாகநீதிமன்ரம் செல்ல விஜய் தரப்பு தீர்மானித்துள்ளது.

மாநாடு தொடர்பாக 20க்கும் மேற்பட்ட கேள்விகளை  பொலிஸ் எழுப்பியிருப்பதாக தெரிகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தி ஓகஸ்ட் 27ம் திக‌தி வருவதால் பாதுகாப்புக்கு போதுமான கா பொலிஸார்  தேவை என்பதால் மாநாட்டுத் திகதியை மாற்றியமைக்க முடியுமா என்று   கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடித்து விட்டது தவெக. அந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சும், மாநாட்டிற்கு திரண்ட இளைஞர்கள் கூட்டமும் பல மாதங்களாக தமிழக அரசியலில் பேசு பொருளாக இருந்து வந்தது. இப்போது அடுத்த கட்டமாக தனது 2வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மாநாட்டிற்கான வேலைகள் படுதீவிரமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. 

விக்கிரவாண்டி மாநாட்டின் போது பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி முதலில்   மாநாட்டிற்கு அனுமதி மறுத்தனர். இதனால் விஜய் கட்சி மாநாட்டு தேதியை கடைசி நேரத்தில் மாற்றி,  பொலிஸார் விதித்த நிபந்தனைகளின் படி ஏற்பாடு செய்து, ஒரு வழியாக மாநாட்டை நடத்தினார்கள். அதனால் இந்த முறையும் அப்படி எந்த சிக்கலும் வந்து விடக் கூடாது என்பதில் விஜய் மிக தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பதால் மாநாட்டில் ஒவ்வொரு ஏற்பாடும் மிக கவனமுடன் செய்யப்பட்டு வருகிறது.

மாநாட்டிற்கு 12 முதல் 15 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் அது திமுக.,விற்கு நெருக்கடியாக இருக்கும். இதனால் மாநாட்டை நடத்த விடாமல் செய்வதற்காக தான் அனுமதி வழங்க போலீசார் இழுத்தடிப்பதாக தவெக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் மாநாட்டிற்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தாலும், தொடர்ந்து அனுமதி தர தாமதப்படுத்தினாலும், கோர்ட் உத்தரவுடன் மாநாடு நடந்தாலும் அது பொலிஸார் மீதான மக்களுக்கு அதிருப்தி ஏற்படும். கெட்ட பெயரும் வந்து விடும். பொலிஸார் மீதான அதிருப்தியும், கோபமும் திமுக மீது திரும்பவும் வாய்ப்புள்ளது.

விஜய்க்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை தடுக்கவும் வேண்டும், அதே சமயம் மக்களின் அதிருப்தி தங்கள் பக்கம் திரும்பாமலும் இருக்க வேண்டும். அதோடு சமீப காலமாக தமிழகத்தில் நடக்கும் அடுத்தடுத்த மரண சம்பவங்களால் மக்களுக்கு போலீசார் மீது இருக்கும் அதிருப்தியும் அதிகமாகி விடக் கூடாது. இதற்கு திமுக., கட்சியும், தமிழக அரசும் அடுத்து என்ன செய்ய போகிறது?  இந்த நெருக்கடியான சூழலை திமுக எப்படி கையாள போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

ரமணி

17/8/25

  

Thursday, August 14, 2025

தேர்தல் களத்தில் சூர்யா திமுகவின் புதிய வியூகம்


 

 தேர்தல் களத்தில்  சூர்யா

திமுகவின்  புதிய  வியூகம் 

தமிழக தேர்தல் களம் என்றும் இல்லாதவாறு சூடு பிடித்துள்ளது.  முதல்வர் ஸ்டாலினும், எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடியாரும்  தேர்தல்   பரப்புரையை ஆரம்பித்துவிட்டனர்.

ஸ்டாலினுக்கு ஆதரவாக அமைச்சர் படை துணைநிற்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தனி ஒருவனாக வலம் வருகிறார. அதிமுகவின் முக்கியச்தர்களான அன்வர் ராஜா, மைத்திரேயன்  போன்றவர்கள் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைகிறார்கள். அவர்கள் கட்சி மாறி ஸ்டாலினுடன்  போஸ் கொடுக்கும் வரை எடப்பாடிக்கு எதுவுமே தெரியாது. அதன்  பின்னர் அவர்களைக் கட்சியில் இருந்து  எடப்பாடி நீக்குகிறார்.

அதிமுக பாரதீய ஜனதா கூட்டனியால் நொந்துபோய் இருக்கும்  இன்னும் சிலர்  வெளியேறலாம் என்ற கருத்து பரவலாக அடிபடுகிறது.

ஏற்கெனவே பலவீனமான அதிமுக  மேலும் பலவீனமடைகிறது.

கட்டுக்கோப்பாகவும், பலமானதகவும் இருக்கும் திமுக மேலும் வலுவடைகிறது.

அதிமுகவின் கோட்டையான கோவையில்  திமுக காலூன்றிவிட்டது.  கோவையை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் திமுக இறங்க உள்ளது. தேர்தல் காலத்தில் நடிகர்களின் பங்கு அளப்பரியது. எல்லாக் கட்சிகலிலும் நடிகர்களும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்க்களும் உள்ளனர்.  அரசியல் க்ட்சியை  உருவாக்கி தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆசையால் அரசியல் கட்சியை ஆரம்பித்த விஜய் சுறுசுறுப்பாக இயங்குகிறார்.

விஜய்க்கு எதிராக நடிகர் சூர்யாவைக் களம் இறக்க திமுக ஆலோசித்து வருகிறதாம். சூர்யாவின் அகரம் அறக் கட்டளையில் விழா அண்மையில் நடைபெற போது தமிழகமே வியந்து பார்த்தது. அகரம் அறக்கட்டளையினால்  உயர்ந்திருக்கும் மாணவர்களும், நல்ல பதவியில் இருப்பவர்களும் ஆற்றிய உரைகள் பலரையும் கலங்க வைத்தன.

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில், கோவையில் நடிகர் சூர்யாவை களமிறக்க, தி.மு.க., முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய ஆறு சட்டசபை தேர்தல்களில் வென்று, தி.மு.க., ஆட்சி அமைத்தது.   1967, 1971 ஆகிய இரு தேர்தல்களில் மட்டுமே  திமுக தொடர்  வெற்றியைப் பெற்றது.

அதற்கு முற்றூப்புள்ளை வைக்க வேண்டும் என்பதில்  ஸ்டாலின் குறியாக  இருக்கிறார். அப்போது கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா அரசியலில் பலமாக இருந்தார். இன்று ஸ்டாலினுக்கு எதிராக நிற்கும் எப்பாடி ஜெயலலிதாவைப் போல பலமானவர் அல்ல.

ஸ்டாலினின் ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் இருந்தாலும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பிளவுபட்டு, பலமிழந்து இருப்பதும், வலுவான கூட்டணி அமையாததும், தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளது.

ஆனால், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி வலுவாக இருப்பதையும், விஜயின் கட்சியின் வாக்கு  10 சதவீதத்தை தாண்டும் என, பல கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால், குறைந்தது 200 இடங்களில் வெல்ல இலக்கு வைத்துள்ள ஸ்டாலின், அதற்கு தடையாக வடக்கு, மேற்கு மாவட்டங்கள் இருக்கும் என நினைக்கிறார்.

டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி மோதல்   ஸ்டாலினுக்குச் சாதகமாக இருக்கிறது.

கொங்கு மண்டலத்தைப் பலப்படுத்துவதற்காகவே   நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவை, தி.மு.க.,வில் சேர்த்தனர்.

அதை தொடர்ந்து, வரும் சட்டசபை தேர்தலில், கோவையில் ஏதாவது ஒரு தொகுதியில், நடிகர் சூர்யாவை களமிறக்க, தி.மு.க., முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் சம்மதிக்காவிட்டால், நடிகர் சிவகுமார் குடும்பத்தில் ஒருவரை களமிறக்கும் திட்டத்தில் தி.மு.க., இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என, நான்கு பிரபல நடிகர்கள் உள்ள குடும்பம் அது.

எனவே, இவர்களில் ஒருவர் கோவையில் போட்டியிட்டால், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை வீழ்த்தலாம் என ஸ்டாலின் நினைக்கிறார்.

நடிகர் விஜயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் சூர்யா உதவுவார் என தி.மு.க., நினைக்கிறது. கொங்கு மண்டலத்தில் பிரதானமாக இருக்கும் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் என்பதால், ஜாதி பின்புலமும், தி.மு.க.,வுக்கு கைகொடுக்கும் என கணக்கு போட்டு, இவ்விஷயத்தில் தி.மு.க., காய் நகர்த்துகிறது.

  

ஒரு இன்னிங்ஸில் 9 சாதனைகள் அவுஸ்திரேலியாவுக்கு ஆப்பு


அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் இளம் நட்சத்திர வீரர் டிவால்ட் பிரெவிஸ் சதம் விளாசியதோடு மட்டுமல்லாமல் 9 சாதனைகளையும் முறியடித்துள்ளார். டிவால்ட் பிரெவிஸின் இந்த ஆட்டம்சென்னை
 ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் டிவால்ட் பிரெவிஸ். ஐபிஎல் தொடரில் ரூ.2.2 கோடிக்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட டிவால்ட் பிரெவிஸ், 6 போட்டிகளில் விளையாடி 225  ஓட்டங்களை விளாசி தள்ளினார். ஏபி டி வில்லியர்ஸின் மறு உருவமாக உள்ள பிரெவிஸ் வரவால், சிஎஸ்கே ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.
ஆல்பி மோர்கல், டூ பிளசிஸ் ஆகியோருக்கு பின் சிஎஸ்கே அணியின் அடையாளமாக டிவால்ட் பிரெவிஸ் மாறுவார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலும் டிவால்ட் பிரெவிஸ் மிகப்பெரிய எழுச்சியை பெற்று வருகிறார். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ரி20 போட்டியில் 41 பந்துகளில் சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார் டிவால்ட் பிரெவிஸ்.
அதுமட்டுமல்லாமல் இந்த சதத்தின் மூலமாக 9 புதிய சாதனைகளை படைத்திருக்கிறார். 56 பந்துகளில் 125 ஓட்டங்களை விளாசியதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணிக்காக ரி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை விளாசிய வீரர் என்ற டூ பிளசிஸ் சாதனையை தகர்த்துள்ளார். அதேபோல் ரி20 கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக
 ஓட்டங்களை விளாசிய  சென்னை கப்டன் ருதுராஜ் சாதனையையும் பிரெவிஸ் முறியடித்துள்ளார்.
ரி20 கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா மண்ணில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக சதம் விளாசிய முதல் வீரர் பிரெவிஸ் தான். அதேபோல் ரி20 கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா மண்ணில் ஷேன் வாட்சன் 124 ரஓட்டங்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டிவால்ட் பிரெவிஸ் 125 ஓட்டங்கள் எடுத்து முறியடித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் டிவால்ட் பிரெவிஸ் 8 சிக்சர்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக ரி20 கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 சிக்சர்களுக்கு மேல் விளாசிய முதல் தென்னாப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 22 வயதிலேயே ரி20 கிரிக்கெட்டில் சதம் விளாசியதன் மூலமாக, தென்னாப்பிரிக்கா அணிக்காக இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  டிவால்ட் பிரெவிஸ் இன்னும் ஓராண்டில் உச்சக்கட்ட ஃபார்முக்கு திரும்புவார் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பிரெவிஸை வாங்கியுள்ள சிஎஸ்கே அணி, அடுத்ததாக எஸ்ஏ20 லீக் தொடரில் வாங்க முயற்சித்து வருகிறது. அதற்காகவே மும்பை அணியில் இருந்து பிரெவிஸை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறது. இதனால் எஸ்ஏ20 லீக்கிலும் இனி சிஎஸ்கே அணிக்காக பிரெவிஸை பார்க்கலாம். 

Wednesday, August 13, 2025

ஆரம்பமானது ராகுலின் ஆட்டம் 300 எம்பிக்கள் டெல்லியில் கைது


 

 ஆரம்பமானது ராகுலின் ஆட்டம்

300 எம்பிக்கள்  டெல்லியில் கைது 

இந்தியத் தேர்தல் ஆணையமும், பாரதீய ஜனதாக் கட்சியும் சேர்ந்து வாக்குகளைத்திருடியதாக எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

ராகுல் சொல்வது போல் தேர்தல் மோசடி எதுவும் நடைபெறவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பாரதீய ஜனதா வழமைபோல மெளனமாக இருக்கிறது.

எந்த விதமான வசதியும் இல்லாத  ஒரு வீட்டில் 80 வாக்காளர்கள்  இருப்பதாக  ஆதாரத்துடன் ராகுல் தெரிவித்துள்ளார்.

40 ஆயிரம் வாக்காளர்களின் வீட்டு இலக்கம்   ஸீரோ ஸீரோ  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா,பீகார்,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போலி வாக்காளர்கள் வகை தொகையாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரு வாக்காளைரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளின் வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரே வாக்காளர், பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா தொகுதியிலும், கிழக்கு லக்னௌவிலும், மும்பையில் கிழக்கு ஜோகேஸ்வரி தொகுதியிலும் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

தனது ஆய்வுக் குழு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார். அவர்களின் முகவரிகள் தவறானவை அல்லது முகவரிகள் இல்லை அல்லது அந்த முகவரிகளில் அவர்கள் வசிக்கவில்லை.

ஒவ்வொரு வீட்டு முகவரியிலும் 80 வாக்காளர்களும், 46 வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தனி வீடுகளில் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது.

புதிய வாக்காளராகப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6, பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற 33,692 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

 தலித்துகளினதும், முஸ்லிம்களினதும்  பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது போன்ற ராகுல் காந்தியின் குற்றச் சாட்டுகளுக்கு தேர்தல் ஆனையம் பதிலளிக்கவில்லை.

ராகுலின்  குற்றச் சாட்டுகலுக்கு பதிலளிக்கும்படி நீதிமன்றம் கேட்டபோதும்  சட்டத்தில் இடம் இல்லை எனக்கூறியது இந்தியத் தேர்தல் ஆணையம்.

வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகளை விசாரணை நடத்தக் கோரியும், பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய கூட்டணி எம்.பி.க்கள் நேற்று திங்கட்கிழமை  காலை பாராளுமன்ற வளாகத்திலிருந்து டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தை நோக்கி ஒரு பிரமாண்ட பேரணியை நடத்தினர். இந்தப் பேரணிக்கு ராகுல் காந்தி தலைமை தாங்கினார்.

பேரணியால் டெல்லியில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டிருந்தது. துணை இராணுவப்படை அழைக்கப்பட்டிருந்தது.

25 கட்சிகளைச் சேர்ந்த  300 க்கும்  மேற்பட்ட எம்.பி.க்கள் இதில் பங்கேற்றனர். காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி , சிவசேனா, தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர். திமுக எம்.பி. கனிமொழி, திருச்சி சிவா, டி.ஆர். பாலு, துரை வைகோ  உட்படப்  பலர் பங்கேற்றனர். பேரணிக்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. வீதி எங்கும் தடை போட்டு பேரனி தடுக்கப்பட்டது.

பேரணியில் சென்று கொண்டிருந்த எம்.பி.க்களை டெல்லி  பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

 டெல்லி பொலிஸார் எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில், பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். சில எம்.பி.க்கள் பொலிஸ் தடுப்புகளைத் தாண்டி குதித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

  தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார்.

 பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், அகிலேஷ் யாதவ், சஞ்சய் ராவத், சாகரிகா கோஷ், கனிமொழி, ஜோதிமணி  , தமிழச்சி தங்க பாண்டியன், திருச்சி சிவாஉட்பட 300 எம்பிக்கள் கைது செய்ய்யப்பட்டனர்.    பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட அனைவரும்   அருகிலுள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு  இரண்டு மணித்தியாலயத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தப் பிரச்சனை இத்துடன்  முடியப்போவதில்லை.  பெரும் புரட்சியாக வெடிக்கும் அபாயம் உள்ளது என ஆய்வாள‌ர்கள் கருதுகிறார்கள். 

Monday, August 11, 2025

குடைச்சல் கொடுத்த பத்திரிகையாளரைக் கொன்றது இஸ்ரேல்


 

  குடைச்சல் கொடுத்த

  பத்திரிகையாளரைக்  

கொன்றது இஸ்ரேல் 

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அல் ஜஸீராவின் பிரதான செய்தியாளரான அனஸ் அல் ஷெரீஃப்  உட்பட ஏழு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஐவர் அல் ஜஸீராவின்  ஊழியர்கள்.

இஸ்ரேலின் கொடுமைகளை  உலகுக்கு வெளிச்சம்  போட்டிக் காட்டியவர்களில்  அனஸ் அல் ஷெரீஃப் முக்கியமானவர். அனஸ் அல் ஷெரீஃப்  வெளியிடும் உண்மைச் செய்திகளால்  இஸ்ரேல் பெரும்  நெருக்கடிகளைச் சந்தித்தது. 

கிழக்கு காஸா நகரத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் உள்ள கூடாரத்தில்  ஊடகவியலாளர்கள் தங்கி இருந்தனர். அனல் அல் ஷெரீஃப்புக்கு வைக்கப்பட்ட குறியில் அவரின் சகாக்கள்  ஆறு பேர் பலியானார்கள்.

இஸ்ரேலின் தாக்குதலில்  அல்-ஷெரீப், அல் ஜசீரா நிருபர் முகமது கிரீகே,க‌மரா ஒபரேட்டர்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌபால்  , மோமென் அலிவா உட்பட மொத்தம் ஏழு பேர் கொல்லப்பட்டதாக கட்டாரைத் தளமாகக் கொண்ட ஒளிபரப்பாளர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் போல் பவனி வரும் அல் ஷெரீப்  ஹமாஸ் பிரிவின் தலைவராக இருந்தார்,  "இஸ்ரேலிய பொதுமக்கள், இஸ்ரேலிய படைகள் மீது ராக்கெட் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு அவர் பொறுப்பேற்றார்" என்று இஸ்ரேலிய இராணுவம்  வெளியிட்ட   அறிக்கையில் தெரிவித்துள்ளது, காஸாவில் கிடைத்த உளவுத்துறை  ஆவணங்களை   இஸ்ரேல் ஆதாரமாக மேற்கோள் காட்டியுள்ளது.

ஆனால் காஸா   போரின்  கொடூரங்களை  பிரதான செய்தியாக  வெளியிட்டதற்காக அவர் குறிவைக்கப்பட்டதாகவும், இஸ்ரேலின் கூற்றுக்கு ஆதாரங்கள் இல்லை என்றும் மனித உரிமை ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

அல் ஷெரீப்பை இஸ்ரேல் குறிவைப்பதால் காஸாவில் இருந்து  வெளியேறுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதைத் தெரிந்துகொண்ட அல் ஷெரீப்  காஸாவை விட்டு  வெளியேற மறுத்துவிட்டார்.

அல்-ஷெரீப்பை "காசாவின் துணிச்சலான பத்திரிகையாளர்களில் ஒருவர்" என்று அழைத்த அல் ஜசீரா, இந்த தாக்குதல் "காசாவின் ஆக்கிரமிப்பை எதிர்பார்த்து குரல்களை அடக்குவதற்கான ஒரு தீவிர முயற்சி" என்று கூறியது.

  இஸ்ரேலிய ஐடிஎஃப் செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அத்ரே,  கடந்த மாதம் அல்-ஷெரீப்பின் வீடியோவை X இல் பகிர்ந்து   அவர் ஹமாஸின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டினார். அந்த நேரத்தில், கருத்துச் சுதந்திரம் குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஐரீன் கான், அதை "ஆதாரமற்ற கூற்று" என்றும் "பத்திரிகையாளர்கள் மீதான அப்பட்டமான தாக்குதல்" என்றும் தெரிவித்தார்.

   "எந்த நேரத்திலும் நான் குண்டுவீசித் தியாகியாகலாம் என்ற உணர்வுடன்" வாழ்வதாக  ஜூலை மாதம், பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவிடம்   அல்-ஷெரீஃப்   கூறினார்.

"நம்பகமான ஆதாரங்களை வழங்காமல் பத்திரிகையாளர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தும் இஸ்ரேலின் முறை, பத்திரிகை சுதந்திரத்திற்கான அதன் நோக்கம், மரியாதை  ஆகியவற்றைச் சாடுவதாக   பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும்  குழுவின் பிராந்திய இயக்குனர் சாரா குடா கூறினார்.

  28 வயதான அல் ஷெரீஃப்  மனைவியையும்,  இரண்டு சிறு குழந்தைகயும்  விட்டுச் செல்கிறார். டிசம்பர் 2023 இல் காஸா நகரில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள குடும்ப வீட்டின் மீது இஸ்ரேலிய தாக்குதலில் அவரது தந்தை கொல்லப்பட்டார்.

 ஹமாஸ் , பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டிய ஆறு காஸா பத்திரிகையாளர்களில் அல் ஷெரீப்பையும் ஒருவராக இஸ்ரேல் குறிப்பிட்டது.


  கடந்த மார்ச் மாதம்   ஹோசம் ஷபாத் , ஓகஸ்ட் மாதத்தில்   இஸ்மாயில் அல்-கோல்  அவரது கமரா மன் ராமி அல்-ரிஃபி உட்பட பல அல் ஜசீரா பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் இஸ்ரேல் கொன்றுள்ளது .

500,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக்  கொண்ட  X கணக்கில்  இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு  இஸ்ரேல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காஸா நகரத்தின் மீது தீவிரமாக குண்டுவீசி வருவதாக  அல் ஷெரீப், பதிவிட்டார். அதுவே அவரது கடைசிப்பதிவானது.

 

இதற்கிடையில், இந்தக் கொலை இஸ்ரேலிய தாக்குதலின் தொடக்கத்தைக் குறிக்கலாம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. "பத்திரிகையாளர்களின் படுகொலையும், எஞ்சியிருப்பவர்களை அச்சுறுத்துவதும், காசா நகரில் ஆக்கிரமிப்பு திட்டமிட்டுள்ள ஒரு பெரிய குற்றத்திற்கு வழி வகுக்கிறது" என்று அந்தக் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைமை நிருபர் வேல் அல் தஹ்தூவின் மனைவி, மகன், மகள்   , பேரன் ஆகியோர்   2023  ஆம் ஆண்டு ஒக்டோபரில்  கொல்லப்பட்டனர். சில வாரங்களுக்குப் பிறகு அல் ஜசீரா கமரா மன் சமர் அபு டாக்கா கொல்லப்பட்டார்.  

காஸாவிற்குள் வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அனுமதிக்காத இஸ்ரேல், உள்ளூர் பத்திரிகையாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது . 2023 அக்டோபர் 7 ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து 237 பத்திரிகையாளர்களை இஸ்ரேல்  கொன்றுள்ளதாக காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாமோதலில் குறைந்தது 186 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே பத்திரிகையாளர்களை குறிவைத்ததாக கூறப்படுவதை இஸ்ரேல் மறுக்கிறது.