Tuesday, July 25, 2023

தனித்து விடப்பட்ட மணிப்பூர்

 இந்திய மாநிலங்களில்  ஒன்றான மணிப்பூரில் நடந்தகொடூரம்  உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலக நாடுகளால்  மிகவும் மதிக்கப்படும் தலவராக பவனிவரும் மோடியின்   பாரதீய ஜனதாஆட்சி செய்யும்  மணிப்பூரில் இரண்டு மாதங்களாகக் கலவரம் நடக்கிறது.

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே  மோதல் என  வெளி உலகுக்குச் சொல்லப்படுகிறது. இளம்  பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியன் வன்கொடுமை செய்தது  வெளி உலகுக்குத் தெரியாமல் மறைப்பப்பட்டதுமேமாத 4 ஆம் திகதி நடந்த அந்தச் சம்பவம் கடந்த கடந்த ம் 25 ஆம் திகதிதான் வெளி உலகுக்குத்  தெரிய வந்தது." நெஞ்சம் வலிக்கிறது குற்றவாளிகள் தப்ப முடியாது என  பிரதமர்  ஒரு வரியில் முடித்துவிட்டார்.   

பாரதீய ஜனதாவின் ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அரங்கேறிக்கொண்டிருக்கும் வன்முறையில், குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள், நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பூதாகரமாக வெடித்திருக்கிறது.  மே 4-ம் திகதியே நடந்த  இக் கொடூரம்  தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவுசெய்திருந்தும்  குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய பிறகே, இப்படியோர் இழிவான சம்பவம் வெளிச்சத்துக்கே வந்தது. அதன் பின்னரே குற்றவாளி கைது செய்யப்பட்டார்.  

இத்தகைய சம்பவம் ஒன்று நடந்தது என்று தெரிந்தும்கூட பொலிஸார் இவ்வளவு நாள் இது பற்றி வாய்திறக்காமல் இருந்தனர். இப்படியிருக்க, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை இந்திய  நாடாளுமன்றத்தில் பெரும் விவாதப்பொருளாக மாற்ற முனைப்பு காட்டி வருகின்றன. இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றமும், `நடவடிக்கை எடுக்கத் தாமதப்படுத்தினால் நாங்களே தலையிட நேரும்' என்று எச்சரித்திருக்கிறது.

 பாதிக்கப்பட்ட இரு பெண்களில் ஒருவர், ``பொலிஸார்தான் எங்களை அந்தக் கும்பலிடம் விட்டுச் சென்றனர்" என்று தனியார் ஊடகப் பேட்டியில் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

  மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்துக்கு  பழங்குடி அந்தஸ்து வழங்குவதர்கு எதிர்ப்புத் தெரிவித்து குகி பழங்குடி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து நடத்திய  போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையால் 100 பேர் உயிர்  இழந்ததாக  அதீகார பூவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துகள் அடித்து நொருக்கித்  தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்கள் , தேவாலயங்கள் ஆலயங்கள் தீவைக்கப்பட்டன. இனக் குழுக்களுக்கிடையேயான  மோதல்  மதக் கலவரமானது.

இரன்டு மாதங்களாக நடைபெற்ற கலவரங்களை  மணிப்பூர் அரசும்,மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. மே மதம் 4 ஆம் திகதி நடைபெற்ற கொடூரச் சம்பவத்தை  மோடியும், அமித் ஷாவும் அறிந்திருப்பார்கள் அதுபற்றி மூச்சுக்கூட விடவில்லை.

பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் சிறு சம்பவம் நடந்தாலும் , தலையிடும் ஆளுநர்களும், பாரதீய ஜனதாத் தலைவர்களும் அமைதியாக  இருக்கிறார்கள். பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீர் குலையலாம் . அதனை மத்திய அரசு தட்டி கேட்கப் போவதில்லை.

மணிப்பூரில் இரண்டு  மாதங்களாக நிகழ்ந்த வன்முறை சம்பவத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 400 பேர் காயம் அடைந்தனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோதி மணிப்பூருக்குச் சென்று மக்களை சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. மணிப்பூர் முதலமைச்சர் பிரென் சிங்கும் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.இந்த நிலையில் ராகுல் காந்தி பாதிக்கபபட்டவர்களை காண மணிப்பூருக்கு வியாழக்கிழமை புறப்பட்டார். சுரசந்துபுர் பகுதியில் உள்ள நிவாரண முகாமை பார்வையிடச் சென்ற ராகுல் காந்தியை பிஷ்னபூர் அருகே காவல்துறை தடுத்து நிறுத்தியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக .என். செய்தி முகமையிடம் காவல்துறை கூறியது. இருப்பினும் அவர் ஹெலிகாப்டரில் தனது பயணத்தை தொடர்ந்தார். நிவாரண முகாம்களை பார்வையிட்ட ராகுல், அங்குள்ளவர்களோடும் கலந்துரையாடினார். குழந்தைகளோடு அமர்ந்து உணவருந்தினார். ராகுலால் செய்ய முடிந்ததை பிரதமரால் ஏன் செய்ய முடியாது அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு மோடியைத் தடுப்பது எது?

தமிழகத்தில்  திராவிட முன்னேற்ரக் கழக் அமைச்சர்களில் வீடுகளில் நடைபெறும் சோதனைகளுக்கு  மத்திய படையை அனுப்பும் பாரதீய ஜனதா மணிப்பூரில் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

  மணிப்பூரில் நடைபெறும் கொடூரங்கள் வெளி  உலகுக்குத் தெரியாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில்  பாதிக்கப்படும் மக்களுக்கும் மோடிதான்  பிரதமர். இதனை உணர்ந்துகொண்டு மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை செய்தவர்களை  பொதுமன்னிப்பில் விடுதலை செய்யும்  தலைவர்கள்  இருக்கும் வரை நீதி கிடைப்பது  தாமதமாகலாம்.

 

மியான்மார் காட்டுக்குள் இரகசிய மருத்துவமனை

தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களை சிறையில் அடைத்து  இராணுவம் ஆட்சி செய்யும் நாடு மியான்மார்.  உள்நாட்டுக் கலவரM, முஸ்லிம்களுகு எதிரான  வன்முறை என  யுத்த களமாக  இருக்கும் மியான்மாரில் காயமடைந்தவர்களைப் பராமரிப்பதர்காக  காட்டுக்குள் இரகசியமாக  ஒரு மருத்துவமனை இயங்குகிறது.

காயமடைந்த   ஒரு இளைஞன்  அவசர சிகிச்சை பிரிவுக்குள் சக்கரம் கொண்டு செல்லப்படுகிறான், அவனது உடல் அடர்த்தியான ஒரேஞ்சு போர்வையால் மூடப்பட்டிருந்தது. ஊழியர்கள் அவரைச் சுற்றி வளைத்து, அவரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். இளைஞனைக் காப்பாற்ற ஒரு அறுவை சிகிச்சை தேவை. சரியான விளக்குகள் தேவை. ஜெனரேட்டர் எரிகிறது   அவசர அறை   இது ஒரு மரக் குடிசையை விட சற்று  பெரியது. 

  17 வயது சிறுவன் ஒரு மோட்டார் தாக்குதலில் காயமடைந்தான், அது அவனது உடலில் சிறு துண்டுகள்  புத்சசிந்துள்ளன. . மியான்மர் ராணுவம் தாக்கியபோது அவர் மடாலயத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். துளிகள் இணைக்கப்பட்டு அவர் நிலைப்படுத்தப்படுகிறார். அவனை வாழவைத்த கட்டுகள் அவிழ்க்கப்படும்போது அவனது குறைந்த முனகல்களால் மட்டுமே அமைதி உடைகிறது.

இது வாழ்க்கைக்கான போராட்டம், அவர்களுக்கு எதிராக முரண்பாடுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன, ஆனால் ஒவ்வொரு நாளும் - இங்கே இந்த மறைக்கப்பட்ட மருத்துவமனையில் - அற்புதங்கள் நடக்கின்றன.

தலைமை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மியோ காந்த் கோ கோ,[ 37], பச்சை நிற டிராக்சூட் மற்றும் அவரது முத்திரை ஸ்லைடர்களில் தோன்றினார். ஒரு அற்புதமான உருவம், அவர் நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் உள்ள ஒரு உயர்மட்ட மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.2021 இல் மியான்மரின் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர்  சண்டையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க அவர் காட்டிற்குச் சென்றார்.

"புரட்சிகரப் பெயரால்" அறியப்பட்ட, 35 வயதான டாக்டர் வின்சென்ட் யாங்கூன் மருத்துவ நிறுவனத்தில் மற்றொரு பட்டதாரி ஆவார். அவர் பணிபுரிந்த இரண்டாவது முன்னணி மருத்துவமனை இதுவாகும். 

இது ஒரு வித்தியாசமான உலகம் போன்றது - வெளியே சேறு, மழை, காடு மற்றும் குடில்கள் - அது ஒரு நவீன மருத்துவமனை போன்றது, சரியான அறுவை சிகிச்சை அரங்குடன் உள்ளது.அறுவை சிகிச்சை நிபுணர்கள் தயார் செய்யும் போது, ஊழியர்கள் அறுவை சிகிச்சை கருவிகளை சேகரிக்கின்றனர். நோயாளிக்கு வேலை செய்யும் மணிக்கணக்கில் இங்கேயே இருப்பார்கள்.

குடும்ப உறுப்பினராகக் காட்டிக் கொள்ளும் உளவாளி ஒருவர் ஜிபிஎஸ் ரீடிங்கை எடுத்து ராணுவத்திடம் கொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் ஊழியர்கள் வாழ்கின்றனர். இராணுவ ஜெட் விமானங்கள் இயங்கும் போது கீழே விழுந்தால், குழு தொடர்ந்து இருக்கும்.

மியான்மரில் - பர்மா என்றும் அழைக்கப்படும் - இன சிறுபான்மையினருக்கும் இராணுவ ஆட்சிக்குழுவிற்கும் இடையே பல தசாப்தங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இது பிப்ரவரி 2021 இல் உச்சத்தை எட்டியது, மக்கள் மற்றும் அவர்களின் ஜனநாயக வாக்குகளுக்கு எதிராக இராணுவ ஆட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது.

போராட்டங்கள் வன்முறையாக மாறியபோது, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நகரங்களை விட்டு வெளியேறி எதிர்ப்பில் சேர்ந்தனர், பெரும்பாலும் தங்கள் சொந்த புரட்சிகர சக்திகளை உருவாக்கினர்.  இப்போது, நாடு முழு உள்நாட்டுப் போரில் திறம்பட உள்ளது. ஆனால் மியான்மர் மக்களின் அவலநிலை உக்ரைனில் நடந்த போரினால் மறைக்கப்பட்டுள்ளது, சர்வதேச சமூகம் அவர்கள் ஆதரவளிப்பதாகக் கூறும் எதிர்ப்பிற்கு இராணுவ உதவி அல்லது உதவியை வழங்கத் தவறிவிட்டது.சிறிய வெளிநாட்டு உதவிகள் நாட்டிற்குள் நுழைகின்றன. பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்த மக்கள் இப்போது மூங்கில் மற்றும் தார்ப்பாய் முகாம்களில் சுயமாக கட்டப்பட்ட முகாம்களில் வாழ்கின்றனர். 

"அண்டை நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்து நாம் செய்யும் அல்லது பெறாத ஆதரவு தீய இராணுவத்தை வேரோடு பிடுங்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை தீர்மானிக்கும்" என்று ஒரு எதிர்ப்பு பட்டாலியன் தளபதி என்னிடம் கூறுகிறார். 

சீனா மியான்மரை எல்லையாகக் கொண்டுள்ளது மற்றும் புவிசார் அரசியல் ரீதியாக ஒரு பெரிய வீரராக உள்ளது. இந்த நாடு இந்தியா, பங்களாதேஷ், லாவோஸ் ம, தாய்லாந்து ஆகிய நாடுகளுடனும் எல்லையாக உள்ளது. 

மியான்மரில் தேவைப்படும் மனிதாபிமான உதவியின் அளவு, இராணுவ ஆட்சிக் குழுவால் விதிக்கப்பட்ட அணுகல் கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலும் காணப்படவில்லை. அவை எவையும்  அறிக்கை செய்யப்படவில்லை. 

நோயாளிக்கு இரத்தம் தேவைப்படுகிறது. மயக்க மருந்து நிபுணர், மருத்துவமனையின் இணை நிறுவனரான கிம், நிச்சயமற்ற வகையில் "இரத்தத்தைப் பெற" கோரொக்கை விடுக்கிறார்.. நோயாளிகளின் குடும்பங்கள் நன்கொடை வழங்க முடியுமா என்று கேட்க எழுந்திருக்கிறார்கள். மருத்துவமனையின் பாதுகாவலர்கள் அதிக இரத்தத்தைக் கண்டறிய அருகிலுள்ள கிராமத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.அரை மணி நேரத்திற்குள், மூன்று லிட்டர் இரத்தம் அறுவை சிகிச்சை அரங்கிற்கு வழங்கப்படுகிறது.   . 

மருத்துவமனையின் நிறுவனர்களான டாக்டர் பாங்,  கிம் , மிஸ் லின் ஆகிய மூன்று பேரும் இளம், திறமையான மற்றும் நம்பமுடியாத தைரியமானவர்கள். ஒரு காலத்தில் நகரவாசிகளாக இருந்த அவர்கள் இப்போது எதிர்ப்பின் ஒரு பகுதியாகவும், தேடப்படும் பட்டியலில் உள்ளவர்களாகவும் உள்ளனர்.

டாக்டர் பாங், ஒரு பொது பயிற்சியாளர், யாங்கூனில் தனது தனிப்பட்ட பயிற்சியை முடித்துவிட்டு கிராமப்புறங்களுக்குச் சென்றார், அங்கு அவர் தனது சக ஊழியர்களைச் சந்தித்து மருத்துவமனையை நிறுவினார். இது நன்றாக செயல்படுகிறது ஆனால் அதன் வளங்கள் குறைவாகவே உள்ளன மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மிகவும் அடிப்படையானவை.  

Monday, July 24, 2023

மாற்றம் காணாத ஏமாற்ற அரசியல்


 டட்லி- செல்வா, பண்டா - செல்வா காலத்தில் ஆரம்பமான ஏமாற்ற அரசியல் ரணின் காலத்திலும் தொடர்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.  ஆனால்,  இலங்கை அரசியலில் ஏமாற்றமும் மாறாதது. 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கையில் எடுத்து 36 வருடங்கள் கடந்து விட்டன. ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற ரணிலும் 13 ஐக் கையில் வைத்துக்கிண்டு அரசியல் செய்கிறார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987  ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் , இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவுக்கும் இடையே யூலை 29, 1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். அந்த  ஒப்பந்தம் கோப்புகளில் மட்டும் தான்  இருக்கும் என்பதை  அன்றைய அரசியல் நிலை  வெளிப்படுத்தியது.

போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற  தொனியுடன்  அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன வெளிப்படையாக தமிழர் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்ததார். அதன் பின்னர் பிறேமதாச வெளிப்படையாக இந்திய எதிர்ப்புணர்வை விதைத்தார். இடசிய்ல் வந்த ஒருவர் மரம், செடி,கொடி என்ரார்.  சமாதானப் புறாவாக தோன்றைய சந்திரிகா  கடைசியில் எல்லாவற்றையும் கைவிட்டார். 13+ என்று  சொன்ன  மகிந்த ராஜபக்ஷ வும்  கைவிட்டார்.

இப்போது ரணிலின்  முறை. வாருங்கள் கதைக்கலாம் என வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அழைப்பு விடுத்க்தார்..வழக்கம்  போல சில தமிழ்த் தலைவர்கள்  முரண்டு பிடித்தனர். அவருடன் பேசி, ஆகப்போவது  ஒன்றும்   இல்லை என அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்ன சாத்திரம் பலித்து விட்டது.

இந்தியாவுக்குச் செல்லும்  முன்பு தமிழ்த்தலைவர்களுடன்  பேசி முடித்து விட வேண்டும் என விரும்பிய ரணிலி ஆசை நிறை வேற்றப்பட்டது. பொலிஸ் அதிகாரம் இல்லை. வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என்ற ஜனாதிபதியின் யோசனையைத் தமிழ்த் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்போது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா, இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  பிரச்சனைக்குத் தீர்வைத் தமிழ்த்தைவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்று அழுத்தம்  கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக   ஜனாதிபதி ரணில் மேலும் கருத்துத் தெரிவிக்கையி,

“வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே தாம் விரும்புகின்றேன், அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது எனது நோக்கமல்ல.

 பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு   ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை. அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு, பொலிஸ் அதிகாரங்கள் தவிர பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க முடியும்.பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும். இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை.” என தெரிவித்துள்ளார்.


  சந்திரிகா  ஜனாதிபதியாக  இருந்தபோது சமர்ப்பித்த யோசனையை பாராளுமன்றத்தில் கிழித்து எறிந்தது யார் என்பதித் தமிழ் மக்கள் மறக்கவில்லை. சரத் வீர சேகர போன்ற சண்டியர்கள்  இருக்கும்  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை  கிடக்கப்போவதில்லை.

இந்திய  - இலங்கை ஒப்பந்தப்படி  13 ஐ அமுல் படுத்த வேண்டும் கே.எஸ்.அழகிரி,அண்ணாமலி போன்ர தமிழகத் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். வடக்கு ,குழக்கு தமிழ்த் தலைவர்கள்  இந்திய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திலும்  13 ஐ அமுல் படுத்துமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத் தலைவர்களின் வலியுறுத்தல், வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களின் கோரிக்கை தொடர்பாக  இந்தியப் பிரதமர் மோடி ஏதாவது  கேட்டல் அதற்குப் பதிலளிப்பதற்கு  ஆயத்தமாக   ரணில் சென்றுள்ளார். எப்பவோ செத்துப்போன 13  ஐ ஐ.சி.யுவில் வைத்து உயிர் கொடுக்க  சிலர் முயற்சிக்கிரார்கள்.

 

Wednesday, July 19, 2023

விம்பிள்டன் ரவுண்ட் அப்


  விம்பிள்டன்  பெண்கள் பெண்கள் இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரிகோவா, சீன தைபேயின் நீண்ட கால கூட்டாளியான ஹ்சீஹ் சு-வேயுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.அவர்கள் இரண்டாவது விம்பிள்டன் பட்டத்திற்காக 7-5, 6-4   என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் ஸ்ட்ரோம் ஹண்டர்,  பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸை தோற்கடித்து, 2019  ஆம் ஆண்டுக்குப் பின்னர் சம்ப்யனானார்கள். 37 வயதில், ஸ்ட்ரோகோவா ,ஹ்சீஹ் ஜோடி கிராண்ட்ஸ்லாமில் இரட்டையர் இறுதிப் போட்டிக்கு வந்து வெற்றி பெற்ற   வயதில் மூத்த ஜோடியாக ஆனார்கள்

ஜப்பானிய டீன் ஏஜ்  17 வயதான  டோகிடோ ஓடா தனது முதல் விம்பிள்டன் ஆடவர் சக்கர நாற்காலி ஒற்றையர் பட்டத்தை  வெர்ன்றார். 17 வயதான ஏஸ் ஹெவெட்டை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து விம்பிள்டன் சம்பியன்ஷிப்பில் சக்கர நாற்காலி ஒற்றையர் பட்டத்தை வென்ற இளையவர் ஆனார்.

சக்கர நாற்காலி குவாட் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தின் நீல்ஸ் வின்க் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஹீத் டேவிட்சனை தோற்கடித்தார்.

டேவிட்சன் மற்றும் கனடாவின் ராபர்ட் ஷா ஆகியோருக்கு எதிரான வெற்றியின் மூலம் குவாட் இரட்டையர் பட்டத்தை விங்க் மற்றும் அவரது கூட்டாளி சாம் ஷ்ரோடர் 24 மணிநேரத்தில் வென்றனர்.

ஆண்கள் ஒற்றையர் - கார்லோஸ் அல்கராஸ்

பெண்கள் ஒற்றையர் - மார்கெட்டா வோன்ட்ரோசோவா

ஆண்கள் இரட்டையர் - வெஸ்லி கூல்ஹோஃப் , நீல் ஸ்குப்ஸ்கி

பெண்கள் இரட்டையர் - ஹ்சீஹ் சு-வெய் , பார்போரா ஸ்ட்ரிகோவா

கலப்பு இரட்டையர் - மேட் பாவிக் மற்றும் லியுட்மிலா கிச்செனோக்

சக்கர நாற்காலி ஆண்கள் ஒற்றையர் - டோகிடோ ஓடா

சக்கர நாற்காலி பெண்கள் ஒற்றையர் - டைட் டி க்ரூட்

சக்கர நாற்காலி குவாட் ஒற்றையர் - நீல்ஸ் வின்க்

சக்கர நாற்காலி ஆண்கள் இரட்டையர் - ஆல்ஃபி ஹெவெட் மற்றும் கோர்டன் ரீட்

சக்கர நாற்காலி பெண்கள் இரட்டையர் - டீடே டி க்ரூட் மற்றும் ஜிஸ்கே கிரிஃபியோன்

சக்கர நாற்காலி குவாட் இரட்டையர் - சாம் ஷ்ரோடர் மற்றும் நீல்ஸ் வின்க்


இளையோர்

ஆண்கள் ஒற்றையர் - ஹென்றி சியர்ல்

பெண்கள் ஒற்றையர் - கிளெர்வி நனூ

ஆண்கள் இரட்டையர் - ஜக்குப் பிலிப் ,கேப்ரியல் வல்பிட்டா

பெண்கள் இரட்டையர் - அலெனா கோவகோவா , லாரா சாம்சோனோவா

ஆண்கள்   U14 ஒற்றையர் - மார்க் செபன்

பெண்கள் U 14 ஒற்றையர் - லூனா வுஜோவிக்

ஜென்டில்மேன் அழைப்பிதழ் இரட்டையர் - பாப் பிரையன் மற்றும் மைக் பிரையன்

பெண்களுக்கான அழைப்பிதழ் இரட்டையர் - கிம் கிளிஸ்டர்ஸ் , மார்டினா ஹிங்கிஸ்

கலப்பு அழைப்பிதழ் இரட்டையர் – நேனாட் ஜிமோன்ஜிக் ,ரென்னே ஸ்டப்ஸ்

 

 

அறிமுகப் போட்டியில் சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

 டொமினிகாவின் ரோசோவில் உள்ள வின்ட்சர் பார்க்கில்  மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான  முதலாவ டெஸ்ட் போட்டியில்   இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியில் சதம் அடித்தார். அறிமுகப் போட்டியில் பல சாதனைகள்  புரிந்ததுடன் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

அறிமுக டெஸ்டில் சதம் அடித்த இந்திய வீரர்.

அறிமுகப் போட்டியில் சதம் அடித்த 17வது இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

அதிக  ஓட்டங்கள் அடித்த மூன்றாவது வீரர்.

 அறிமுக டெஸ்டில்  இந்தியரின் மூன்றாவது அதிகபட்ச  ஓட்டங்கள்  ஷிகர் தவான்  அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 187 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 2013 இல் மேற்கு இந்தியாவுக்கு எதிராக 177 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 171  ஓட்டங்கள் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்தில்ல் உள்ளார்.

அறிமுக டெஸ்டில் 150 ஓட்டங்கள் எடுத்த இளம் வீரர்:

  21 வயது,  196 நாட்களில் அறிமுக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 150 ஓட்டங்கள் எடுத்த ஐந்தாவது இளைய வீரராவார்,  ஜாவேத் மியான்டட் 1976 இல் லாகூரில் நியூசிலாந்துக்கு எதிராக 19 வயது ,119 நாட்களில்  விளையாடி  150 ஓட்டங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அறிமுக டெஸ்டில் சதம் அடித்த  மூன்றாவது இந்திய தொடக்க வீரர்.

2013ல் மொஹாலியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தவான் 187 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், 2018ல் ராஜ்கோட்டில் மேற்கு இந்தியாவுக்கு எதிராக பிருத்வி  ஷா 134 ஓட்டங்களுடன்  இரண்டாவது  இடத்திலும்  உள்ளனர்.

அறிமுக டெஸ்டில் சதம் அடித்த நான்காவது  இளம் இந்தியர்:

 பிருத்வி ஷா (18 வயது, 329 நாட்கள்), அப்பாஸ் அலி பெய்க் (20 வயது, 126 நாட்கள்) ,குண்டப்பா விஸ்வநாத் (20 வயது, 276 நாட்கள்) ஆகியோருக்குப் பிறகு அறிமுகப் போட்டியில் சதம் அடித்த நான்காவது இளம் வீரர் 

வெளிநாட்டில் நடந்த டெஸ்டில் அறிமுக போட்டியில் சதம் அடித்த ஏழாவது இந்திய வீரர்.

  கடைசியாக 2010 ஆம் ஆண்டு இலங்கையில் சுரேஷ் ரெய்னா 120 ஓட்டங்க‌ள் எடுத்திருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அறிமுகப் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் ஜெய்ஸ்வால்.

க‌ப்டன் ரோஹித் சர்மா , பிரித்வி ஷா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

டொமினிகாவின் வின்ட்சர் பார்க்கில் ஒரு இன்னிங்ஸில் அடித்த அதிக ஓட்டங்கள்  171.

 2015 இல் அவுஸ்திரேலிய வீரர் ஆடம் வோஜஸின் 130* சாதனையை முறியடித்தார்.

இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் அறிமுகமான டெஸ்டில் அதிக ஓட்டங்கள்.

 1996ல் லோர்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக சவுரவ் கங்குலியின் 131 ஓட்ட சாதனையை முறியடித்து, வெளிநாட்டில் நடந்த டெஸ்டில் அறிமுகமான ஒரு இந்தியரின் அதிகபட்ச ஓட்டங்கள்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்தியர் ஒருவர் சந்தித்த அதிக பந்துகள்:

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை சந்தித்த வீரர்பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடத்தில் உள்ளார். 1985 இல் கொல்கத்தாவில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான முகமது அசாருதீன் 110 ஓட்டங்களுக்கு 322 பந்துகளை எதிர்கொண்டார். கங்குலி , ரோஹித் ஆகியோர் தங்கள் டெஸ்ட் அறிமுகத்தில் 301 பந்துகளை எதிர்கொண்ட பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.  

டெஸ்ட் அறிமுகத்தில் ஒரு தொடக்க ஆட்டக்காரர் சந்தித்த அதிக பந்துகள்.

ஜெய்ஸ்வால் சந்தித்த 387 பந்துகள் டெஸ்ட் அறிமுகத்தில் ஒரு தொடக்க ஆட்டக்காரர் சந்தித்த இரண்டாவது அதிக பந்துகள் ஆகும். பிரண்டன் குருப்பு 548 பந்துகளைச் சந்தித்து முதலிடத்திலும், ஆன்ட்ரூ ஹட்சன் 384 பந்துகளைச் சந்தித்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

வெளிநாட்டில் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் இந்தியர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஒட்டங்கள்.

ஜெய்ஸ்வாலின்[ 171] அறிமுகப் போட்டியில் ஒரு இந்தியரின் அதிகபட்ச ஓட்டங்கள். உலகளாவிய ரீதியில்  ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

  1903 இல் சிட்னியில் இங்கிலாந்துக்காக டிப் ஃபோஸ்டர் அடித்த 287 ஓட்டங்கள் தரவரிசையில் முன்னணியில் உள்ளது, அதேசமயம் 2021 இல் லோர்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக 200 ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்தின் டெவோன் கான்வே நான்காவது  இடத்தில் இருக்கிறார்.

கரீபியனில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியாவுக்கான  தொடக்க வீரர்களின் அதிக  ஓட்டங்கள்.

முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா,யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் 229 ஓட்டங்கள். மேற்கு இந்தியவுக்கு எதிராக கரீபியனில் அதிக ஓஆடங்களாகும்.    வீரேந்திர சேவாக் , வாசிம் ஜாஃபர் தொடக்க  ஜோடியின்  159 ஓட்ட சாதனை முறியடிக்கப்பட்டது.  சாதனையை முறியடித்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியாவுக்கான அதிகபட்ச முதல் இணைப்பாட்ட  ஓட்டங்கள்.

21 ஆண்டுகளுக்கு முன்பு வீரேந்திர சேவாக் , சஞ்சய் பங்கரின் இணைப்பாட்ட‌ சாதனையையான 201  ஓட்ட சாதனை முறியடிக்கப்பட்டது. 

இந்தியாவுக்காக வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில்முதல்  ஜோடியின்  அதிக   இணைப்பாட்டம்

  இங்கிலாந்தில் சுனில் கவாஸ்கர் , சேத்தன் சவுகான் ஆகியோரின் முந்தைய சாதனையான 213 ஓட்டங்கள்  முறியடிக்கப்பட்டது.