Wednesday, July 19, 2023

அறிமுகப் போட்டியில் சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

 டொமினிகாவின் ரோசோவில் உள்ள வின்ட்சர் பார்க்கில்  மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான  முதலாவ டெஸ்ட் போட்டியில்   இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியில் சதம் அடித்தார். அறிமுகப் போட்டியில் பல சாதனைகள்  புரிந்ததுடன் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

அறிமுக டெஸ்டில் சதம் அடித்த இந்திய வீரர்.

அறிமுகப் போட்டியில் சதம் அடித்த 17வது இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

அதிக  ஓட்டங்கள் அடித்த மூன்றாவது வீரர்.

 அறிமுக டெஸ்டில்  இந்தியரின் மூன்றாவது அதிகபட்ச  ஓட்டங்கள்  ஷிகர் தவான்  அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 187 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 2013 இல் மேற்கு இந்தியாவுக்கு எதிராக 177 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 171  ஓட்டங்கள் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்தில்ல் உள்ளார்.

அறிமுக டெஸ்டில் 150 ஓட்டங்கள் எடுத்த இளம் வீரர்:

  21 வயது,  196 நாட்களில் அறிமுக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 150 ஓட்டங்கள் எடுத்த ஐந்தாவது இளைய வீரராவார்,  ஜாவேத் மியான்டட் 1976 இல் லாகூரில் நியூசிலாந்துக்கு எதிராக 19 வயது ,119 நாட்களில்  விளையாடி  150 ஓட்டங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அறிமுக டெஸ்டில் சதம் அடித்த  மூன்றாவது இந்திய தொடக்க வீரர்.

2013ல் மொஹாலியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தவான் 187 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், 2018ல் ராஜ்கோட்டில் மேற்கு இந்தியாவுக்கு எதிராக பிருத்வி  ஷா 134 ஓட்டங்களுடன்  இரண்டாவது  இடத்திலும்  உள்ளனர்.

அறிமுக டெஸ்டில் சதம் அடித்த நான்காவது  இளம் இந்தியர்:

 பிருத்வி ஷா (18 வயது, 329 நாட்கள்), அப்பாஸ் அலி பெய்க் (20 வயது, 126 நாட்கள்) ,குண்டப்பா விஸ்வநாத் (20 வயது, 276 நாட்கள்) ஆகியோருக்குப் பிறகு அறிமுகப் போட்டியில் சதம் அடித்த நான்காவது இளம் வீரர் 

வெளிநாட்டில் நடந்த டெஸ்டில் அறிமுக போட்டியில் சதம் அடித்த ஏழாவது இந்திய வீரர்.

  கடைசியாக 2010 ஆம் ஆண்டு இலங்கையில் சுரேஷ் ரெய்னா 120 ஓட்டங்க‌ள் எடுத்திருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அறிமுகப் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் ஜெய்ஸ்வால்.

க‌ப்டன் ரோஹித் சர்மா , பிரித்வி ஷா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

டொமினிகாவின் வின்ட்சர் பார்க்கில் ஒரு இன்னிங்ஸில் அடித்த அதிக ஓட்டங்கள்  171.

 2015 இல் அவுஸ்திரேலிய வீரர் ஆடம் வோஜஸின் 130* சாதனையை முறியடித்தார்.

இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் அறிமுகமான டெஸ்டில் அதிக ஓட்டங்கள்.

 1996ல் லோர்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக சவுரவ் கங்குலியின் 131 ஓட்ட சாதனையை முறியடித்து, வெளிநாட்டில் நடந்த டெஸ்டில் அறிமுகமான ஒரு இந்தியரின் அதிகபட்ச ஓட்டங்கள்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்தியர் ஒருவர் சந்தித்த அதிக பந்துகள்:

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை சந்தித்த வீரர்பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடத்தில் உள்ளார். 1985 இல் கொல்கத்தாவில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான முகமது அசாருதீன் 110 ஓட்டங்களுக்கு 322 பந்துகளை எதிர்கொண்டார். கங்குலி , ரோஹித் ஆகியோர் தங்கள் டெஸ்ட் அறிமுகத்தில் 301 பந்துகளை எதிர்கொண்ட பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.  

டெஸ்ட் அறிமுகத்தில் ஒரு தொடக்க ஆட்டக்காரர் சந்தித்த அதிக பந்துகள்.

ஜெய்ஸ்வால் சந்தித்த 387 பந்துகள் டெஸ்ட் அறிமுகத்தில் ஒரு தொடக்க ஆட்டக்காரர் சந்தித்த இரண்டாவது அதிக பந்துகள் ஆகும். பிரண்டன் குருப்பு 548 பந்துகளைச் சந்தித்து முதலிடத்திலும், ஆன்ட்ரூ ஹட்சன் 384 பந்துகளைச் சந்தித்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

வெளிநாட்டில் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் இந்தியர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஒட்டங்கள்.

ஜெய்ஸ்வாலின்[ 171] அறிமுகப் போட்டியில் ஒரு இந்தியரின் அதிகபட்ச ஓட்டங்கள். உலகளாவிய ரீதியில்  ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

  1903 இல் சிட்னியில் இங்கிலாந்துக்காக டிப் ஃபோஸ்டர் அடித்த 287 ஓட்டங்கள் தரவரிசையில் முன்னணியில் உள்ளது, அதேசமயம் 2021 இல் லோர்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக 200 ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்தின் டெவோன் கான்வே நான்காவது  இடத்தில் இருக்கிறார்.

கரீபியனில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியாவுக்கான  தொடக்க வீரர்களின் அதிக  ஓட்டங்கள்.

முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா,யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் 229 ஓட்டங்கள். மேற்கு இந்தியவுக்கு எதிராக கரீபியனில் அதிக ஓஆடங்களாகும்.    வீரேந்திர சேவாக் , வாசிம் ஜாஃபர் தொடக்க  ஜோடியின்  159 ஓட்ட சாதனை முறியடிக்கப்பட்டது.  சாதனையை முறியடித்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியாவுக்கான அதிகபட்ச முதல் இணைப்பாட்ட  ஓட்டங்கள்.

21 ஆண்டுகளுக்கு முன்பு வீரேந்திர சேவாக் , சஞ்சய் பங்கரின் இணைப்பாட்ட‌ சாதனையையான 201  ஓட்ட சாதனை முறியடிக்கப்பட்டது. 

இந்தியாவுக்காக வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில்முதல்  ஜோடியின்  அதிக   இணைப்பாட்டம்

  இங்கிலாந்தில் சுனில் கவாஸ்கர் , சேத்தன் சவுகான் ஆகியோரின் முந்தைய சாதனையான 213 ஓட்டங்கள்  முறியடிக்கப்பட்டது.

No comments: