விம்பிள்டன் பெண்கள் பெண்கள் இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரிகோவா, சீன தைபேயின் நீண்ட கால கூட்டாளியான ஹ்சீஹ் சு-வேயுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.அவர்கள் இரண்டாவது விம்பிள்டன் பட்டத்திற்காக 7-5, 6-4 என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் ஸ்ட்ரோம் ஹண்டர், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸை தோற்கடித்து, 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சம்ப்யனானார்கள். 37 வயதில், ஸ்ட்ரோகோவா ,ஹ்சீஹ் ஜோடி கிராண்ட்ஸ்லாமில் இரட்டையர் இறுதிப் போட்டிக்கு வந்து வெற்றி பெற்ற வயதில் மூத்த ஜோடியாக ஆனார்கள்
ஜப்பானிய டீன் ஏஜ் 17 வயதான டோகிடோ ஓடா தனது முதல் விம்பிள்டன் ஆடவர் சக்கர நாற்காலி ஒற்றையர் பட்டத்தை வெர்ன்றார். 17 வயதான ஏஸ் ஹெவெட்டை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து விம்பிள்டன் சம்பியன்ஷிப்பில் சக்கர நாற்காலி ஒற்றையர் பட்டத்தை வென்ற இளையவர் ஆனார்.
சக்கர நாற்காலி குவாட் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தின் நீல்ஸ்
வின்க் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஹீத் டேவிட்சனை தோற்கடித்தார்.
டேவிட்சன் மற்றும் கனடாவின் ராபர்ட் ஷா ஆகியோருக்கு எதிரான வெற்றியின்
மூலம் குவாட் இரட்டையர் பட்டத்தை விங்க் மற்றும் அவரது கூட்டாளி சாம் ஷ்ரோடர் 24 மணிநேரத்தில்
வென்றனர்.
ஆண்கள் ஒற்றையர் - கார்லோஸ் அல்கராஸ்
பெண்கள் ஒற்றையர் - மார்கெட்டா வோன்ட்ரோசோவா
ஆண்கள் இரட்டையர் - வெஸ்லி கூல்ஹோஃப் , நீல் ஸ்குப்ஸ்கி
பெண்கள் இரட்டையர் - ஹ்சீஹ் சு-வெய் , பார்போரா ஸ்ட்ரிகோவா
கலப்பு இரட்டையர் - மேட் பாவிக் மற்றும் லியுட்மிலா கிச்செனோக்
சக்கர நாற்காலி ஆண்கள் ஒற்றையர் - டோகிடோ ஓடா
சக்கர நாற்காலி பெண்கள் ஒற்றையர் - டைட் டி க்ரூட்
சக்கர நாற்காலி குவாட் ஒற்றையர் - நீல்ஸ் வின்க்
சக்கர நாற்காலி ஆண்கள் இரட்டையர் - ஆல்ஃபி ஹெவெட் மற்றும் கோர்டன்
ரீட்
சக்கர நாற்காலி பெண்கள் இரட்டையர் - டீடே டி க்ரூட் மற்றும் ஜிஸ்கே
கிரிஃபியோன்
சக்கர நாற்காலி குவாட் இரட்டையர் - சாம் ஷ்ரோடர் மற்றும் நீல்ஸ் வின்க்
இளையோர்
ஆண்கள் ஒற்றையர் - ஹென்றி சியர்ல்
பெண்கள் ஒற்றையர் - கிளெர்வி நனூ
ஆண்கள் இரட்டையர் - ஜக்குப் பிலிப் ,கேப்ரியல் வல்பிட்டா
பெண்கள் இரட்டையர் - அலெனா கோவகோவா , லாரா சாம்சோனோவா
ஆண்கள் U14 ஒற்றையர் -
மார்க் செபன்
பெண்கள் U 14 ஒற்றையர் - லூனா வுஜோவிக்
ஜென்டில்மேன் அழைப்பிதழ் இரட்டையர் - பாப் பிரையன் மற்றும் மைக்
பிரையன்
பெண்களுக்கான அழைப்பிதழ் இரட்டையர் - கிம் கிளிஸ்டர்ஸ் , மார்டினா
ஹிங்கிஸ்
கலப்பு அழைப்பிதழ் இரட்டையர் – நேனாட் ஜிமோன்ஜிக் ,ரென்னே ஸ்டப்ஸ்
No comments:
Post a Comment