Tuesday, July 25, 2023

தனித்து விடப்பட்ட மணிப்பூர்

 இந்திய மாநிலங்களில்  ஒன்றான மணிப்பூரில் நடந்தகொடூரம்  உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலக நாடுகளால்  மிகவும் மதிக்கப்படும் தலவராக பவனிவரும் மோடியின்   பாரதீய ஜனதாஆட்சி செய்யும்  மணிப்பூரில் இரண்டு மாதங்களாகக் கலவரம் நடக்கிறது.

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே  மோதல் என  வெளி உலகுக்குச் சொல்லப்படுகிறது. இளம்  பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியன் வன்கொடுமை செய்தது  வெளி உலகுக்குத் தெரியாமல் மறைப்பப்பட்டதுமேமாத 4 ஆம் திகதி நடந்த அந்தச் சம்பவம் கடந்த கடந்த ம் 25 ஆம் திகதிதான் வெளி உலகுக்குத்  தெரிய வந்தது." நெஞ்சம் வலிக்கிறது குற்றவாளிகள் தப்ப முடியாது என  பிரதமர்  ஒரு வரியில் முடித்துவிட்டார்.   

பாரதீய ஜனதாவின் ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அரங்கேறிக்கொண்டிருக்கும் வன்முறையில், குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள், நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பூதாகரமாக வெடித்திருக்கிறது.  மே 4-ம் திகதியே நடந்த  இக் கொடூரம்  தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவுசெய்திருந்தும்  குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய பிறகே, இப்படியோர் இழிவான சம்பவம் வெளிச்சத்துக்கே வந்தது. அதன் பின்னரே குற்றவாளி கைது செய்யப்பட்டார்.  

இத்தகைய சம்பவம் ஒன்று நடந்தது என்று தெரிந்தும்கூட பொலிஸார் இவ்வளவு நாள் இது பற்றி வாய்திறக்காமல் இருந்தனர். இப்படியிருக்க, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை இந்திய  நாடாளுமன்றத்தில் பெரும் விவாதப்பொருளாக மாற்ற முனைப்பு காட்டி வருகின்றன. இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றமும், `நடவடிக்கை எடுக்கத் தாமதப்படுத்தினால் நாங்களே தலையிட நேரும்' என்று எச்சரித்திருக்கிறது.

 பாதிக்கப்பட்ட இரு பெண்களில் ஒருவர், ``பொலிஸார்தான் எங்களை அந்தக் கும்பலிடம் விட்டுச் சென்றனர்" என்று தனியார் ஊடகப் பேட்டியில் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

  மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்துக்கு  பழங்குடி அந்தஸ்து வழங்குவதர்கு எதிர்ப்புத் தெரிவித்து குகி பழங்குடி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து நடத்திய  போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையால் 100 பேர் உயிர்  இழந்ததாக  அதீகார பூவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துகள் அடித்து நொருக்கித்  தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்கள் , தேவாலயங்கள் ஆலயங்கள் தீவைக்கப்பட்டன. இனக் குழுக்களுக்கிடையேயான  மோதல்  மதக் கலவரமானது.

இரன்டு மாதங்களாக நடைபெற்ற கலவரங்களை  மணிப்பூர் அரசும்,மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. மே மதம் 4 ஆம் திகதி நடைபெற்ற கொடூரச் சம்பவத்தை  மோடியும், அமித் ஷாவும் அறிந்திருப்பார்கள் அதுபற்றி மூச்சுக்கூட விடவில்லை.

பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் சிறு சம்பவம் நடந்தாலும் , தலையிடும் ஆளுநர்களும், பாரதீய ஜனதாத் தலைவர்களும் அமைதியாக  இருக்கிறார்கள். பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீர் குலையலாம் . அதனை மத்திய அரசு தட்டி கேட்கப் போவதில்லை.

மணிப்பூரில் இரண்டு  மாதங்களாக நிகழ்ந்த வன்முறை சம்பவத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 400 பேர் காயம் அடைந்தனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோதி மணிப்பூருக்குச் சென்று மக்களை சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. மணிப்பூர் முதலமைச்சர் பிரென் சிங்கும் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.இந்த நிலையில் ராகுல் காந்தி பாதிக்கபபட்டவர்களை காண மணிப்பூருக்கு வியாழக்கிழமை புறப்பட்டார். சுரசந்துபுர் பகுதியில் உள்ள நிவாரண முகாமை பார்வையிடச் சென்ற ராகுல் காந்தியை பிஷ்னபூர் அருகே காவல்துறை தடுத்து நிறுத்தியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக .என். செய்தி முகமையிடம் காவல்துறை கூறியது. இருப்பினும் அவர் ஹெலிகாப்டரில் தனது பயணத்தை தொடர்ந்தார். நிவாரண முகாம்களை பார்வையிட்ட ராகுல், அங்குள்ளவர்களோடும் கலந்துரையாடினார். குழந்தைகளோடு அமர்ந்து உணவருந்தினார். ராகுலால் செய்ய முடிந்ததை பிரதமரால் ஏன் செய்ய முடியாது அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு மோடியைத் தடுப்பது எது?

தமிழகத்தில்  திராவிட முன்னேற்ரக் கழக் அமைச்சர்களில் வீடுகளில் நடைபெறும் சோதனைகளுக்கு  மத்திய படையை அனுப்பும் பாரதீய ஜனதா மணிப்பூரில் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

  மணிப்பூரில் நடைபெறும் கொடூரங்கள் வெளி  உலகுக்குத் தெரியாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில்  பாதிக்கப்படும் மக்களுக்கும் மோடிதான்  பிரதமர். இதனை உணர்ந்துகொண்டு மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை செய்தவர்களை  பொதுமன்னிப்பில் விடுதலை செய்யும்  தலைவர்கள்  இருக்கும் வரை நீதி கிடைப்பது  தாமதமாகலாம்.

 

No comments: