Monday, July 24, 2023

மாற்றம் காணாத ஏமாற்ற அரசியல்


 டட்லி- செல்வா, பண்டா - செல்வா காலத்தில் ஆரம்பமான ஏமாற்ற அரசியல் ரணின் காலத்திலும் தொடர்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.  ஆனால்,  இலங்கை அரசியலில் ஏமாற்றமும் மாறாதது. 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கையில் எடுத்து 36 வருடங்கள் கடந்து விட்டன. ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற ரணிலும் 13 ஐக் கையில் வைத்துக்கிண்டு அரசியல் செய்கிறார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987  ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் , இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவுக்கும் இடையே யூலை 29, 1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். அந்த  ஒப்பந்தம் கோப்புகளில் மட்டும் தான்  இருக்கும் என்பதை  அன்றைய அரசியல் நிலை  வெளிப்படுத்தியது.

போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற  தொனியுடன்  அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன வெளிப்படையாக தமிழர் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்ததார். அதன் பின்னர் பிறேமதாச வெளிப்படையாக இந்திய எதிர்ப்புணர்வை விதைத்தார். இடசிய்ல் வந்த ஒருவர் மரம், செடி,கொடி என்ரார்.  சமாதானப் புறாவாக தோன்றைய சந்திரிகா  கடைசியில் எல்லாவற்றையும் கைவிட்டார். 13+ என்று  சொன்ன  மகிந்த ராஜபக்ஷ வும்  கைவிட்டார்.

இப்போது ரணிலின்  முறை. வாருங்கள் கதைக்கலாம் என வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அழைப்பு விடுத்க்தார்..வழக்கம்  போல சில தமிழ்த் தலைவர்கள்  முரண்டு பிடித்தனர். அவருடன் பேசி, ஆகப்போவது  ஒன்றும்   இல்லை என அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்ன சாத்திரம் பலித்து விட்டது.

இந்தியாவுக்குச் செல்லும்  முன்பு தமிழ்த்தலைவர்களுடன்  பேசி முடித்து விட வேண்டும் என விரும்பிய ரணிலி ஆசை நிறை வேற்றப்பட்டது. பொலிஸ் அதிகாரம் இல்லை. வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என்ற ஜனாதிபதியின் யோசனையைத் தமிழ்த் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்போது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா, இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  பிரச்சனைக்குத் தீர்வைத் தமிழ்த்தைவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்று அழுத்தம்  கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக   ஜனாதிபதி ரணில் மேலும் கருத்துத் தெரிவிக்கையி,

“வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே தாம் விரும்புகின்றேன், அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது எனது நோக்கமல்ல.

 பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு   ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை. அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு, பொலிஸ் அதிகாரங்கள் தவிர பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க முடியும்.பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும். இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை.” என தெரிவித்துள்ளார்.


  சந்திரிகா  ஜனாதிபதியாக  இருந்தபோது சமர்ப்பித்த யோசனையை பாராளுமன்றத்தில் கிழித்து எறிந்தது யார் என்பதித் தமிழ் மக்கள் மறக்கவில்லை. சரத் வீர சேகர போன்ற சண்டியர்கள்  இருக்கும்  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை  கிடக்கப்போவதில்லை.

இந்திய  - இலங்கை ஒப்பந்தப்படி  13 ஐ அமுல் படுத்த வேண்டும் கே.எஸ்.அழகிரி,அண்ணாமலி போன்ர தமிழகத் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். வடக்கு ,குழக்கு தமிழ்த் தலைவர்கள்  இந்திய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திலும்  13 ஐ அமுல் படுத்துமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத் தலைவர்களின் வலியுறுத்தல், வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களின் கோரிக்கை தொடர்பாக  இந்தியப் பிரதமர் மோடி ஏதாவது  கேட்டல் அதற்குப் பதிலளிப்பதற்கு  ஆயத்தமாக   ரணில் சென்றுள்ளார். எப்பவோ செத்துப்போன 13  ஐ ஐ.சி.யுவில் வைத்து உயிர் கொடுக்க  சிலர் முயற்சிக்கிரார்கள்.

 

No comments: