பிரேஸிலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பாவிப்பதற்கான பந்து கடந்த 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரேஸிலில் டி ஜெனிரோவ் நகரில் அறிமுகம் செய்யப்பட் டது.அடிடாஸ் நிறுவனம் தயாரித்த இப்பந்து அ றி முக நி க ழ் ச் சி யில் , பஸ் ரியன் ஸ்வென் ,ஸ்ரெரியர் ஆகியோர்கலந்து கொண்டனர்.
வன்மையமான இப்பந்துக்கு பிரேஸுகா எனப் பெயரிடப்பட்டுள்ளது பிரேஸுகா என்றால் பிரேஸிலியன். உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கு அனுசரணை வழங்கும் அடிடாஸ் நிறுவனம் 1978 ஆம் ஆண்டு முதல் புதிய வடிவங்களில் பந்துக்கு பெயர்சூட்டி அறிமுகப்படுத்துகின் றது.2002 ஆம் ஆண்டு ஜப்பான், தென் கொரியா, நாடுகளில் நடை பெற்ற போட்டியின்போது பெங்மூவா என்ற பெயரில் பந்தை அறிமுகப்படுத்தியது. தென் ஆபரிக்காவில் கடைசி யாக நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் அறிமுகப்படுத்திய பந்துக்கு ஜபுலானி எனப்பெயரிட்டது.
தென் ஆபரிக்காவில் நடைபெற்ற உலககி ண்ணப் போட்டி முடிவடைந்ததும் பிரேஸிலில் நடைபெறும் போட்டிக் கான பந்தைத் தயாரிப்பதற்காக முற்சியை அடிடாஸ் ஆரம்பித் தது.600 வீரர்கள் இப்பந்தில்விளையாடி தமது கருத்தைத் தெரிவித்துள்ளனர்.அடிடாஸ் அனுசரணை வழங்கும் வீரர் களும் உதைபந்தாட்ட அணிகளும், புதிய பந்தில் விளையாடி யுள்ளனர். இதில் அடிடாஸ் அனுசரணையில் வழங்காத 287 வீரர்கள் விளையாடினார்கள்.
மேஸி ஸ்வென் ஸ்ரெரியர் போன்ற வீரர்களும் இப்பந்தில் பயிற்சி பெற்றுள்ளனர். மிலரன் பெயன் மூனிச் ஜஜேன் ரீனா வீரர்கள் புதிய பந்தில் விளையாடி தமது கருத்துகளைக் கூறியுள்ளனர். கடந்த வாரம் விற்பனைக்கு வந்த இப்பந்தின் விலை 160 டொலர். உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்ற நாடுகள் பயற்சி பெறுவதற்காக பந்துகளை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ஜென்ரீனா,சுவீடன் ஆகியவற்றுக்கிடை யேயான சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் இப்பந்து பாவிக் கபபட்டது.20 வயதுக்குட்ப்பட்ட உலகக்கிண்ண உதைப்ப ந்தாட்ட போட்டியிலும் இப்பந்து பரிசீலனைக்கு விடப்பட்டது. பரேஸுகா அறிமுகப்படுத்தப்பட்ட டிசம்பர் 03 ஆம் திகதி பிரேஸிலில் பறந்த குழந்தைகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில மைதானங்களில் இரண்டரை வருடங்களாக நடைபெற்ற போட்டிகளில் இப்பந்து பாவிக் கப்பட்டது.நிறை 437 கிராம், சுற்றளவு 6 செ.மி. 141 சென்றி மீற்றருக்கு எம் பிக்குதிக்கும் திறன் உடையது.உயரம் 0.16 00செ.மீ.ஆறு வண்டுகளாக பொருத்தப்பட்டுள்ளது. பிரேஸிலின் தேசிய கொடியின் நிறங்களும் உலகக் கிண்ண உதைபந்தாட்ட சின்னத்தின் நிறங்களும் பந்தை அலங்கரிக்கின்றன.
சுடர் ஒளி
09/01/13
No comments:
Post a Comment