தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவெற்றி பெற்றால் அஸாரின் இன்னொரு சாதனையை டோனி சமப்படுத் துவார். அஸாரின் தலைமையில் இந்திய அணி 90 போட்டிகளில் வெற்றி பெற்றது.டோனி தலைமை யிலான இந்தியா 88 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அண்மையல் நடைபெற்ற போட்டிகளில் ஆறு வெற்றிக் கிண்ணங்களை பெற்று இந்தியா முன்னிலையில் உள்ளது. டோனியின் தலைமைத்துவம் இந்திய அணியை வெற்றி பாதையில் கொண்டு செல்கிறது. டோனிகளத்தில் நின்றால் இந்தியாவின் வெற்றி உறுதி என்ற நிலை தோன்றி யுள்ளது. அதனால் டோனியை ஆட்டம் இழக்கச் செய்வ தற்கான நெருக்குதல் எதிரணிக்குத் தோன்றியுள்ளது.
அவுஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் இந்தியா படுதோல்வியடைந்த பின்னர் டோனியின் மீது கடும் விர்மசனங்கள் எழுந்தன.தலைவரை மாற்ற வேண்டும் என்றும் சில கருத்துகள் வெளிப்பட்டன. இந்தியாவுக்கு சென்ற இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றை டோனியின் தலைமையிலான அணி வென்றது. சிம்பாப்பேயிலும் இந்தியா வெற்றிபெற்றது. பாகிஸ்தானுடனான போட்டியில் மட்டும் தோல்வி யடைந்தது.
தென் ஆபரிக்காவில் இந்தியா தொடரை வென்றதில்லை. அவுஸ்திரேலி யாவில் தொடரை வென்றதுபோல் தென் ஆபரிக்காவிலும் டோனியின் தலைமை யிலான அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இரசிகர்களிடம் உள்ளது. இந்திய, தென்ஆபரிக்க கிரிக்கெட் நிர்வாகி களுக்கிடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது. இந்திய நிர்வாகிகளுக்கு விருப்பமில்லாத ஒருவர் தென் ஆபிரிக்கா கிரிக்கெட் சங்கத்தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் சபையின் அதிரடி நடவடிக்கையினால் தென் ஆபரிக்க கிரிக்கெட் சங்கத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.சச்சினின் 200 ஆவது டெஸ்ட் போட்டி தென் ஆபிரிக்காவிலேயே நடைபெற வேண்டும். நிர்வாகிகளுக் கிடையிலான முறுகல் காரண மாக மேற்கு இந்தியத் தீவுகளை வரவழைத்து சச்சினின் 199,200 ஆவது டெஸட்களை சிறப்பாக நடத்தி அவரை கெளர வித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை.இதனால் தென்ஆபரிக்காவுக்குக் கிடைக்க வேண்டிய பெருமை, சாதனை, புகழ் எல்லாம் முடக்கப் பட்டதுடன் வருமான இழப்பும் ஏற்பட்டது.
தென் ஆபிரிக்க மண்ணில் விளையாடிய அனுபவம் இல்லாத வீரர்களுடன் சென்றிருக்கிறார் டோனி. ஒரு நாள் போட்டி யில் இந்திய துடுப்பாட்ட வரிசை மிகபலமானது. பந்து வீச்சுத்தான் சற்று ஏமாற்றமளிக்கிறது. தென் ஆபிரிக்க வீரர்களின் துடுப்பாட்டமும் பந்து வீச்சும் இந்திய வீரர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
டெஸ்ட் போட்டிதான் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும். சச்சினின் இடத்தை நிரப்பக்கூடிய வீரர் இல்லை என்று டோனி வெளிப்படையாகக் கூறியுள்ளார். முரளி விஜய்,தவான், புஜாரா ஆகிய மூவரும் தமது இடத்தை உறுதி செய்துள்ளனர்.நான்காவது இடத்தைப் பிடிக்க கோலி, ரோஹித் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போடடி நிலவுகிறது. சச்சின் இல்லாத முதல் டெஸ்ட் போட்டி என்பதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டேல்ஸ், டெயின், மானிமாக்கல், பலாண்டர், அம்லா, கலிஸ் டி வில்லியஸ் ஆகியோர் கடும் சவால் விடுப்பார்கள்.
ஷேவாக் , கம்பீர், ஹர்பஜன்சிங் ஆகியோர் மீண்டும் இடம்படிக்க முயற்சி செய்கின்றனர்.இந்திய அணியில் கம்பீர் இல்லை என்றாலும் கம்பீருக்கு ஆதரவாக டோனி கருத்து தெரிவித்துள்ளார்.இவர்கள் மீண்டும் இடம் படிப்பது இலகுவான தல்ல. வசிம்,ஜவார்,மொஹமட் கைப், தினேஷ் கார்த்திக், கம்ப்ளி ஆகியோரால் மீண்டும் அணிக் குள் நுழையமுடியவில்லை. யுவராஜ் சிங், ரெய்னா, இஷாந்த் சர்மா ஆகியோர் பலவீனமான வீரர்களாக உள்ளனர்.
சுடர் ஒளி
08/01/13

No comments:
Post a Comment