ஜுலியோ சிசார் |
கோல்கீப்பர் ஜுலியோ சிசார் பிரேஸில் பின்கள வீரர்கள் டானி அல்விஸ் பிரேஸில் தியாகோ சில்வா பிரேஸில் டெஜன் லவேர்ன் குரோஸியா, மார்கலோ பிரேஸில், மத்திய களவீரர்கள் லுகா மட்ரிட் குரோசியா, அலெக்சாண்டர், சோங்கமரூன், ஒஸ்கார் பிரேஸில் முன்கள வீரர்கள், ஜவியர் யஹன்மண்டெஸ் குரோஸியா நைமர் பிரேஸில் மரியோ மன்ட்ஸுகிக் குரோஸியா மேலதிக வீரர்கள்,ரேவிட்லுயிஸ் பிரேஸில், டர்ஜியோ ஸ்ர்னா குரோஸியா,ஸ்ரிப் பிலரிகோ சா கமரூன் ரமிரீஸ் பிரேஸில்,ஹல்கி பிரேஸில் இந்த அணியில் பிரேஸிலின் ஆதிக்கம் அதிகதமாக உள்ளது. விளையாடும் அணியில் ஆறு பேரும் மேலதிக வீரர்களில் மூன்று பேரும் உள்ளனர்.குரோசியா வீரர்கள் நான்கு பேர் உள்ளனர்.கமரூன் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு வீரர் இந்த அணியில் உள்ளனர்.
"ஏ'பிரிவில் உள்ள நான்கு நாடுகளிலும் பிரேஸில் கோல்கீப்பர் தான் மிகச் சிறந்தவராக உள்ளார்.பின் கள வீரர்களில் மூவர் பிரேஸில் நாட்டைச் சேர்ந்தவர்களே.ஆகையால், எதிரிகோல் அடிப்பது சற்று சிரமமானதாக இருக்கும்.இளம் வீரர் நெய்மர் மீது பிரேஸில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பிரேஸில் விளையாடவில்லை.
பிரேஸிலும், மெக்ஸிகோவும் இதுவரை 38 தடவைகள் மோதி உள்ளன.பிரேஸில் அதிக வெற்றியைப் பெற்றது.50,54,62ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மூன்றிலும் இந்த இரண்டு நாடுகளும் சந்தித்தபோது மூன்று முறையும் பிரேஸில் வெற்றி பெற்றது. 2006 ஆம், 1994ஆம் ஆண்டுகளி குரோஸியாவை பிரேஸில் தோற்கடித்தது.2003 ஆம் ஆண்டு பெடரேஸன் உலகக்கிண்ண போட்டியில் பிரேஸிலை தோற்கடித்து குரோசியா வென்றது. 2002 ஆம் ஆண்டு மெக்ஸிகோ வும், குரோஸியாவும் சந்தித்தபோது மெக்ஸிகோ வென்றது. கமரூனும், மெக்ஸிகோவும் இப்பொழுதுதான் முதல் முதலாக மோத உள்ளது.
சுடர் ஒளி
15/12/13
No comments:
Post a Comment