உதைபந்தாட்ட தகுதி காண்போட்டியில் பிலிப்பை ன்ஸை எதிர்த்து விளையாடிய இலங்கை முதலாவது போட்டியை 1-1 என்றகோல்கணக்கில் சமப்படுத்தியது. இரண்டாவது போட்டியில் 4-0கோல் கணக்கில் தோல்வி யடைந்தது. ஐக்கிய அரபு எமிரேட் ஸுடனான முதலாவது போட்டியில் 3-0 கோல் கணக்கில் தோல்வியடைந்த இந்தியா, இரண்டாவது போட்டியை 2-2 எனும் கோல் கணக்கில் சமப்படுத்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது போட்டியில் 3-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது பங்காளதேஷ். இரண்டாவது போட்டியில் கோல் அடிக்கப்படாது சம நிலையில் முடிந்தது. இலங்கை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் முதல் சுற்றுடன் வெளியேற இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய பங்காளதேஷ். லிபியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 4-0 கோல் கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது போட்டியில் 0-2கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதிக கோல் அடித்த லிபியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
பீஃபாவின் தரப்படுத்தல் பட்டியலில் இந்தியா154, பங்காளதேஷ்162, இலங்கை166, பாகிஸ்தான் 168, ஆவது இடத்தில் உள்ளன.
சுடர் ஒளி
09/01/13
No comments:
Post a Comment