Monday, December 23, 2013

சம்பியன்களின் போட்டி

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கான நாடுகளின் குழுநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டினதும் பலம், பலவீனம் என்பன ஆராயப்படுகின்றன.இதுவரை 19 உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 16 நாடுகளில் நடைபெற்றுள்ளன. ஐரோப்பாவில்10 போட்டிகள்   நடைபெற்றுள்ளன. வட அமெரிக்காவி லும், தென் அமெரிக்காவிலும் தலா மூன்று போட்டி களும்  நடைபெற்றுள்ளளன. ஆசியாவும், ஆபிரிக்காவும் தலா ஒரு போட்டியையும் நடத்தின.2002 ஆம் ஆண்டு முதன் முதலாக இரண்டு நாடுகள் இணைந்து போட்டியை நடத்தின.தென் கொரியா, ஜப்பான் ஆகியன இணைந்து முதன் முதலாக நடத்திய உலகக்கிண்ணப் போட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அவுஸ்திரேலியா கண்டத்தில் மட்டும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெறவில்லை.உலகத் திருவிழா வான ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த அவுஸ்திரேலியா  உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும்  என்ற நம்பிக்கை  அந்நாட்டு இரசிகர்களிடம் உள்ளது. 

தென்னாபிரிக்கா,ஜேர்மனி, தென் கொரியா, ஜப்பான்,பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, மெக்சிகோ,ஸ்பெயின், ஆர்ஜென்ரீனா, இங்கிலாந்து, சுவீடன், சுவிட்ஸர்லாந்து, பிரேஸில், உருகுவே ஆகியன உலகக்கிண்ணப் போட்டியை நடத்தின. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, மெக்சிகோ ஆகியன தலா இரண்டு தடவை உலகக் கிண்ணப் போட்டியை நடத்தியுள்ளன. இரண்டாவது போட்டியை நடத்துவதற்கு பிரேஸில் தயாராகிவிட்டது. ஐரோப்பாவிலும்! ஐரோப்பாவுக்கு வெளியிலும் மாறிமாறி நடைபெற்று வந்த இப்போட்டி தொடர்ச்சியாக  இரண்டாவது முறை ஐரோப்பாவுக்கு வெளியே நடைபெறுகிறது. அடுத்தப் போட்டி கட்டாரில் நடைபெறும்.
2018 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடான ரஷ்யாவில் நடைபெறும். இது ஐரோப்பிய உதைபந்தாட்ட  இரசிகர் களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின், இத்தாலி, பிரேஸில், பிரான்ஸ், ஜேர்மனி, ஆர்ஜென்ரீனா, இங்கிலாந்து, உருகுவே ஆகிய நாடுகள் அடுத்த உலகக்கிண்ண சம்பயன் போட்டியில் களமிறங்குகின்றன. பிரேஸில் ஐந்து  தடவைகள் சம்பயனானது.இத்தாலி நான்கு தடவைகள் சம்பியனானது.ஜேர்மனி, ஆர்ஜென்ரீனா ஆகியன தலா இரண்டு தடவைகள் சம்பியனானது. ஜேர்மனி, பிரேஸில், இத்தாலி தலா இரண்டு தடவை களும் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து உலகக்கிண்ணத்தை இழந்தன. உலகக்கிண்ணப் போட்டியில் நெர்லாந்தின் நிலைமை மிகவும் சோகமாக உள்ளது.மூன்று தடவைகள் இறுதிப்போட்டியில் விளையாடியும் ஒரு தடவை கூட  உலகக்கிண்ணத்தைப் பெறமுடியாது தோல்வியடைந்துள்ளது.சுவீடன், பிரான்ஸ், ஆர்ஜென்ரீனா ஆகியவை தலா ஒரு தடவை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தன.

உலகக்கிண்ணப் போட்டியைத் தமது நாட்டில் நடத்திய பிரான்ஸ் ஆர்ஜென்ரீனா, ஜேர்மனி, இங்கிலாந்து,இத்தாலி ஆகியன சம்பயனாகின.1950 ஆம் ஆண்டு போட்டியை  நடத்திய பிரேஸில் இறுதி வரை முன்னேறி தோல்வி  அடைந்தது. இம்முறை சம்பியனாக வேண்டும் என்ற முனைப்புடன் பிரேஸில் உள்ளது. 

சுடர் ஒளி
08/12/13

No comments: