உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் பிறேஸில் அணியின் புதிய சீருடை அண்மையில் அணியின் பயிற்சியாளரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இளம் வீரர் நெய்மர், மத்திய கள இளம் வீரர்லுயிஸ் கஸ்ரோவ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.பிறேஸில் அணியின் அனுசரணையாளரான நைக் நிறுவனம் இந்த சீருடையை வடிவமைத்துள்ளது. ஐந்து தடவை உலகக்கிண் ணத்தை வென்ற நாம் ஆறாவது தடவையும் உலகக் கிண்ணத்தை வெல்வோம் என உறுதிமொழி எடுத்தனர்.
பறேஸில் அணிக்காக இரண்டு புதிய சீருடைகளை நைக் அறிமுகப்படுத்தியுள்ளது. 2017 ஆம் ஆண்டு வரை பிறேஸிலுக்கு நைக் அனுசரணை வழங்குகிறது. பிறேஸில் தவிர அமெரிக்கா, சீனா ஆகிய நாட்டு அணிகளுக்கும் நைக் அனுசரணை வழங்குகிறது.
அடிடாஸ் நிறுவனம் 2030 ஆம் ஆண்டு வரை பீஃபாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.ஸ்பெய்ன், ஜேர்மனி, ஆர்ஜென்ரீனா, கொலம்பியா ஆகிய நாட்டு உதைபந்தாட்ட அணிகளுக்கு அடிடாஸ் அனுசரணை வழங்குகிறது.உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி காலத்தில் 5 பில்லியன் யூரோவுக்கு உதைபந்தாட்ட பொருட்களை விற்பனை செய்ய ரிவல்,நைக், அடிடாஸ் ஆகியவை திட்டமிட்டுள்ளன.
சுடர் ஒளி
ரமணி 26/12/13

No comments:
Post a Comment