Sunday, December 1, 2013

யாரோடு யார்?


உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பிரேஸிலுடன் முதல் சுற்றில் விளையாடும் மூன்று நாடுகளைச் சரியாகக்குறிப்பிடும் இரசிகர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்க பீஃபா முன்வந்துள்ளது. பிரேஸிலின் பிரபல வீரர்களை எதிர்த்து விளையாடும் வீரர்கள் யார் என்ற ஆவல் இரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
பிரேஸிலுடன் விளையாடும் மூன்று நாடுகளின் பெயரை சரியாகக்குறிப்பிடும் இரசிகர்களுக்கு பிரேஸிலின் நட்சத்திரவீரர்களான லுசிஓ, மைகோன்,காகா,நைமர் உலகக்கிண்ண சம்பியனான ஸ்பெய்ன் வீரர்களான ஷேவி,ரொரீஸ்,கலிள்லாஸ் அகியோர் கையொப்பமிட்ட சீருடை வழங்கப்படும் அதிர்ஷ்டசாலியானஇரசிகர் ஒருவர் பீஃபாவின் செலவில் மூன்று நாட்கள் பிரேஸிலில் தங்கி இறுதிப்போட்டியை பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
 சுடர் ஒளி

01/12/13

No comments: