Tuesday, December 3, 2013

நிரபராதியை கொல்ல காத்திருக்கும் கயிறு

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்து விடுதலைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலத்தை தான் மாற்றியதாக   அப்போது விசாரணை அதிகாரியாக இருந்த தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கு முறைப்படி விசாரிக்கப்படவில்லை.சந்தேகப்பட்டியலில் உள்ள அரசியல் தலைவர்களில் சிலரை விசாரணை அதிகாரிகள் நெருங்கவி ல்லை. ராஜீவ் கொலையில் சம்பந்தம் இல்லாத மூவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு ள்ளது. என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது..நேருபரம்பரையின்       வாரிசு அடுத்த இந்தியப்பிரதமர்  என்ற அடைமொழிகளில் வலம் வந்த ராஜீவை கொலை செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டிய     நெருக்குதல் இருந்தது.ஆகையால் தான் பற்றிவாங் கிக் கொடுத்த பேரறிவாளனின் வாக்கு மூலத்தை மாற்றி அவர் குற்றவாளியாகு வதற்கு ஏற்றப்படி எழுதப்பட்டது.
பேரறிவாளனுக்கு தண்டனை கிடை க்கும் என்று அந்த  வாக்கு மூலத்தை மாற்றி எழுதிய  அதிகாரிக்கு நன்கு தெரிந்திருந்தது.

ஆனால், அவருக்கு மரணதண்ட னை கிடைக்கும் என தான் எதிர்பார்க்க வில்லை என்று 22 வருடங் களின் பின்னர் இந்த   உண்மையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.காலம் கடந்த ஒப்புதலால்  பேரறிவாளனின்  வாழ்க்கை நரகமாகிவிட்டது. மேலதிகாரி       யின் நெருக்குதலில் இருந்துதான் தப்புவதற்காக பேரறிவாளனின்  வாக்கு மூலத்தை மாற்றினாரா அல்லது மேலதிகாரியின் உத்தரவுக்கமைய மாற்றினாரா என்பது பற்றி அவர் தெளிவாகக் கூறவில்லை.
ராஜீவ் கொலைப்பட்ட ஸ்ரீ பெரும் புதூ ர்க் கூட்டத்துக்குதற்கொலை குண்டு தாரியான  தனுவை காரில் அழைத்துச் சென்றவர்களை விசாரிக்கவில்லை. சுப்பிரமணிய சுவாமி, சந்திர சுவாமி ஆகியோரை முறைப்படி விசாரிக்கவி ல்லை.ஆனால், பற்றி வாங்கிக் கொடுத்த பேரறிவாளனுக்கு மரணதண்டனை  வாங்கிக் கொடுத்துள்ளார்கள். விசாரணை அதிகாரி யாக இருந்த தியாகராஜனின் மனசாட்சி காலம் கடந்து விழித்துக் கொண்டது.இது பேரறிவாளனுக்கு சாதகமானதாக இருக்குமா என்பதை சட்டவல்லுனர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

பேரறிவாளனுக்கு நடந்ததைப் போன்றே சாந்தனுக்கும், முருகனுக்கும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அவர்களின் வாக்குமூலங்களிலும் தில்லுமுல்லு நடத்திருக்கலாம். ராஜீவ் கொலைக்குற்ற வாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்  என்ற  ஒரே குறிக்கோளுடன் விசாரணை அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டது.பேரறிவாளனின் விடுதலைக்காக  மரணதண்ட னைக்கு எதிரான இயக்கம் தயாரித்த ஆவணப்படத்தின் மூலமே உறங்கிக் கிடந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.மரணதண்டனை வழங்குவதற்கு முன்னர் அவர் உலகில் வாழத்தகுதி உள்ளவரா இல்லையா என்று ஆராயப்பட வேண்டும் என மேல் நீதிமன்றம் உத்ததவிட்டுள்ளது.அந் த உத்தரவின் பி  ரகாரம் பேரறிவாளன் உலகில் வாழ்வதற்கு தகுதி உடையவர் என நிரூபி ப்பதற்காக மரணதண்டனை க்கு எதிரான இயக்கம் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது.
பேரறிவாளனின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்த சி. பி.ஐ.அதிகாரி தியாகரா  ஜன் தனது மனதில் உறுத்திக் கொண்டி ருந்த உண்மையை வெளியிட்டுள்ளார்.

 பற்றி வாங்கி வரும்படி சிவராஜன் கூறினார். ராஜீவைக் கொல்வ தற்காகத் தான்  அந்தப்பற்றி வாங்கியது என்பது எனக்கு  தெரியாது” என்றே பேரறிவாளன் வாக்கு மூல மளித்துள்ளார். பற்றி வாங்கி வரும் படி  சிவராஜன் கூறினார் என்பதை வாக்கு மூலமாகப் பதிந்த தியாகராஜன் ராஜீவைக் கொல்வதற்காகதான் அந்த பற்றி வாங்கியது என்பது எனக்குத் தெரியாது  என்று பேரறிவாளன்   கூறியவாக்கு மூலத்தைப் பதியவில்லை. அதனைப் பதித்திருந்தால் பேரறிவாளனைக் குற்றவாளியாக்க முடியாது.ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனை குற்றவாளியாக்க வேண்டும் என்பதற்காகவே சி பி.ஐ.அதிகாரி அந்த வாக்கு மூலத்தைப் பதியவில்லை.

பேராசியராக இருந்த தியாகராஜன் பின்னர் வருமான வரித்துறை அதிகாரியாகக் கடமையாற்றினார்.ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்களின் வாக் கு  மூலத்தை பதிவதற்காக  தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளில் அவரும் ஒருவர். பேரறிவாளன்  நளினி உட்பட 17 பேரின் வாக்கு மூலத்தை இவரே பதிவு செய்தார்.நளினி ஆங்கிலத்தில் வாக்கு மூலமளித்தார்.
 ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட பேரறிவாளனுக்கு    சிறை தண்டனை கிடைக்கும். சிறிய  சிறைவாசத்தின் பின் அவர் வெளியே வந்து விடுவார் என்றுதான்  தியாகராஜன் எதிர் பார்த்தார். அவருடைய எதிர்பார்ப்புக்கு மாறாக பேரறிவாளனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.அந்தத் தீர்ப்பு மனசாட்சியை  உலுக்கிவிட்டதாக மனம் வருந்திக் கூறியுள்ளார்.19 வயதில் கைதுசெய்யப்பட்டு   விசாரணை முடிவில் குற்றவாளி யா கக் காணப்பட்டு மரணதண் டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 42 வயதாகிறது.இத்தனை காலம் சிறைவாசம் அனுபவித்தும் தான் நிரபராதி என்றும் தனக்கு விடுதலை  கிடைக்கும்  என்றும் நம் பிக் கொண்டிருக்கிறார்

பேரறிவாளனின் வாக்கு மூலத்தை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்த போது எதாவது தவறுதல் நடந்திருக்கலாம் என்றும் தியாகராஜன் தெரிவிக்கி றார்.பேரறிவாளன் கொடுத்த வாக்கு மூலத்தை தெரிந்து கொண்டே மாற்றி அமைத்த தியாகராஜன் தன் எல்லைக்கு அப்பால் உள்ள மொழி மாற்றத்தில் தவறு காண முனைந்தார். எல்லாமே தலைகீழாக நடந்து முடிந்து விட்டது.23 வருடங்களின் பி ன்னர்   விழித்துக் கொண்ட அவரது மனசாட்சிளால்  பேரறிவாளனின் இளமையை மீட்டுக்கொள்ள வரமுடியாது.

ராஜீவின் கொலை வழக்கின் உண்மையான குற்றவாளிகள் கண்டுபடிக்கப் படவில்லை.என்ற குரல்கள்  ஓங்கி ஒலித்தாலும் நீதியின் சம்மட்டியால் அக்குரல் கள்அமைதியாக்க  ப்பட்டன.இத்தீர்ப்பு பற்றிய சந்தேகம் ராஜீவ் குடும்பத்துக்கு  இருந்திருக்கலாம். குற்றவாளி என நீதிமன்றம் தண்டனை விதித்த நளினியை ராஜீவின் மகள் பிரியங்கா சந்தித்து கதைத்தார்.அவர்கள் இருவரும் என்ன கதைத்தார்கள் என்ற விபரம் இது வரை வெளியில் வரவில்லை.
தியாகராஜனைப் போன்றே மேலும் பலருக்கு சுடலை ஞானம் பி றந்து மனசாட்சி விழித்தது.ஆயுதம் வாங்கியதில் ஊழல்  நடந்ததாக பாதுகாப்புப் பி ரிவில்  கடமையாற்றிய ஒருவர் ஓய்வுபெற்ற பி ன் உளறினார்    கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை   பு தினம் பார்க்கும்படி மோடி கூறியதாக ஓய்வு பெற்ற உயர் அதிகாரி தெரிவித்தார். அப்பாவிகளை என் கவுண்டரில் கொலை செய்த‌ வழக்குகள் சில நடைபெறுகின்றன.இந்தக் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பி விட்டார்கள்.
 . பதவிக்காகவு  ம் சொகுசு வாழ்க்கைக்காகவும் மனசாட்சியைப் புறம் தள்ளிவிட்டு தெரிந்து கொண்டு தப்புச் செய்பவர்களின் மனசாட்சி காலம் கடந்து விழித்துக்கொளிவதால் பாதிக்க ப்பட்டவர்களு க்கு எவ்வித பி ரயோசனமும் இல்லை.

வர்மா
சுடர் ஒளி01/01/13

No comments: