Tuesday, December 17, 2013

கூட்டணிக்கு தயாராகும் தமிழகம்


வட இந்தியாவின் நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் தலைவர்கள் இடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக்கமும்,  காங்கிரஸ் கட்சி  ஓடும் புளியம் பழமும் போல் ஒட்டிக்கொள்ளாமல் கூட்டணி சேர்ந் துள்ளன.காங்கிரஸ் தலைமயிலான மத்திய அரசில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறதா இல்லையா என்று கழகத்தொண்டர்கள் விவாதம் செய்கின் றனர். காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டே தன் காரியங்களை சாதித்துக் கொள்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். 

இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில்  யாரோடு யார் கூட்டணி சேர்வது எனத் தெரியாது தேசியக்கட்சித் தலைவர்களும், மாநிலக்கட்சித் தலை வர்களும் தலையை  பிய்த்துக் கொண்டிருக்கும் நிலையில் யாருடனும் கூட்டணி சேராது பொதுத் தேர்தலைச் சந்திப்பதற் கான தனது பயணத்தை ஆரம்பித்து விட்டார் ஜெயலலிதா.  தமிழகம் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவர்களிடமிருந்து விண்ணப்பத்தைக் கோரியுள்ளா. ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடது சாரிகளும், சரத்குமாரும் காத்திருக்கின்றனர். அவர்களை உதாசீனம் செய்துவிட்டு 40 தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாள ரை களமிறக்க முடிவு செய்துள்ளார் ஜெயலலிதா.

தமிழக  சட்டமன்றத் தேர்தலின் போதும் கூட்டணிக் கட்சிகளிளுடன்   ஆலோசனை செய்யாது  தன்னிச்சையாக தனது கட்சி வேட்பாளர்கள் போட்டி யிடும் தொகுதிகளை அறிவித்தார். அவரது அறிவிப்பால் கூட்டணியிலிருந்து விஜயகாந்த் வெளியேறும் நிலை ஏற்பட்டது.இடதுசாரிகளின் சமரச முயற்சியினால் ஜெயலலிதா இறங்கி வந்தார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் சகல மாநிலங்களிலும் எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாது வெற்றி பெற முடியாது.டில்லி சட்ட சபைத் தேர்தலில் புதிதாகக் களமிறங்கிய ஆம் ஆத்மிகட்சி காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாக்கட்க்கும் அதிர்ச்சியைக் கொடுத் துள்ளது.

ஆம் ஆத்மி போன்ற பலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை.ஆகையால்,ஏனைய கட்சி களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டாது. கூட்டணி இல்லாது தனித்துப் போட்டியிடப் போவதாக ஜெயலலிதா அறிவித்ததனால் எதிர்க்கட்சிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளன.கடைசி நேரத்தில் ஜெயலலிதா தங்களை அழைப்பார் என்ற நம்பிக்கையில் இடது சாரிகளும், சரத்குமாரும் காத்திருக்கின்றனர்.
வட இந்தியாவில் பாரதீய ஜனதாக் கட்சியின் வெற்றியால்  கருணாநிதியினது , விஜயகாந்தினதும் பார்வையை பாரதீய ஜனதாக்கட்சியின் பக்கம்  திரும்பியுள்ளது.ஏற்காடு இடைத் தேர்தலில்  தோல்வியடைந்தாலும் தனது கட்சி வேட்பாளர் கட்டுப்பணத்தை திரும்பப் பெற்றதால் கருணாநிதி  உற்சாகமடைந்துள்ளார். இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியாது. திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் போது திருமங்கலம் இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் கட்டுப்பணத்தை இழந்தது.அதேபோன்று ஏற்காடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் கட்டுப்பணம் இழக்க வேண்டும் என்று ஜெயலலிதா  உத்தரவிட்டிருந்தார்.

ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்ற அமைச்சர்களும், தொண்டர்களும் ஏற் காட்டில் முகாமிட்டனர். ஏற்காட்டுத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பெருமாள் இறந்த தனால் மனைவி சரோஜா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகக் கள மிறங்கி கணவரைவிட கூடுதலான வாக்கு பெற்று வெற்றி அடைந்தார்.
காலம் சென்ற பெருமாளின் மனைவி, அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் என்ற இரண்டும் தான் அவருக்கு துணையாக இருந்தன. சட்டமன்றத்துக்குச் சென்று அவர் என்ன  செய்யப் போகிறார் என்று யாருமே கேள்வி எழுப்பவில்லை. தேர்தல் முறைகேடுகள் தாராளமாக நடந்தன.தேர்தல் விதிமீதப்பட்ட தாக குற்றம் சுமத்தப்பட்டது. விதிமீறல் தொடர்பான வழக்கில்  ஜெயலலிதாவின் விளக்கத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. 

ஏற்காடு இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் கட்டுப்பணத்தைப் பெற்றதால் கருணாநிதி மகிழ்ச்சியடைந்துள்ளார். வட மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.காங்கிரஸின் வீழ்ச்சி கருணாநிதியை சிந்திக்க வைத்துள்ளது. தொடர்ந்து இரண்டு முறை மத்தியஅரசை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் படுதோல்வி அடையும் என்பதை ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்  உறுதி யாகக் கூறியுள்ளன. ஆகையினால், காங்கிரஸை கைகழுவி   பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்வதையே  திராவிட முன்னேற்றக்கழகத்தில்  உள்ள பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். மூழ்கும் கப்பல் போல் உள்ள காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு தமிழக மாநிலக் கட்சிகள் தயாராக இல்லை.

இலங்கை பிரச்சினை விவகாரத்தில் வைகோவும் டாக்டர் ராம்தாஸும் காங்கிரஸ் மீது கடும் கோபத்தில் உள்ளனர். பாரதீய ஜனதாக்கட்சியுடன் வைகோ இணைவது உறுதியாகியுள்ளது.டாக்டர் ராமதாஸையும் இணைப்பதற்கான பேச்சு வார்த்தை ஆரம்பமாகியுள்ளது.கருணாநிதியின் பார்வையும் பாரதீய ஜனதாக்கட்சியின் மேல் விழுந்துள்ளது.
கருணாநிதியுடன் பாரதீய ஜனதாக்கட்சி சேர்ந்தால் இவர்களும் வேறு வழியின்றி கூட்டணியில் இருப்பார்கள். ஜெயலலிதாவும், சோவும் பாரதீய ஜனதாக்கட்சித் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாப் பழகுவார்கள். பிரதமராகும் எண்ணம்  ஜெயலலிதாவுக்கு இருப்பதனால் பாரதீய ஜனதாக்கட்சியுடன்  அவர் கூட்டணி சேர மாட்டார்.பாரதீய ஜனதாக்கட்சியை ஆட்சி யில் அமர்த்த வேண்டும் என்ற விருப்பம் சோவுக்கு உண்டு.தமிழகத்தில் பாரதீய ஜனதாக்கட்சியை மலரச்செய்ய வேண்டிய தேவை சோவுக்கு உள்ளது. ஜெயலலிதா தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டுள்ளதால்  பாரதீய ஜனதாக்கட்சி கருணாநிதியுடன் சேரும் நிலை உள்ளது.

தேநீர் விருந்துகளும் திருமண வைபவங்களும் இந்திய அரசியலைப் புரட்டிப்போட்ட சம்பவங்கள் பல உள்ளன. சோ வீட்டுக்கு திருமணம் புதிய அரசியல் பாதையின் சமிக்ஞையாக   இருக்குமோ என்ற  ஐயம் எழுந்துள்ளது. சோவின் வீட்டு விசேடங்களுக்கு ஜெயலலிதாமுன்னணி வகிப்பாங்கு பறந்த நாள்போன்ற சிறப்பான நாட்களில் சோ குடும்பத்துடன் சென்று ஆசிவழங்குவார்.சோ வீட்டுக்கு திருமணத் துக்கு ஜெயலலிதா போகாமல் வாழத்து அனுப்பயதும், கருணாநிதி மனைவி ஸ்டாலின் கனிமொழி ஆகியோர்ருடன் சென்றது. புதிய அரசியல் பார்வையை உருவாக்கி யுள்ளது.

உடல் நிலையைக் காரணம்  காட்டி பொது வைபவங்களில் கலந்துகொள்ளாத கருணாநிதி சோவீட்டுத் திருமணத்துக்கு குடும்பமேதராய் சென்று ஆசி வழங்கியது. புதிய அரசியல்   மாற்றமாக இருக்கலாம். அரசியல் ரீதியாக ஜெயலலிதா துவண்ட போதெல்லாம் சோவின் ஆலோசனை அவரை தெம்படையச் செய்தது.தனது அரசியல் எதிரியின் வெற்றிகளுக்கு பின்னணியில் இருந்த சோவீட்டுத் திருமணத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கருணாநிதி கலந்து கொண்டார்.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும்போது தான் இந்தச் சந்திப்பன் உள்நோக்கம் வெளியேவரும்.

தமிழ் சினிமாவில் அரசியல்வாதிகளின் செப்படி வித்தைகளை வெளிக்காட்டிய விஜயகாந்துக்கு அவரது கட்சியைச் சேர்ந்தவர் களே அரசியல் பாடம் கற்றுக் கொடுக்கி றார்கள்.விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த ஏழு சட்டசபை உறுப்பனர்கள்  ஜெயலலிதாவின் பக்கம்  சாய்ந்துவிட்டனர். விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக்காட்டிய பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியிலிருந்து வெளியேறி யதுடன் சட்டசபை உறுப்பனர் பதவியையும் இராஜினாமா செய்துள்ளார். பண்ருட்டியின் வெளியேற்றம் விஜயகாந்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை
.
பண்ருட்டி ராமச்சந்திரனின் அரசியல் அனுபவம் தான் விஜயகாந்தை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்த்தியது. யாருட னும் கூட்டணி இல்லை என்று முழங்கிய விஜயகாந்த்துக்கு கூட்டணி சேர வேண்டிய உண்மையை வெளிப்படுத்தியவர். 
திராவிட முன்னேற்றக் கழகத்ததிலிருந்து எம்.ஜி.ஆர்.வெளியேறி கட்சி தொடங்கிய போது இவரும் வெளியேறினார். எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர்  ஜெயல லிதாவால் ஓரங்கட்டப்பட்டார்.தனிக் கட்சி ஆரம்பித்து பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியில் ஐக்கி மானார்.ராமதாஸுடனான கருத்து வேறு பாட்டினால் வெளியேறி விஜயகாந்தின் கட்சியில் இணைந்தார்
.
ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர்கள் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணை வதும் கருணாநிதியால் வெறுக்கப்பட்டவர்கள்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதும் தமிழக அரசியல் கலாசாரத் தில் சர்வ சாதாரணமான நடவடிக்கை. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தி லிருந்து வெளியேறிய இவர் மட்டும் விதி விலக்காககருணாநிதியைத் தேடிச்செல்ல வில்லை.   விஜயகாந்தின் கட்சியிலிருந்து  பண்ருடி வெளியேறியதனால் திராவிட முன்னேற்றக்கழகத்துடன் விஜயகாந்த் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது. 

தமிழகத்தில் ஜெயலலிதாவுடனா கருணாநிதியுடன் கூட்டணி சேர்வது என்ற கேள்வி எழுந்தால் பாரதீய ஜனதாக்கட்சி யோசித்துத்தான் முடிவு செய்யும். கருணா நிதியா? விஜயகாந்தா என்று கேட்டால் கருணாநிதிதான் என்று பதிலளித்து விடும் பாரதீய ஜனதாக்கட்சியினதும், விஜயகாந்தி னதும் வாக்கு பலத்தை விட திராவிட முன்னேற்றக்கழகத்தின் வாக்கு வங்கி அதிகம்.கூட்டணி இல்லாது தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை  விஜயகாந்த் நன்கு அறிந்துள்ளார். தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கட்சிகளின் நிலைப்பாடு வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
வர்மா 
 சுடர் ஒளி
15/13/12

No comments: