Wednesday, January 15, 2014

உலகக்கிண்ணம் 2014

சிலி


உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பி பிரிவில் போட்டியிடும் ஸ்பெய்ன், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பலம், பலவீனம் பற்றி கடந்தவாரம் பார்த்தோம். சிலி, அவுஸ்திரேலியா ஆகியவற்றின் பலம், பல வீனம் பற்றி இந்தவாரம் பார்ப்போம்.
                             சிலி
தென் அமெரிக்காவிலிருந்து உலகக்கிண்ணப் போட்டிக்கு தெரிவான நாடுகளில் ஒன்று சிலி.  தரவரிசையில் 15ஆவது இடத்தில் உள்ளது. 1930 ஆம் ஆண்டு முதல் முதலாக உலகக்கிண்ணப்  போட்டியில் விளையாடிய சிலி  ஒன்பதாவது  தடவை உலகக்கிண்ணப்போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தி ஆறு போட்டிகளில் தோல்வியடைந்தது. சிலி 29 கோல்கள் அடித்தது. எதிரணிகள் 25 கோல்கள் அடித்தன. 33 மஞ்சள் அட்டைகளும் இரண்டு சிவப்பு அட்டைகளும் சிலிக்கு எதிராகக் காட்டப் பட்டன.எடியுட்டோ விர்காஸ், ஆதுரோவிடால் ஆகியோர் தலா ஐந்து கோல்கள் அடித்தனர். அலக்ஸ்சன் செஸ் நான்கு கோல்கள் அடித்துள்ளார்.

ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த ஜோர்கே சம்பொலி சிலி நாட்டு உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார். கோல் கீப்பரான கலுடியோ பராவோ அணித் தலைவராக உள்ளார்.சிலியின் நம்பிக்கை நட்சத்தி ரமாக அலெக்ஸ் சன்செஸ் விளங்குகிறார். 17 மில்லியன் டொலர் கொடுத்து  பர்சிலோனா இவரை ஒப்பந்தம் செய்துள் ளது. 64 போட்டிகளில் 22 கோல்கள் அடித்துள்ளார்.
கிரேமெடல், பர்சிலோனா வீரரான மார்கலோ டயல் ஆகியோரும் சிலியின்  வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள் ளார். சிலிக்கு மூன்றாவது இடம் ராசியானது போல் உள்ளது. 1962 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் மூன்றாம் இடம்பெற்றது. 1993 ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணப்போட்டி 2007 ஆம் ஆண்டு 20 வயதுக்குட்பட்ட,  உலகக் கிண்ணப்போட்டி 2000  ஆம் ஆண்டு ஒலிம்பிக்
அவுஸ்திரேலியா
போட்டி ஆகியவற்றில் மூன்றாம் இடம் பெற்றது.

தென்  ஆபிரிக்காவில் 2010 ஆம்  ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் எச் பிரிவில் ஸ்பெய்னும், சிலியும் மோதின.  மூன்று போட்டிகளில் விளையாடிய சிலி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று ஸ்பெய்னுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. அடுத்த உலகக் கிண்ணப் போட்டியிலும் இரண்டு நாடுகளும் ஒரே குழுவில் உள்ளன.
பிரான்ஸில் 1998   ஆண்டும் தென் ஆபிரிக்காவில் 2010 ஆம் ஆண்டும் நடைபெற்ற உலகக்கிண்ண உதை பந்தாட்டப்போட்டியில் முதல் சுற்றில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சிலி, இரண்டு போட்டிகளிலும்  பிரேஸிலிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
எலியாஸ் பகுரோ, இவான் சமோரானோமாகலோ சலாஸ் ஆகியோர் சிலி அணியின் முன்னாள் வீரர்களாவர்

                          அவுஸ்திரேலியா

 கண்டங்களில் ஒன்றான அவுஸ்திரேலியா, ஆசியாக் கண்டத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிட்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத்தகுதி பெற்றது. 1974 ஆம் ஆண்டு முதல் முதலாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்று பலமான நாடுகளுக்கு அதிர்ச்சியளித்தது.
தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 58 ஆவது இடத்தில் உள்ளது.தகுதிகாண் மூன்றாவது சுற்றில் டி பிரிவில் தாய்லாந்து, ஓமான், சவூதி அரேபயா, அவுஸ்திரேலிய ஆகியன மோதின. நான்கு d எட்டு வெற்றி. இரண்டு தோல்வி நான்கு போட்டிகள்.
சமநிலையில் முடிவடைந்தது. அவுஸ்திரேலியா 25 கோல்கள் அடித்தது. எதிரணிகள் 12 கோல்கள் அடித்தன. 15 புள்ளிகளுடன் முதலிடம் படித்து நான்காவது தகுதி காண் போட்டியில் நுழைந்தது.

அவுஸ்திரேலியா, ஜப்பான், ஜோர்தான்,ஓமான், ஈராக் ஆகிய  நாடுகள் நான்காவது தகுதி காண்போட்டியில் விளையாடின. எட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகளை சமப்படுத்தியது. நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஜோர்தானுக்கு எதிராக 4-0 கோல் கணக்கில்  வெற்றிபெற்றது. அவுஸ்ரேலியா 12 கோல்கள் அடித்தது. எதிராக  ஏழு கோல்கள் அடிக்கப்பட்டன. 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்பெற்று உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டியில் விளையாடத்தகுதி பெற்றது அவுஸ்திரேலியா.
கிரீஸைப் பிறப்படமாகக் கொண்ட அஞ்சலோ பொஸ்ரகு லோ அவுஸ்ரோலியா  அணியின் பயிற்சியாராக உள்ளார். லூகாஸ் நெல் அணித்தலைவராக உள்ளார். கென்னடி ஐந்து கோல்களும் ரிம் சகில், யஹால் மன்,  அலெக்ஸ் புரொஸ் கியூ ஆகியோர்தலா மூன்று கோல்களும் அடித்துள்ளார். ரிம் சகில்  அவுஸ்திரேலி யாவின் நம்பக்கை நட்சத்திரமாக உள்ளார்.
2006 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப்போட்டியில் இரண்டாவது சுற்றுத் தெரிவானது 1999 ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட போட்டியில் இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியடைந்தது. ஜொன் னிவாரன், மாக்விடுகா, ஸ்கொட் சிப்பெட் பீல்ட் ஆகியோர்  அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்களாவர். ஸ்பெய்ன் நெதர்லாந்து ஆகியன அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

   ரமணி 

சுடர் ஒளி 12/01/14

No comments: