கிரீஸ் |
கிரீஸ்
ஐரோப்பா கண்டத்திலிருந்து உலகக்கிண்ணப் போட்டிக்குத் தெரிவான கிரீஸ் தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ளது. கடைசி நேரம் வரை காத்திருந்து பிளே ஓவ் மூலம் தகுதிபெற்றது கிரீஸ். தகுதி காண் போட்டியில் குழு ஜியில் பொஸ்னியா,கிரீஸ், ஸ்லோவாகியா, லிதுவேனியா, லட்வியா,லிக்சென்ரின் ஆகிய நாடுகள் போட்டியிட்டன.
10 போட்டிகளில் விளையாடிய கிரீஸ் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தியது. ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. பொஸ்னியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் கோல் அடிக்காது சம நிலையில் முடிந்தது. இரண்டவதுபோட்டியில் 3-1 கோல் கணக்கில் கிரீஸ் தோல்வியடைந்தது.
பொஸ்னியா, கிரீஸ் ஆகிய இரு நாடுகளும் தலா 25புள்ளிகள் பெற்றன. அதிக கோல்கள் அடித்த பொஸ்னியா முதலிடத்தைப் பிடித்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. பொஸ்னியா 30கோல்களும் கிரீஸ் 24கோல்களும் அடித்தன. இதனால் பிளே ஒவ்போட்டியில் விளையாடி வெற்றி பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.
ரொமேனியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 3-1 கோல் கணக்கில் கிரீஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இரு நாடுகளும் தலா ஒரு கோல் அடித்ததனால் சமநிலையில் முடிந்தது. மிரோடுலோவ் ஐந்துகோல்களும், சல்பன் நிடிஸ் நான்கு கோல்களும் அடித்தனர்.
1994ஆம் ஆண்டு முதன் முதலாக உலகக்கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்ற கிரீஸ் மூன்றவது முறையாக உலகக்கிண்ணப்போட்டியில் விளையாடுகிறது. 2010 ஆம் ஆண்டு பீ பிரிவில் ஆர்ஜென்ரினா,தென்கொரியா, நைஜீரியா ஆகியவற்றுடன் விளையாடிய கிரீஸ் ஒருபோட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து மூன்றாவது இடம் படித்து வெளியேறியது.
பெர்னாண்டோ சன்தோஸ் கிரீஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். 39 வயதான இவர் போத்துகலைச் சேர்ந்தவர். 2012 யூரோ கிண்ணப்போட்டியில் கால் இறுதி வரை அணியை அழைத்துச் சென்றவர் ஜோக்கியோ கர கோனிஸ். கிரீஸ் அணியின் தலைவர் யூரோ 2004 சம்பயன் கிண்ணத்தை கிரீஸ் பெற உதவியவர். லைக் கரகோனிஸ் 72 போட்டிகளில் 32 கோல்கள் அடித்தவர். சல்பயன், கிடிஸ் சமராஸ் ஆகியோர் கிரீஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். ஸ்கோரிகாஸ் நிகோபொலிடிஸ் பசினாஸ் ஆகியோர் கிரீஸ் அணியின் முன்னாள் வீரர்களாவர்.
கொலம்பியா |
தென்னமெரிக்காவிலிருந்து உலகக்கிண்ண உதை பந்தாட்டப்போட்டிக்குத் தகுதி பெற்ற கொலம்பியா தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.பொலிவியா, கொலம்பியா, வெனிசுவெலா,ஆர்ஜென்ரீனா, பெரு, ஈக்குவடோர், உருகுவே, சிலி,பரகுவே ஆகிய நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின.16 போட்டிகளில் விளையாடிய கொலம்பியா ஒன்பது வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமப்படுத்தி நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தது.
கொலம்பயா 27 கோல்கள் அடித்தது. எதிராக 13கோல்கள் அடிக்கப்பட்டன. 30 புள்ளிகளைப் பெற்றது. கொலம்பியாவுக்கு எதிராக 37 மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையும் காட்டப்பட்டன. ரடமெல் பல்கோ ஒன்பது கோல்கள் அடித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானதே உலகக்கிண்ண சாதனையாகும்.பொலிவியாவுக்கு எதிராக 5-0 கோல்களாலும். உருகுவேக்கு எதிராக 4-0 கோல்களாலும் வெற்றிபெற்றது. ஐந்தாவது முறையாக உலகக்கிண்ணப்போட்டியில் விளையாட உள்ளது. கொலம்பியா. ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த ஜோஸ்பெக்மன் கொலம்பியாவின் பயிற்சியாளராக உள்ளார். மரியோ அணித்தலைவராக உள்ளார். பரகு வேக்கு எதிரான போட்டியில் அதிரடியாக இரண்டு கோல்கள் அடித்தார். மத்திய களவீரரான இவர் அட்லாண்டா கழகத்தின் முன்னாள் வீரராவார்.
கொலம்பியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பல்கன் 67 போட்டிகளில் 52 கோல்கள் அடித்துள்ளார். 22 வயதான இவரை 55 மில்லியன் டொலருக்கு மொனாகோ கழகம் ஒப்பந்தம் செய்தது.22 வயதான ஜேம்ஸ் ரொட்ரிகோவையும், மொனாகோ 40 மில்லியன் டொலருக்கு ஒப்பந்தம் செய்தது. மரியோயேபெஸ்,லுயிஸ் பெரோ, ஜேம்ஸ் ரொட்ரி ஆகியோரும் கொலம்பியாவின் நம்பிக்கை நட்சத்திரங் களாவர். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணப்போட்டியில் கொலம்பியா மூன்றாம் இடம் பெற்றது.
ஹிகுதா,வல்டெரமா, அஸ்பரில்லா ஆகியோர் கொலம்பியாவின் முன்னாள் வீரர்களாவர்.
ரமணி
சுடர் ஒளி 12/01/14
No comments:
Post a Comment