ரடமெல் பல்கோ |
கொலம்பியா, ஐவரிகோஸ்ட், ஜப்பான், கிரீஸ் ஆகியன உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சீ பிரிவில் உள்ளன. இந்த நான்கு நாடுகளும் ஏனைய நாடுகளை விட சற்று பலம் குறைந்த நாடுகளாக உள்ளன. கொலம்பியாவிலிருந்து ஆறு வீரர்களையும், ஐவரிகோஸ்ட்டிலிருந்து மூன்று வீரர்களையும், ஜப்பான், கிரீஸ் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு வீரரையும் கொண்ட அணி உருவாக்கப் பட்டுள்ளது.
கிரீஸ், கொலம்பியா, ஐவரிகோஸ்ட் ஆகியன இறுதி நேரம் வரை காத்திருந்து தகுதி பெற்றன. ஜப்பான் உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடத்தகுதி பெற்றது என்றாலும் ஐரோப்பிய,வட அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுடன் ஒப்படும் போது பலம் குறைந்த நாடாக உள்ளது.
கொலம்பியாவின் வீரரான டேவிட் எஸ்பனா கோல் கீப்பராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பின்கள வீரர்களாகசொக்ரரிஸ் பபசதொபொலுஸ்[கிரீஸ்],கொலோ தோர்[ஐவரிகோஸ்ட்]கிரிஸ்ரியன் சபாடா[கொலம்பியா] ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மத்திய கள வீரர்களாக யாயாரொரி(ஜப்பான்), பிரடி குரின்(கொலம்பியா), சைடோ டொம்பியா(ஐவரிகோஸ்ட்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
முன்கள வீரர்களாக ரடமெல் பல்கோ (கொலம்பியா), ஜக்ஸன் மரினஸ்(கொலம்பியா), சைடன் டும்பியா(ஐவரிகோஸ்ட்) ஆகியோர் தெரி வாகியுள்ளனர். மேலதிக வீரர்களாக இஜி சுவஸ் ஹிமா,அஸ்சுரோ இடா, லுயிஸ் முரில் ஆகிய ஜப்பான் வீரர்களும், ஜுனு ஸுனிதா என்ற கொலம்பிய வீரரும் தெரிவாகியுள்ளனர்.
கோல்கீப்பர், இரண்டு பின்கள வீரர்கள் கொலம்பிய வீரர்களாக இருப்பதனால் எதிரணி கோல் அடிக்கும் சாத்தியக்கூறு குறைவு. ஒரு மத்தியகள வீரரும் இரண்டு முன்கள வீரர்களும் கொலம்பியாவைச் சார்ந்ததனால் கொலம்பியாவின் பலம் அதிகரித்துள்ளது.
கிரீஸ் நாட்டின் பின்கள வீரர் பபிஸ்ரசோ பொலு சோவைத் தாண்டிச் செல்வது சிரமமானது. அதே போன்றுதான் கோலோ ரெஸி, சபாடாவும் கடுமையாகப் போராடுவார்கள்.
மஸின்ராஸ், டும்பியா ஆகிய இருவரும் தகுதி காண் போட்டியில் தலா எட்டு கோல்களை அடித்து அசத்தியுள்ளனர். கொலம்பியா, ஐவரிகோஸ்ட், கிரீஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் பலமுறை மோதியிருக்கின்றன. ஆனால் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இந்த நான்கு நாடுகளும் இப்பொழுதுதான் முதன்முதலில் சந்திக்கவுள்ளன.
கொலம்பியா, கிரீஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் கிரீஸ் வெற்றிபெற்றது. ஜப்பானை இரண்டு முறை சந்தித்த ஐவரிகோஸ்ட் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றது. ஜப்பானிடம் கொலம்பியா தோல்வியடையவில்லை. கொன்பரடேசன் கிண்ணப் போட்டியில் கிரீஸைச் சந்தித்த கொலம்பியா வெற்றியடைந்தது.
ரமணி
சுடர் ஒளி 19/01/14
No comments:
Post a Comment