Thursday, January 2, 2014

உலகக்கிண்ணம் 2014

மெக்ஸிகோ

பிறேஸிலில் அடுத்த ஆண்டு  நடைபெறவுள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்  ஏ  பிரிவில்  பிறேஸில், குரோஷியா ஆகியவற்றுடன் மெக்ஸிகோ, கமரூன் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.  பிறேஸில், குரோஷியா ஆகிய நாடுகளின் பலத்தையும், பலவீனத்தையும் கடந்த வாரம் பார்த்தோம். மெக்ஸிகோ, கமரூன் ஆகிய நாடுகளின் பலம், பலவீனம் பற்றி இந்தவாரம் அறிவோம்.          

                                                                       மெக்ஸிகோ
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கு வட அமெரிக்காவில் இருந்து மிகக் கடும் பிரயத்தனத் தின் மத்தியில் கடைசியாகத் தெரிவான நாடு மெக்ஸிகோ. தர வரிசையில் ஓரிடம் பின் தங்கி 21 ஆவது இடத்தில் உள்ளது.முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் தகுதிபெற்ற மெக்ஸிகோ 14 ஆவது முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.1970,1986 ஆம் ஆண்டுகளில் கால் இறுதிவரை முன்னேறியது. 1998 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இரண்டு  தடவைகள் கால் இறுதிக்கு முன்னேறியதே உலகக்கிண்ண வரலாற்றில் மெக்ஸிகோவின் சாதனையாக உள்ளது.
தகுதி காண் போட்டியில்  மூன்றாவது சுற்றில்  கொஸ்ரரிகா, கயானா, எல்சல்வடோர்,  ஆகிய நாடுகளுடன் மெக்ஸிகோ மோதியது.
ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவானது.மெக்ஸிகோ 15 கோல்கள் அடித்தது.எதிரணிகள் இரண்டு கோல்கள் மட்டுமே அடித்தன.18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று இறுதித் தகுதிகாண்சுற்றில் நுழைந்தது.
ஜமேக்கா,ஹாண்டூராஸ், அமெரிக்கா, பனாமா, கொஸ்ரரிகா ஆகிய நாடுகளுடன் மெக்ஸிகோ  போட்டியிட்டது.10 போட்டிகளில் விளையாடிய மெக்ஸிகோ இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்து போட்டிகளை சமப்படுத்தி மூன்று போட்டிகளில் தோல்விய டைந்தது மெக்ஸிகோ ஏழு   கோல்கள்  அடித்தது. எதிரணிகள் ஒன்பது கோல்கள் அடித்தன.11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது.

நியூஸிலாந்து, மெக்ஸிகோ ஆகிய இரண்டு நாடுகளும் பிளேஓப் போட்டியில் சந்தித்தன. பிளேஓப் போட்டியில் வெற்றி பெற்றால் தான்  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட முடியும் என்பதனால் இரண்டு நாடுகளுக்கும் அப்போட்டி முக்கியமானதாக இருந்தது. முதலாவது பிளேஓப் போட்டியில் மெக்ஸிகோ ஐந்து கோல்கள் அடித்தது. நியூஸிலாந்து  ஒரு கோல் அடித்தது. முதலாவது வெற்றி மெக்ஸிகோவுக்கு நம்பிக்கையூட்டியது.இரண்டாவது போட்டியில் ஐந்து கோல்களுக்கு அதிகமாக அடித்து வெற்றி பெற வேண்டிய நிலை நியூஸிலாந்துக்கு ஏற்பட்டது. அதே வேளை மெக்ஸிகோ அதிக கோல்கள் அடிக்காது தடுக்க வேண்டும்.இரண்டாவது போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மெக்ஸிகோ உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதியை பெற்றது.

ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த மிகுல் ஹரேரரா மெக்ஸிகோ அணியின் பயிற்சியாளராக உள்ளார்.2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மெக்ஸிகோ பங்குபற்றியதற்கு இவரது பங்களிப்பு மிக அதிகம்.ரபெல் மதியூஸ் அல்வரிஸ் அணித் தலைவராக உள்ளார்.  இவர் பர்ஸிலோனா அணியின் முன்னாள் பின்  களவீரர்.ஒரபி பெரல்ரா 12 கோல்களையும், ஐவிர் ஹர்னன்டெல் ஐந்து கோல்களையும் அடித்துள்ளனர். மான்சிஸ்ரர் யுனைட்டட்டின்   முன்னணி வீரரான இவரே மெக்ஸிகோவின் நட்சத்திர வீரராக உள்ளார்.
அன்ரஸ்குவார்டாடோ,கோவனிடொஸ், சந்தோஸ் ஆகியோர் நம்பிக்கைக்குரிய வீரர்களாக உள்ளனர்.2012 ஒலிம்பிக்கில் கலக்கிய இளம் வீரர்களான ஒரபி பெரல்ரா, ராயுல்,ஜமெனஸ்,காலோஸ்பெனா ஆகியோர் பரபல வீரர்களாக உள்ளனர்.   அன்ரனியோ, கர்பாஹா,ஹீகோ சன்செஸ், ஜர்ஜி தம் பொஸ் பலன்கோ ஆகியோர் மெக்ஸி கோவின் முன்னாள் வீரர்களாவர்.2012 ஒலிம்பக்கில் பங்குபற்றியமை,1990  கொன்பர டேசன் கப சம்பயன், 2005 ஆம் ஆண்டு  17 வயதுக்குட்பட்ட சம்பியன் ஆகியவை மெக்ஸிகோவில் சாதனைகளாகும்.
தென்னாபரிக்காவில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் உருகுவே,பிரான்ஸ், தென்னாபிரிக்கா ஆகியவற்றுடன் மோதி ஒரு வெற்றி, ஒரு   தோல்வி, ஒரு போட்டியை சமப்படுத்தி முதல் சுற்றுடன் வெறியேறியது
          

                                                                 கமரூன்             

ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற கமரூனும் மெக்ஸிகோவைப் போன்றே மிகுந்த போராட்டத்தின் பின்னர் பிளேஓப் போட்டியில் வெற்றி பெற்று. உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. ஆபிரிக் கக்கண்டத்தில் இருந்து தெரிவாகிய கமரூன் தரவரிசையில் ஓரிடம் முன்னேறி 50 ஆவது இடத்தில் இருக்கிறது. 1982 ஆம் ஆண்டு முதல்முதலாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப்  போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்ற கமரூன் ஏழாவது முறையாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப்  போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளது.1990 ஆம் ஆண்டு கால் இறுதி வரை முன்னேறியதே கமரூனின் சாதனையாக உள்ளது. ஏனைய சகல போட்டிகளிலும் முதல் சுற்றுடன் வெளி யேறியது. 

மிகுந்த போராட்டத்தின் பின் பிளேஓவ் சுற்றில் வெற்றி பெற்று உலகக்கிண்ண உதைபந்தாட்டப்  போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. கொங்கோ, லிபயா, டோகோ  ஆகிய நாடுகளுடன் தகுதிகாண் போட்டியில் விளையாடியது. ஆறு போட்டிகளில் விளையாடிய கமரூன் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்து, ஒரு போட்டியை சமப்படுத்தியது.கமரூன் எட்டு கோல்கள் அடித்தது.எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன.13 புள்ளிகளைப் பெற்ற கமரூன் துனியாவை பளே ஓவ் போட்டியில் சந்தித்தது.

பிளேஓவ் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலகக்கிண்ணப்   போட்டியில் விளையாடலாம் என்ப தால் பிளேஓவ் போட்டிகள் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.முதல் போட்டியில் இரண்டு நாடுகளும் கோல் அடிக்காமையினால் சமநிலையில் முடிவடைந்தது.இரண்டாவது போட்டியில் கமரூனின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத துனியா 4-1 கோல் கணக்கில் தோல்வியடைந்தது.


ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த வொல்கர் பன்கி கமரூனுக்கு பயிற்சியாளராக உள்ளார். தலைவர் சாமுவல் எரோஓ அணியின் நட்சத்திர வீரராக உள்ளார்.சாமுவல் எரோ ஓ,ஜின் மகொன், எரிக்போ ஆகியோர் தலா இரண்டு கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளனர். 112 போட்டிகளில் விளை யாடிய தலைவர் 55 கோல்கள் அடித்துள்ளார். அலெக்சோவை ஜீன்மாகான்,ஸ்ரீபன் மபயா ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள்.17 வயதான பப்ரிசி ஒலிங்கா மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.5 அடி ஏழு அங்குல உயரமுடைய இவரை சுவீற் பீற் என செல்லமாக அழைக்கிறார்கள். ரொஜமில்லா மார்க், விவியின் போ ரிஜேபேட் சோங் ஆகியோர் முன்னாள் வீரர்களாவர்.2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பக்கில் சம்பியனானது. பிரேஸிலும், குரோஷியாவும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.


சுடர் ஒளி
 ரமணி
29/12/13

No comments: