Friday, January 10, 2014

உலகக்கிண்ணம் 2014

ஸ்பெயின்
 
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் பீ பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. ஸ்பெயின், நெதர்லாந்து ஆகியன ஐரோப்பாக் கண்டத்திலிருந்தும், சிலி,தென்னமெரிக்காவிலிருந்தும் தகுதி பெற்றன.ஆசிய நாடுகளுட னும், ஓசியானிக் தீவுகளில் உள்ள நாடுகளுடனும் போட்டியிட்டு உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியை அவுஸ்திரேலியா பெற்றது.பீ பிரிவின் போட்டியைக்காண உலகமே ஆவலுடன் உள்ளது. தென்னாபரிக்காவில் 2010 ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில்  கடைசி நிமிடத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி சம்பயனான ஸ்பெயினும், கடைசி நேரத்தில் சம்பியன் பட்டத்தை இழந்த நெதர்லாந்தும் முதல் போட்டியில் மோதுகின்றன. உலகக் கிண்ணச் சம்பியன் என்பதை ஸ்பெயின் நிரூபக்குமா அல்லது நெதர்லாந்து இழப்பை ஈடுசெய்யுமா என்பதை அறிய இரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

                                ஸ்பெயின்

உலகக்கிண்ணச் சம்பியன் என்பதை நிரூபக்கும் ஸ்பெயின் 2008 ஆம் ஆண்டு முதல் தரவரிசையில்  தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.2005 ஆம் ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்த ஸ்பெயின் 2006ஆம் ஆண்டு 12 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.2007ஆம் ஆண்டு நான்காவது இடத்துக்கு முன்னேறி 2008ஆம் ஆண்டு முதலிடத்தைப் பிடித்துஇன்றுவரை முதலிடத்தில் உள்ளது. இது பீ.பா தர வரிசையின் புதிய சாதனை.
1934 ஆம் ஆண்டு முதல் முதலில்  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்குத் தகுதிப் பெற்ற ஸ்பெயின் 14 ஆவது முறையாக உலகக்கிண்ணப்  போட்டியில் விளையாடுகிறது.ஸ்பெயின், பிரான்ஸ், பின்லாந்து, ஜோர்ஜியா, பெலாரஸ்  ஆகிய நாடுகள் ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து குழு ஐயில் தகுதி காண் போட்டியில் விளையாடின. எட்டுப்போட்டிகளில் விளையாடிய ஸ்பெயின் ஆறு போட்டி களில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தியது. எந்த ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் 20 புள்ளி களுடன் முதலிடத்தைப் பிடித்தது.

ஸ்பெயின் 12 கோல்கள் அடித்தது. எதிரணிகள் மூன்று கோல்கள் மட்டுமே அடித்தன. ஐந்து போட்டிகளில் எதிரணிகள் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பெலாரஸிக்கு எதிராக அதிகபட்சமாக 4-0 கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்பெயினுக்கு எதிராக 16 மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையும் காண்பக்கப்பட்டன.பிரங்க்ரொப ஐந்து கோல்களும், பெட்ரோ நான்கு கோல்களும் அடித்ததுள்ளனர். விசென்ரே டெல் பொஸ்கியூ பிரான்ஸ் அணியின்  பயிற்சியாளராக உள்ளார்.62 வயதான இவர் மூன்று பிரபலமான சுற்றுப் போட்டிகளில் பங்களிப்பு வழங்கியவர்.கோல் கீப்பரான ஐகர் கஸில்லாஸ் ஸ்பெயின் அணியின் தலைவராக உள்ளார். ஐரோப்பாவின் பிரபல கழகமான ரியல்  மட்ரிட் அணியின் கோல் கீப்பரும்  இவர்தான். 152போட்டிகளில் விளையாடியுள்ளார். எதிரணிகள் 32 கோல்களையே அடித்துள்ளன. 14 வருடங்ளாகத் தொடர்ந்து விளையாடி வருகிறார்.இன்னிஸ்டா,டேவிட் வில்லா,ஷேவி ஆகிய மூவரையும் எதிரணி வீரர்கள் கட்டுப்படுத்துவது மிகவு
நெதர்லாந்து 
 
ம் சிரமம்.பெர்னாண்டோ ரொரெஸ் மொன்ரெலா, கஸோல்லா, மாதா, டேவிட் சில்வா டேவிட்டி ஆகியோர் ஐரோப்பியக் கழகங்களில் விளையாடும் வீரர்கள்.

பர்சிலோனா கழகத்தில் விளையாடும் 22 வயதான கிறிஸ்ரியன் ரெல்லோ மீது மிகுந்த  எதிர்பார்ப்பு உள்ளது. மத்தியகள வீரரான இவர் எந்தத்தடையையும் உடைத்து புகுந்து விடும் திறமை உள்ளவர்.உலகக். கிண்ணபோட்டியில் 1950,1990, 1998,2006 ஆம் ஆண்டுகளில் கால் இறுதிவரை முன்னேறியது. 2010உலகக்கிண்ணச் சம்பயானதே ஸ்பெயின் சாதனையாகும்.லுயிஸ் ஸிரெஸ், எமிலோ, பட்டகியூன்ரோ, பெர்னாண் டோ, ஹிர்ரோ ஆகியோர் ஸ்பெயின் அணியின் முன்னாள் வீரர்களாவர்.
1999 ஆம் ஆண்டு 20 வயதுக்குட்பட்ட சம்பியன்,1992 ஆம் ஆண்டு பர்சிலோனா ஒலிம்பிக் சம்பயன் உலகக். கிண்ண சம்பயன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் காத்திருக்கிறது ஸ்பெயின்.

                                    நெதர்லாந்து 

ஐரோப்பா கண்டத்திலிருந்து உலகக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்ற நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று. நெதர்லாந்து, ரோமனிய, ஹங்கேரி, துருக்கி,எஸ்தோனியா, அன்டோரா ஆகிய நாடுகள் டி பிரிவில் தகுதிகாண் போட்டியில் விளையாடின. 10போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து 9போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தி தோல்வியடையாது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. நெதர்லாந்து 34 கோல்கள் அடித்தது. ஐரோப்பாவிலிருந்து ஜேர்மனி அதிகபட்சமாக 36 
கோல்கள்  அடித்தது.எதிர்அணிகள் 5 கோல்கள் அடித்தன. 28 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது. ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் 8-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஹங்கேரிக்கு எதிரான இன்னொரு போட்டியில் 4 கோல்கள் அடித்தது. ரோமரியாவுக்கு எதிரான 2 போட்டிகளிலும் தலா 4 கோல்கள் அடித்து அசத்தி யது நெதர்லாந்து.

 9போட்டிகளில் விளையாடிய தலைவரான ரொபன் வன் பேர்ஸி 11 கோல்கள் அடித்தார். ஜெரிமன் லென்ஸ் ரபெல் வன் டெர்வார்ட் ஆகியோர் தலா 5கோல்கள் அடித்தனர். நெதர்லாந்து எதிராக 18 மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டன. தரவரிசையில் 9ஆம் இடத்தில் உள்ளது. லுயிஸ் வன் கல் நெதர்லாந்து அணியின் பயிற்சியாளராகவுள்ளார். பர்ஸிலோனா, பேயரான் முனிச் அஜெக்ஸ் ஏ இஸட் ஆகிய கழகங்களில் முன் பயிற்சியாளரான இவர் நெதர்லாந்து அணியின் முன்னாள் வீரர் ஆவார். ரொபன் வன் பேர்ஸி அணிந்த தலைவராக வழிநடத்துகிறார். மான் செஸ்ரர் யுனைட்டட் கழகத்தின் முன்னணி வீரராக  திகழ்கிறார்.

1934ஆம் ஆண்டு முதல் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில்  விளையாடத் தகுதி பெற்ற நெதர்லாந்து 1 ஆவது தடவையாக உலகக்கிண்ணப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.  உதைபந்தாட்டப்போட்டியில் அச்சுறுத்தும் நாடான  நெதர்லாந்து  ஒருபோட்டியிலும், இது வரை சம்பியனாகவில்லை.
ரபெல் வன் டெர்வார்ட்,அர்ஜென்ரொபென் ஆகியோருடன் இளம் வீரர்களான கெவின் டார்லி ஜமேட் ஆகியோரும் சாதிக்க காத்திருந்தனர்.
1908,1912,1920ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் 3ஆம் இடத்தைப்  பிடித்தது. உலகக்கிண்ண இறுதிப் போட்டியில்1974ஆம் ஆண்டு மேற்கு ஜேர்மனியிடமும், 1928ஆம் ஆஜென்ரீனாவிடமும், 2010ஆம் ஆண்டு ஸ்பெயினிடமும் தோல்வியடைந்து சம்பியன் பட்டத்தை தவறவிட்டது.ஜொஹன் மர்கோ வன் பஸ்ரன், டேனிஸ் பேர்கம் ஆகியோர் நெதர்லாந்து அணி முன்னாள் வீரர்களாவர். 
  ரமணி 
சுடர் ஒளி
05/01/14

No comments: