Sunday, January 12, 2014

கலையும் இலக்கிமும்.

கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரனின் மணிவிழாவை முன்னிட்டு மணிவிழாகுழு வெளியிட்ட பெறுமதி வாய்ந்த புத்தகம் கலையும் இலக்கிமும்.கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரனால் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
கலாநிதி .நாகேஸ்வரனால் எழுதப்பட்டு சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்த கட்டுரைகள் இப்புத்தகத்தில் உள்ளன. வரலாறு,  பெண்ணியம், அரசறிவியல்,கலை இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூகம், நூலாய்வு ஆகிய தலைப்புகளில் 23 கட்டுரைகள்  உள்ளன.
கலாநிதிப்பட்டத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட சுதேச மருத்துவம் பற்றிய  ஆய்வுக் கட்டுரையும் இந்த நூலிலே உள்ளது. பல்வேறு கால கட்டங்களில் இவரால் எழுதப்பட்ட கட்டுரைகளை நூலாக்கிய மணி விழாக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். யோகக்கலை நவீனயுகத்தின் மருத்துவம் எனும் தலைப்பில் யோகக்கலைக்கும், மருத்துவத்திற்கும் உள்ள தொடர்பினை துலாம்பரமாக வெளிப்படுத்துகிறார். திருமூலரின் பாடல்களில் உள்ள மருத்துவக் குறிப்புகளைத் தந்து நாடிசாஸ்திரத்துக்கும் யோகக் கலைக்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்துகிறார்.
மருத்துவத்தில் நோயைக் கண்டறியும் முறைகளை விளக்குகிறார். நோயினைக் கண்டறியும் இந்த மருத்துவமுறை எட்டு வகைப்படும்.
1.நாடிபிடித்து அறிதல்
2.ஸ்பரிஸ உணர்ச்சி மூலம் அறிதல்
3.உடலின் தன்மை, வெப்பம், குளிர்ச்சி, பருமன் மூலம் அறிதல்
4.ஒலி பேச்சின் மூலம் அறிதல்
5.கண்தோற்றம்,கண்நிறமாற்றத்தைக் கொண்டு அறிதல்
6.சிறுநீர் மூலம் அறிதல்
7.நாக்கில் வெண்மை படித்திருப்பதன் மூலம் அறிதல்
8.மலத்தின் தன்மை கொண்டறிதல்

சித்தமருத்துவமும் யோக மருத்துவமும் தமிழரின் சொத்துக்களே என்கிறார் ஆசிரியர்.
பெண்ணின் மாண்பும், பெண்ணின் நலன்களும் என்னும் கட்டுரையின் மூலம் பெண்களின் சிறப்பையும் தனித் தன்மைகளையும் விபரித்துள்ளார்.சங்க இலக்கியத்தில் பெண்கள், காதல் இன்பம் தரும் பெண்கள்! சிலப்பதிகாரக் காவியத் தலைவி பத்தினி தெய்வம் கண்ணகி, காவியச் செல்வி மணி மேகலை, வெற்றியின்பன் ஒரு பெண்/ஆண். கம்பன் கண்ட பெண்கள் எனும் தலைப்பல் அகலிகை, கைகேயி, சீதை, ஜானகி, ர்ப்பனகை, மண்டோதரி கூனி (மந்தரை) ஆகியோரின் குண இயல்பை விபரிக்கிறார்.
பாரதி கண்ட புதுமைப் பெண், டிக்கொடுத்த சுடர்க்கொடி (ஆண் டாள்)  வரிசையில் துர்க்கா கலாநிதி தங்கம்மா அப்பாக் குட்டியையும் பதிந்துள்ளார்.

 சுதேச தமிழ் மருத்துவ இலக்கியமான பரராசசேகரத்தின் யாப்பியற் கவிதை வளம் இன்றும் நடைமுறையிலே பயன்படும்.தமிழ் மருந்துகள் குறித்த இலக்கியச் சான்றுகள், சுதேச தமிழ் மருத்துவ நூல்கள், ஈழத்துச் சுதேச மருத்துவ நூல்களுள் முதன்மையானது.  பரராசசேகரம் எனும் தலைப்புகளில்  சுதேச மருத்துவம் /தமிழ் மருத்துவம் பற்றிவிரிவான தகவல்களைத் தந்துள்ளனர்.

காலை இஞ்சி கடும்பகல்சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் தின்போம்
கோலை யூன்றி குறுகி நடப்பினும்
காலை வீசிகடுக நடப்பதே.

நாளும் பனம்பழத்தை நல்அமுதாய்
உண்ணுங்கால்ஆளும் கரப்பான் ஆழு கிரந்தி!
 நீளு மலஞ்சிக்கும் விதத்தில் வளி 
சேருத லாம் நோய்க்கணமுற்று
திக்கும் பலக்கும் எனச் செப்பு.
போன்ற பயனுள்ள வைத்திப்பாடல் களைத்தந்துள்ளார்.
இலக்கியம் கற்கும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு பரயோசனமான புத்தகம்.
வெளியீடு:! கலாநிதி  கனக சபாபதி நாகேஸ்வரனின் மணிவிழாகுழு விலை:900/!ரூபா   

 சூரன்
சுடர் ஒளி 05/01/14 

No comments: