உருகுவே |
நான்காவது உலகக்கிண்ண உதைப் பந்தாட்டப் போட்டி பிறேஸிலில் 1950 ஆம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் நடை பெற்ற முதலாவது உலகக்கிண்ணப் போட்டி என்பதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜேர்மனியும், ஜப்பானும் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத்தடை செய்யப்பட்டது.
உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப்போட்டியில் விளையாடுவதற்கு இந்தியா தகுதி பெற்றது. வெறுங்காலுடன் வீரர்கள் விளையாடியதால் உலகக் கிண்ணப்போட்டியில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. 1934 ஆம் ஆண்டு விளையாடிய பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி ஆகியவை தகுதி பெறவில்லை. பொலிவியா முதன் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து இங்கிலாந்து, ஸ்பெய்ன், சுவிட்ஸ்ர்லாந்து, இத்தாலி, சுவீடன், யூகஸ்லோவியா, தென் அமெரிக்காவிலிருந்து, பொலிவியா, சிலி,உருகுவே,பிறேஸில், பரகுவே, வட அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 13 நாடுகள் உலகக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
22 போட்டிகள் நடைபெற்றன 88 கோல்கள் அடிக்கப்பட்டன. பிறேஸில் அதிகபட்சமாக 22 கோல்கள் அடித்தது. 1045246 இரசிகர்கள் போட்டி களைப் பார்வையிட்டனர். பிறேஸில், உருகுவே ஆகியவை இறுதிப்போட்டியில் விளையாடின. உருகுவே இரண்டாவது முறை சம்பியனானது. சுவீடன் மூன்றாம் இடத்தையும், ஸ்பெய்ன் நான்காம் இடத்தையும் பிடித்தன. தகுதி காண்போட்டியில் 34 நாடுகள் விளையாடின.
தகுதி பெற்ற 13 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. குழு 1 இல் பிரேஸில், யூகஸ்லோவியா, சுவீடன்,மெக்ஸிகோ, குழு 2 இல் ஸ்பெய்ன், இங்கிலாந்து,சிலி, அமெரிக்கா, குழு 3இல் சுவீடன், இத்தாலி, பரகுவே, குழு 4 இல் உருகுவே, மெக்ஸிகோ ஆகியவை இடம் பெற்றன. நான்கு குழுக்களிலும் வெற்றி பெற்று முதலிடத்தைப் படித்த நான்கு நாடுகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகின.
பொலிவியாவுக்கு எதிரான போட்டியில் 8!0 கோல்களினால் உருகுவே வெற்றி பெற்றது. சுவீடனுக்கு எதிரான போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கிலும் ஸ்பெய்னுக்கு எதிரான போட்டியில் 6-1 கோல் கணக்கிலும் பிறேஸில் வெற்றிபெற்றது.
பிறேஸில் வீரர் அட்மிர் அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்து கோல்டன் சூ´ விருதைப் பெற்றார்.
போட்டி நடைபெறும் இடம் தூரமாக இருந்ததனால் அடுத்தபோட்டியில் சென்று விளையாடுவதற்கு பிரான்ஸ் மறுத்து விட்டது. 1949 ஆம் ஆண்டு விமான விபத்தில் எட்டு இத்தாலி வீரர்கள் மரணமடைந்ததனால் அந்நாட்டுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பிறேஸிலுக்கு எதிரான போட்டியில் யூகஸ்லோவிய வீரர் ரிஜ்கோமிரிக்கின் தலையில் இரும்பு கேட் ஒன்று விழுந்து காயமடைந்ததால் 10 பேருடன் யூகஸ் லோவியா விளையாடியது.
சுடர் ஒளி
19/01/14
No comments:
Post a Comment