குரோஷிய நாட்டின் பின்கள வீரர் ஜோசிங் சிமுனிக் 10 போட்டிகளில் விளையாடுவதற்கு பீஃபாதடை விதித்ததனால் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அவர் இழந்தார்.ஹிட்லரால் உருவாக்கப்பட்ட நாஜிக் கட்சியின் சுலோகத்தைக் கூறி வணக்கத்தைத் தெரிவித்ததனால் பீஃபா அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பின்னடைந்த குரோஷியா, பிளேஓவ் போட்டிகளில் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தில் விளையாடும் தகுதியைப் பெற்றது.ஐஸ்லண்டுக்கு எதிரான இரண்டாவது தகுதி காண் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்றது. வெற்றியின் மகிழ்ச்சியில் குரோஷியமக்கள் திளைத்திருந்த வேளையில் குரோஷிய அணியின் பின்கள் வீரரான ஜோசிப் சிமுனிக் மைக் ஒன்றுடன் மைதானத்துக்குச் சென்றார்.
மைக்குடன் மைதானத்தின் மையப்பகுதிக்குச் சென்ற ஜோசிப் சிமுனிக் நாஜி சுலோகத்தைக் கூறி வணக்கம் செலுத்தினார். டினமோ ஸக்கிராப் கழக அணித் தலைவர் இதனை வீடியோ பிடித்தார். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சுலோகத்தைக் கூறி வணக்கம் செய்ததனால் பீஃபாவின் விசாரணைக்குழு இச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தது. விசாரணையின் முடிவில் 10 போட்டிகளில் விளையாட ஜோசிப் சிமுனிக்கு தடை விதிக்கப்பட்டதுடன் 30 ஆயிரம் சுவிஸ் பிராங் (20.700 டொலர்) அபராதமும் விதிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் பிறந்த ஜோசிப் சிமுனிக் குரோஷியாவில் குடியேறியுள்ளார். குரோஷியாவின் பிரபல்யமான டினமோஸ் க்கிராப் அணியில் விளையாடி வருகிறார். 2002 முதல் 2004 ஆம் ஆண்டுவரை 25 உலகக்கிண்ணப் போட்டிகளிலும், தகுதி காண் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவருக்கு எதிராக ஒன்பது மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையும் காட்டப்பட்டன.

சுடர் ஒளி
ரமணி
29/12/13
No comments:
Post a Comment