ஜீவநதி கலை இலக்கிய மாத சஞ்சிகை யின் ஜனவரி மாத இதழ் கிடைத்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆர்ட் அன்ட் டிசைன் பயிலும் தேவராஜா பவி ராஜின் ஓவியம் அட்டைப்படத்தை அலங்கரிக்கிறது. பொங்கலைக் குறிக்கும் வித்தியாசமான! புதுமையான ஓவியம். ஓவியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஜீவநதியின் பணி பாரட்டுக்குரியது.
ஆசிரியரின் புதுவருட சங்கற்பம் காலத்தின் தேவையானது. அதிகமான நிகழ்ச்சிகள் குறிப்பட்ட நேரத்தில் ஆரம்பமாவதில்லை. அதிதிகள், பிரதிநிதிகள் வந்தாலும் மக்கள் வருவதில்லை. பார்வையாளர்கள் வந்தால் சிலவேளை பிரதம விருந்தினர்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. நேரத்துக்கு முக்கியத்துமளித்து உரிய காலவரையறைக்குள் நிகழ்வுகளை நடத்தி முடிப்போம் என்ற ஆசிரிய தலையங்கத்தின் உறுதிமொழியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை என்ற கட்டுரையை பேராசிரியை கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் எழுதியுள்ளார். கவிதை எழுதுபவர்களும், கவிதையைப் பற்றி அறிய விரும்புபவர்களும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய கட்டுரை.
கம்பன், பாரதி, கா. சிவத்தம்பி, க.கைலாசபதி ஆகியோரின் பார்வையில் கவிதை பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளார். இக் கட்டுரை அடுத்த மாதமும் தொடரும். தமிழ் திரைப் பாடலாசிரியர்கள் வரிசையில் கவியரசு கண்ணதாசன் பற்றி மா.செல்வதாஸும், இலங்கையில் உருவகக் கதைத்துறையில் படைப்பாளி முத்துமீரானின் பங்களிப்புப் பற்றிப் பேராசிரியர் ஹ.மு.நந்தர் சா ஆகியோரும் எழுதியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐரோப்பிய திரைப்பட விழா 2013 பற்றிய விளக்கமான கட்டுரையை அ.யோகராசா எழுதியுள்ளார். முருகபூபதியின் சொல்லவேண்டிய கதைகள் சுவையாக உள்ளது. ஆர்வத்துடன் சேகரித்த புத்தகங்களையும், அன்பளிப்பாகக் கிடைத்த புத்தகங்களையும் என்ன செய்வதென்று தெரியாது பலர் திக்குமுக்காடுகின்றனர். ஒருசிலர் புத்தகங்களை உதாசீனம் செய்கின்றனர்.
சார்ல்ஸ் பு கோவ்ஸ்கி எனும் கவிஞரைப் பற்றி கெக்கிறாவ ஸீலைஹா சிறு குறிப்புக் கொடுத்துள்ளார். விவாத மேடையில் கி.நடராஜாவின் கருத்துகள் தெளிவாக உள்ளன.
முருகேசு ரவீந்திரன், இ.சு.முரளிதரன், மூதூர் மொகமட் ராபி, ச.முருகாந்தன் ஆகியோரின் கதைகளும், த.அஜந்தகுமார் கவிஞர் ஏ.இக்பால், கு.றஜீபன், வல்வை ச.கமலகாந்தன், வேரகேணியன், ஆனந்தி செல்லக்குட்டி கணேசன், வனஜா நடராஜா, பாலமுனை பாறூக், இப்னு அ ஸுமத், க.முரளிதரன், எஸ்.முத்து மீரான் ஆகியோரின் கவிதைகளும் இம்மாத ஜீவநதியை அலங்கரிக்கின்றன.
ஊர்மிளா
சுடர் ஒளி 19/01/14
4 comments:
சென்னையில் ஜீவநதிகள் ஓடுவதில்லை. 'ஜீவநதி'யாவது கிடைக்குமா? தெரிந்தால் சொல்லுங்கள்.
வணக்கம்
சிறப்பான முயற்சி.... தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Chellappa Yagyaswamy .. ஜீவநதிகளை ஜீவன் இல்லாமல் ஆக்கிவிட்டோம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
Post a Comment