Thursday, January 16, 2014

பிறேஸிலில் புதிய தொழில் நுட்பம்

பிறேஸிலில் நடைபெற உள்ள உலகக்க்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உலகக்கிண்ண உதைபந்தாட்ட சங்கத்தலைவர் செப்  பிளட்டர்  தெரிவித் துள்ளார்.
பரீகிக் அடிக்கும் இடத்தை காட்டுவதற்காக வாணிஸ்  ஸ்பிரே உபயோகப்படுத்தப்பட உள்ளது. பரீகிக் வழங்கப்படும் சந்தர்ப்பத்தின் போது பந்தை அடிக்கும் வீரர்கள்  தமக்கு வசதியான இடத்தில் பந்தை வைப்பார்கள்.  பிரீகிக்சை தடுப்பதற்காக வரிசையாக நிற்கும் வீரர்கள் விதியை மீறி திடீரென முன்னேறுவார்கள். இவற்றைத் தடுப்பதற்காகவே வாணிஸ்   ஸ்பிறே அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பந்து இருக்க வேண்டிய இடத்தில் மத்தியஸ்தர் வாணிஸ் ஸ்பிரேயை உபயோகப்படுத்துவார். பரீகிக் கை  தடுக்கும் வீரர்கள் நிற்க வேண்டிய இடத்திலும் மத்தியஸ்தர் வானில் ஸ்பிரேயை  பரயோகிப்பார்.ஒரு நிமிடத்தில் இந்த ஸ்பிரே தானாகவே அழிந்து விடும்.
தென் ஆபரிக்கா, அமெரிக்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் இது பரீட்சார்தத்மாக பாவிக்கப்பட்டது.கடந்த ஆண்டு துருக்கியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்  இந்தஸ்பிரே பாவிக்கப்பட்டது.
 கோல்லைன் தொழில்நுட்ப முறையும் பிரேஸிலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  கோல்லைனை பந்து கடந்ததா? இல்லையா? என்பதை உடனடி யாக அறிய முடியாத நிலை உள்ளது.
2010 ஆம் ஆண்டு  தென்னாபரிக்காவில் நடை பெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போடியின்  இரண்டாவது சுற்றில் இங்கிலாந்து ஜேர்மன் ஆகிய வற்றுக்கிடையேயான போட்டியில் இந்த சர்ச்சை  பெரிதானது.
இங்கிலாந்து மத்தியகள வீரர் பிராங்கிம் பாட் அடித்த பந்து கோல் எல்லைக் கோட்டைத் தாண்டிய பின்னரே தடுக்கப்பட்டது.கோல் லைன் ரெக்னோலஜி மூலம் இப்படிப்பட்ட சர்ச்சை ஏற்பட வாய்ப்பு இல்லை.பந்து கோல் எல்லையைத் தாண்டியதும் அது கோல் என்பதை மத்தியஸ்தர் அறியக்கூடிய வகையில் தொழில் நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.
 ரமணி 
சுடர் ஒளி   12/01/14

No comments: