ஆர்ஜென்ரீனா,
போலந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் 16வது
சுற்றுகு முன்னேறின. மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா,
டென்மார்க் ஆகியன வெளியேறுகின்றன.
அவுஸ்திரேலியா
2006-க்குப் பிறகு முதல் முறையாக
நாக் அவுட்டை எட்டியுள்ளது. அவுஸ்திரேலியா
1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை
தோற்கடித்து போட்டியினடுத்த சுற்றுக்கு முன்னேறியது. சர்ச்சைக்குரிய பெனால்டி அர்ஜென்ரீனாவுக்குக் கிடைத்தபோது, மைதானத்தில் இருந்த 88 ஆயிரம் ஜோடி
கண்களும் கோலை எதிர்பார்த்தபோது போலந்து
கோல்கீப்பர் அதை தடுத்தார்.
1971-க்குப் பிறகு
துனிசியாவிடம் பிரான்ஸ் தோல்வியடைந்தது.பிரான்சில் பிறந்த வஹ்பி கஸ்ரி, 58வது
நிமிடத்தில் பாக்ஸில் ட்ரிப்ளிங் செய்து, பேக்-அப்
கோல்கீப்பர் ஸ்டீவ் மன்டாண்டாவைக் கடந்த
பந்தை வலைக்குள் தள்ளினார்.கோப்பை போட்டி. துனிசியாவின்
வெற்றியானது உலகக் கிண்ணப் போட்டியில் பிரான்ஸின்
6-வது வெற்றி தொடர் முடிவுக்கு
வந்தது.
கடந்த
ஏழு உலகக் கிண்ணப் போட்டிகளில் மெக்சிகோ
16-வது சுற்றுக்கு முன்னேறியது.
பிரான்ஸ்
மற்றும் போலந்து அணிகள் மோதும்
ஆட்டம் டிசம்பர் 4ஆம் திகதி
அல் துமாமா மைதானத்தில் நடைபெறுகிறது.
டிசம்பர் 3ஆம் திகதி அல் ரய்யான் மைதானத்தில் ஆர்ஜென்ரீனா, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டி நடைபெறும் .
No comments:
Post a Comment