Sunday, January 1, 2023

அருங்காட்சியகமாகிறது மெஸ்சியின் அறை


கட்டாரில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில்  விளையாடிய  ஆர்ஜென்ரீன அணி பல்கலைக் கழகம்  ஒன்ரில் தங்கி இருந்தது. அங்கு  மெஸ்சி தங்கி  இருந்த   B201 அறை  அருங்காட்சியகமாக  மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அருங்காட்சியகம் அதே வளாகத்தில் செயல்படுமா அல்லது வளாகத்தில் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.

கட்டார் பல்கலைக்கழகம் ஆர்ஜென்ரீன‌ தேசிய அணி தங்கியிருந்த அறைகளின் புகைப்படங்களை வரிசையாக வெளியிட்டதுடன் மெஸ்ஸி ப‌யன்படுத்திய அறை B201 அருங்காட்சியகமாக மாறும் என்று கடைசி இடுகையில் அறிவித்தது.

மெஸ்ஸி தலைமையிலான குழு 5-நட்சத்திர சொகுசு ஹோட்டல்களுக்குப் பதிலாக விரிவான பல்கலைக்கழக வளாகத்தில் தங்க முடிவு செய்தது. ஆர்ஜென்ரீனாவில் இருந்தூணவுகள் கட்டாருகுச் சென்றது  ஆர்ர்ஜென்ரீனாவில் எப்படி சமைக்கப்படுகிறதோ, அது போலவே சமைக்கப்பட்டதை உறுதிசெய்ய ஒரு சமையல்காரரும் இருந்தார்.

No comments: