Saturday, May 25, 2024

ஐபிஎல் 24 சாதனைத் துளிகள்


 இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல்   இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது.    அதிரடியான துடுப்பாட்டம், அட்டகாசமான பந்துவீச்சு, பிரமாண்டமான சேஸிங் , கடைசி பந்துவரை முடிவை கணிக்க முடியாத சூழல் என, பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் லீக் சுற்று நடந்து முடிந்துள்ளது.

70 லீக் போட்டிகளின் முடிவில் இதுவரை துடுப்பாட்டம், பந்துவீச்சு, அணிகள் , வீரர்கள் படைத்த முக்கிய சாதனைகள் 

அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்கள்

1. விராட் கோலி - 708  ஓட்டங்கள்

2. ருதுராஜ் கெய்க்வாட் - 583 ஓட்டங்கள்

3. டிராவிஸ் ஹெட் - 533 ஓட்டங்கள்

4. ரியான் பிராக் - 531 ஓட்டங்கள்

5. சாய் சுதர்ஷன் - 527 ஓட்டங்கள்

அதிக பவுண்டரி அடித்த வீரர் - டிராவிஸ் ஹெட் - 61 பவுண்டரிகள்

அதிக சிக்சர்களை விளாசிய வீரர் - அபிஷேக் சர்மா - 41 சிக்சர்கள்

அதிக அரைசதங்களை விளாசிய வீரர் - ரஜத் பட்டிதார் - 3 அரைசதங்கள்

அதிக சதங்களை வீரர் - ஜோஸ் பட்லர் - 2

அதிவேகமான அரைசதம் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் - 15 பந்துகளில்

அதிவேகமான சதம் - டிராவிஸ் ஹெட் - 39 பந்துகளில்

அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் - 124* ஓட்டங்கள்

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்

1. ஹர்ஷல் படேல் - 24 விக்கெட்டுகள்

2. ஜஸ்பிரித் பும்ரா - 20 விக்கெட்டுகள்

3. அர்ஷ்தீப் சிங் - 19 விக்கெட்டுகள்

4. வருண் சக்ரவர்த்தி - 18 விக்கெட்டுகள்

5. துஷார் தேஷ்பாண்டே - 17 விக்கெட்டுகள்

அதிகப்படியான மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர் - புவனேஷ்வர் குமார் - 2

அதிகப்படியான டொட் பால்களை வீசிய வீரர் - ஜஸ்பிரித் பும்ரா - 149

10 போட்டிகளுக்கு மேல் பந்துவீசி சிறந்த எகானமி - ஜஸ்பிரித் பும்ரா - 6.48

ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சு - சந்தீப் சர்மா - 18/5 :

பெங்களூர் அணிக்கு எதிராக ஐதராபாத் குவித்த 287 ஓட்டங்கள்  ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக உருவெடுத்துள்ளது.

கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ஓட்டங்கள்  என்ற இலக்கை, பஞ்சாப் அணி சேஸ் செய்தது ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச சேஸ் ஆகும்.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 166ஓட்டங்களை வெறும் 9.4 ஓவர்களில் எட்டி, ஐபிஎல் வரலாற்றில் 150+ ஓட்டங்களை மிக வேகமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் அணி படைத்தது.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த, தொடக்க வீரர்களாக களமிறங்கி இருவரும் சதமடித்த முதல் இந்திய வீரர்கள் என்ற சாதனையை சுப்மன் கில் , சாய் சுதர்ஷன் ஆகியோர் படைத்தனர்.

அதிகப்படியான 200+ ஓட்டங்கள்  எடுத்த தொடராக நடப்பாண்டு ஐபிஎல் மாறியுள்ளது.

அதிகப்படியான சிக்சர்களை விளாசிய அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 160

No comments: