சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மனநல பயிற்சியாளராக கடந்த சில ஆண்டுகளாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்த டேவிட் ரெய்ட்-ஐ பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பை வெற்றியில் டேவிட் ரெய்ட் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான்
கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
கேரி இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது தான், இந்தியா 2011 உலகக் கிண்ணத்தை
வென்றது. கேரி கிர்ஸ்டன் உலகக்கிண்ணத்தை வெல்ல
வைப்பார் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் அணி அவரது உலகக்கிண்ணத் தொடரை சந்திக்க உள்ளது.
சில உதவி பயிற்சியாளர்களை நியமிக்குமாறு கேரி கிர்ஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு
பரிந்துரை செய்துள்ளார். அதில் ஒருவர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மனநல பயிற்சியாளராக
செயல்பட்டு வரும் டேவிட் ரெய்ட். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமில்லாமல் மெல்போன்
ஸ்டார்ஸ் என்ற அவுஸ்திரேலிய ரி20 அணி மற்றும் எஸ்சென்டன் கால்பந்து அணி ஆகியவற்றின்
மனநல பயிற்சியாளராகவும் இருக்கிறார். அது மட்டுமின்றி ஒலிம்பிக் வீரர்களுக்கும் இவர்
மனநல பயிற்சியாளராக செயல்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் டேவிட் ரெய்ட்டை பாகிஸ்தான்
கிரிக்கெட் அமைப்பு தங்கள் அணியின் மனநல பயிற்சியாளராக நியமித்து இருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமாக செயல்பட்டு வரும் நிலையில் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், டேவிட் ரெய்ட் போன்ற அனுபவ மனநல பயிற்சியாளர் தேவை எனக் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment