Monday, May 6, 2024

ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது உஸ்பெகிஸ்தான்.

23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியதன் மூலம் உஸ்பெகிஸ்தான் பல ஆண்டுகளாக   தவறவிட்ட ஆண்களுக்கான ஒலிம்பிக் கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.

 டோஹாவில் திங்கள்கிழமை நடந்த அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான்  அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை  வீழ்த்தியதன் மூலம்  ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது.

 ஈராக்கை 2-0 என்ற கோல் கணக்கில்   அரை  இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் ஜப்பான் தொடர்ந்து எட்டாவது ஒலிம்பிக் போட்டியை உறுதி செய்தது.

முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் பரிஸ் விளையாட்டுப் போட்டிக்கு தானாக தகுதி பெறும், மீதமுள்ள இடத்தை தீர்மானிக்க ஈராக் , இந்தோனேஷியா ஆகியன விளையாட உள்ளன.

உஸ்பெகிஸ்தான் துரதிர்ஷ்டவசமாக   2018 ,2022 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் அல்லாத ஆண்டுகளில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசியப் போட்டியை வென்றது. 2020 ஆம் ஆண்டில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ப்ளேஆஃப் போட்டியில் தோல்வியடைந்த பின்னர், டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் அணி நான்காவது இடத்தைப் பிடித்தது.  

No comments: