மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஹைதராபாத்
அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 7 விக்கெற்களினால் மும்பை
வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 173 ஓட்டங்கள்
எடுத்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்
ஹெட் 48 ஓட்டங்கள் அடித்தார். கப்டன்
பட் கம்மின்ஸ் 17 பந்துகளில் 35 ஓட்டங்கள்
அடித்தார். பியு சவ்லா, பண்டையா ஆகியோஎ தலா 3 விக்கெற்களை வீழ்த்தினர்.
174 என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடிய நிலையில்
இசான் கிஷான் 9, ரோஹித் சர்மா 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 4.1 ஓவர்களில் 3 விக்கெற்களை
இழந்த மும்பை 31 ஓட்டங்கள் எடுத்துத் தடுமாறியது. சூரிய குமார் யாதவ்,
திலக் வர்மா ஜோடி மும்பையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. ஆகிய இருவரும் சொற்ப
ரன்களில் அவுட் ஆன நிலையில் சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி 102 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல்
இருந்தார். திலக் வர்மா ஆட்டமிழகாமல்
37 ஓட்டங்கள் எடுத்தார். 17.2 மூன்று விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள்
எடுத்த மும்பை அணி வெற்றி பெற்றது.
மும்பை அணிக்காக இரண்டு சதங்கள் அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார் சூரியகுமார். இந்த வெற்றியால் லீக் சுற்றுடன் அதிகாரபூர்வமாக வெளியேறுவதை மும்பை சில நாட்கள் தள்ளி போட்டுள்ளது. மறுபுறம் ஹைதராபாத் 5வது தோல்வியை சந்தித்ததால் சென்னை புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
No comments:
Post a Comment